அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 17 ஜூன், 2014

சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியில் பற்சிகிச்சை நிலையத் திறப்பு விழா. -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியில்
பற்சிகிச்சை நிலையத் திறப்பு விழா.
             -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியில் புதிதாய் அமைக்கப்பட்ட பற்சிகிச்சை நிலையத் திறப்பு விழா நேற்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

 கல்லூரி அதிபர் திருமதி ஹபீலா சலீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம் , சமூகசேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பற்சிகிச்சை நிலையத்தைத் திறந்து வைத்தார்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அத்தியேட்சகர் எம்.எஸ்.இப்றாலெவ்வை, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ஏ.எல்.சஃபீர் யூ.எல்.பஸீர், ஏ.எம்.தபீக், டொக்டர் ஐ.அப்துல் மஜீட் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், கல்விமான்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மன்சூர் இங்கு உரை நிகழ்த்தகையில்;;:- 'கிழக்கு மாகாணத்திலுள்ள பொருத்தமான பாடசாலைகள் பலவற்றில் இது போன்ற பல பற்சிகிச்சை நிலையங்களைத் திறப்பதற்கான திட்டங்களை வகுத்து, செயற்படுத்தி  வருகிறோம். விரைவில் இதன் பயனைப் பல பாடசாலை மாணவர்கள் அடைவர்' எனத் தெரிவித்தார்.


திங்கள், 19 மே, 2014

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியில்; சித்திரக் கண்காட்சிக் கூடத் திறப்பு விழா.




( ஏ.எல்.ஏ.றபீக்பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியின் கவின் கலைப் பிரிவினர்; ஏற்பாடு செய்த சித்திரக் கண்காட்சிக் கூடத் திறப்பு விழா இன்று கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.


கல்லூரி அதிபர் ஐ.அப்துல் லத்தீப் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சித்திரக் கண்காட்சிக் கூடத்தைத் திறந்து வைத்தார்.

கல்முனை வலயக் கல்வி அலுவலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஜுனைட் , கல்முனை மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.ரி.நௌபல் அலி உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, சிறப்பித்தனர்.

பாடசாலை மாணவர்களும், வெளியிலுள்ளோரும் பார்ப்பதற்கான தனித்தனி ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் லத்தீப் தெரிவித்தார்.

சனி, 3 மே, 2014

இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் மேதினக் கூட்டம். -மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் பங்கேற்பு-

இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் மேதினக் கூட்டம்.
      -மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் பங்கேற்பு-
             (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் மேதினக் கூட்டம் இன்று (01) நிந்தவூர் அமீர் மேர்சா பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

சங்கத்தின் தலைவரும், நிந்தவூர் பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவருமான வை.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
கலாநிதி.எம்.இராஜேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் சிறி லங்கா தமிழ் மீடியா அலாயன்ஸ் உதவித் தலைவர் எஸ்.பேரின்பராசா, முன்னாள் அதிபர்களான  எம்.எம்.றகீம், வீ.ஜெகநாதன், நிந்தவூர் பிரதேச சபைச் செயலாளர் எம்.ஏ.ஜஃபர், சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.இஸ்மாயில், சங்கத்தின் செயலாளர் கே.நடராஜா, ஊடகவியலாளர் ஏ.புஹாது, கிராம சேவகர்கள், சமூர்தித் உத்தியோகத்தர்கள், கல்விமான்கள், கலைஞர்கள், பாட்டாளி மக்கள் எனப் பலரும் கலந்து  கொண்டனர்.

சம்மாந்துறை அல்-உஸ்வா நனசல அறிவகத்திற்கு கணனிகள் வழங்கும் நிகழ்வு. -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-


சம்மாந்துறை
அல்-உஸ்வா நனசல அறிவகத்திற்கு கணனிகள் வழங்கும் நிகழ்வு.
              -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
              (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
மாகாண அமைச்சர் மன்சூரின் நிதிஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட கணனிகளும், அது தொடர்பான உபகரணங்களும் சம்மாந்துறை அல்-உஸ்வா நனசல அறிவகத்திற்கு வழங்கும் நிகழ்வு இன்று( 28) அல்-உஸ்வா பெண்கள் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.

அல்-உஸ்வா நனசல கணனிப் பயிற்சி நிலையப் பணிப்பாளர் ஐ.எல்.எம்.முஸ்தபா மௌலவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக சேவைகள்,தொழிற் பயிற்சிக் கல்வியமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, கணனிகளையும், உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் உஸ்வா நிறுவனத் தலைவர் யூ.எல்.ஏ.றசூல், அமைச்சரின் பொது மக்கள் தொடர்பதிகாரி யூ.எல்.எம்.பஸீர் , கணனிப் பயிற்சி நிலைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறுவர் நிகழ்ச்சிகள் பலவும் இடம் பெற்றன.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

நிந்தவூர் பிரதேச சபையின் அவசர கவனத்திற்கு...!

நிந்தவூர் பிரதேச சபையின் அவசர கவனத்திற்கு...! 
சுலைமான் றாபி

சமூகத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்கள் உள்ளன. அந்தப் பொறுப்புக்களை அவரவர்கள் செவ்வனே நிறைவேற்றும் போதுதான் அல்லல்படும் மக்களின் அவலங்களைக் குறைக்க முடியும். அந்த வகையில் நிந்தவூர் இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் காணப்படும் ஜேர்மன் நட்புறவு பாடசாலைக்கு முன்னாள் அமைந்துள்ள அரசடித் தோட்டத்தையும் , அட்டப்பள்ளத்தையும் இணைக்கும் பாலமாகும். இந்த பாலம் சுனாமிக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்பட்டாலும் தற்போது போதிய பாதுகாப்பு வசதியின்றி அது காணப்படுகிறது. இதனால் அன்றாடம் பயணம் செய்யும் பிரயாணிகள் மனப்பயங்களுடன் பயணிப்பதனை வெகுவாக அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் இந்த பாலத்தினூடாக பயணிக்கும் துவிச்சக்கர வண்டி, மோட்டார்  சைக்கிள், மோட்டார் வாகனம் மற்றும் கனரக வாகனங்களை தங்கள் உயிர்களை கேள்விக்குறியாக்கிய நிலைகளிலே இந்த பாலத்தினூடாக பயணிக்கின்றனர். 

மேலும் அதே போன்று 08அடி தாழ்வாக காணப்படும் இந்த பாலத்தின் கீழ்பகுதியூடாக வெள்ள நேரங்களில் அதிகமான நீர்கள் கடலுக்குச்செல்கின்றனது. மேலும் இந்தப்பாலத்தின் அருகில் தேசிய நீர்வழங்கல் வாடிகாலமைப்புச்சபையின் நீர்க்குழாய்களும்   செல்கின்றன. எனவே, இவை அனைத்திற்கும் தேவையான (Hand Rails மற்றும் Up Rights ) போன்றவைகள் இல்லாமல் உயிர்களுக்கும், வாகனங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது. மேலும் இந்த வீதியினூடாகவும், பாலத்தினூடாகவும் இரவுவேளைகளில் பயணிப்பதற்கு மின்சார வசதியின்றும்  இதன் அவல நிலை காணப்படுகிறது. 

சனி, 19 ஏப்ரல், 2014

கல்முனைப் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு அன்பியுலன்ஸ் வண்டிகள் உட்பட ரூபாய் 2 கோடி பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு. -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

கல்முனைப் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு
    அன்பியுலன்ஸ் வண்டிகள் உட்பட ரூபாய் 2 கோடி                                              பெறுமதியான உபகரணங்கள் கையளிப்பு.
                -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
             ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைப் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு ஒரு கோடியே 60 இலட்சம் பெறுமதியான அன்பியுலன்ஸ் வண்டிகளும், 45 இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் வழங்கும் நிகழ்வு இன்று கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்றது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

வியாழன், 10 ஏப்ரல், 2014

வீரமுனை கிராம மக்களுக்கான ஒன்று கூடலும், நடமாடும் சேவையும். -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-


                 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப் பொருளில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும்' நேற்று வீரமுனை, சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதாரம்,சுதேச வைத்தியம், மற்றும்  சமூகசேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

உடங்கா கிராம மக்களுக்கான ஒன்று கூடலும், நடமாடும் சேவையும். -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

             ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட உடங்கா கிராம மக்களின் கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும், உபகாரங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்று உடங்கா கிராமத்தில் இடம் பெற்றது.

உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதாரம்,சுதேச வைத்தியம், மற்றும்  சமூகசேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும்; பிரதேச சபை உதவித் தவிசாளர் ஏ.கே.எம்.றகுமான், பிரதேச சபை உறுப்பினர் ஏ.றியால் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி.ஏ.எல்.சஃபீர், பொது மக்கள் தொடர்பு அதிகாரி யூ.எல்.எம்.பஸீர்,இணைப்புச் செயலாளர் ஏ.எம்.தபீக், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்ஹம்சார், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன், கணக்காளர் ஏ.எல்.மஃறூப் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிந்தவூர் பிரதேச மக்களுக்கான ஒன்று கூடலும், நடமாடும் சேவையும். -பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் பிரதம அதிதி-

             ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேச மக்களின் 'கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும், உபகாரங்கள் வழங்கும் நிகழ்வும்' இன்று நிந்தவூர் அறபா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யூ. அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும்; பிரதேச சபை உதவித் தவிசாளர்  ஆர்.திரவியராஜ், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.சுல்பிகார், மேலதிக மாவட்டப் பதிவாளர் இஸட்.நசுறுதீன், தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் எம்.அச்சி முகம்மட், நிந்தவூர் ஆயுர்வேத மாவட்ட வைத்திய அதிகாரி கே.எல்.எம்.நக்பர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்பிரதேச மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இனங்காணப்பட்டு, உடனுக்குடன் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதே வேளை தழிழ் சமூர்த்திப் பயனாளிகளுக்கு சித்திரைப் புத்தாண்டுச் செலவுக்கான நன்கொடைப்பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

சனி, 5 ஏப்ரல், 2014

சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பும், சுயதொழில் ஊக்குவிப்பு நன்கொடை வழங்கலும்.

                 -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
              ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள சிரேஷ்ட பிரஜைகளைக் கௌரவிப்பதோடு, சமூர்த்திப் பயனாளிகளுக்கு சுயதொழிலுக்கான மாணியம் வழங்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை அல்-மர்ஜான் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூகசேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான யூ.எல்.எம்.பஸீர், ஏ.எம்.தபீக், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்ஹம்சார், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன், கணக்காளர் ஏ.எல்.மஃறூப் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திங்கள், 31 மார்ச், 2014

நிந்தவூர் கடற்கரைப்பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இறந்த நிலையில் மீட்பு

ஏ.புவாது

நிந்தவூர் - 09 கடற்கரைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவர் நிந்தவூர் 11 இமாம் கஸ்ஸாலி வீதியைச்சேர்ந்த செய்யது இப்றாஹீம் முஹம்மது பாஹீர் என சம்மாந்தறைப் பொலீசாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவருக்கு 2 திருமணங்கள் என்றும் முந்தய திருமணத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக அக்கரைப்பற்று குவாசி நீதிமன்றத்திற்கு சென்றுவந்த நிலையில் நஞ்சருந்தி மரணித்துள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலில் சர்வமதத் தலைவர்களுக்கான ஒன்றுகூடல்


ஏ.புவாது 

நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயலில் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேர்னல் பிரிகேடியர் எச்.எம். பீரிஸ் அவர்கள்  கலந்துகொண்ட சர்வமத தலைவர்களுக்கான ஒன்றுகூடல் ஒன்று கடந்த சனிக்கிழமை நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இதில் அம்பாறை மாவட்ட சர்வ மத நல்லிணக்கம் தொடர்பாகவும்  ஆராயப்பட்டது.
அத்தோடு திருக்கோயில் சங்கமன்கண்டிய கோயில் மலைப் பிரதேசத்திலுள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கு மக்கள் வழிபடுவதற்கான தடையை ஆராய்ந்து அதற்கான உரிய நடவடிக்கைகளை விரையில் மேற்கொள்வதாக கூறினார்.

அதன்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள பல சமயப் பெரியார்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

புதன், 26 மார்ச், 2014

அம்பாரைப் பிரதேச வைத்தியசாலைகளுக்குப் புதிய அம்பியுலன்ஸ் வண்டிகள் கையளிப்பு. -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

           
             ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரைப் பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய அம்பியுலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய வளாகத்தில் இடம் பெற்றது.
அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். சேனக தலாகல தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம்,மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
ஜப்பான் அரசாங்கத்தின் ஜெய்கா திட்டநிதி உதவியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்ட புதிய அன்பியுலன்ஸ் வண்டிகளில் ஒரு தொகுதியினையே இன்று அமைச்சர் மன்சூர் தெஹியத்தகண்டிய போதனா வைத்தியசாலை, மகாஓயா போதனா வைத்தியசாலை, பதியத்தலாவ மாவட்ட வைத்தியசாலை போன்றவற்றிற்கு வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் அம்பாரைப் பிராந்திய திட்டமிடல் சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.எம்.திலக் ராஜபக்ஷ, பதியத்தலாவ மாவட்ட வைத்தியதிகாரி பி.கே.ரத்னசிறி, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி.ஏ.எல்.சஃபீர், பொது மக்கள் தொடர்பு அதிகாரி யூ.எல்.எம்.பஸீர் உள்ளிட்ட வைத்தியர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உயரதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

சனி, 22 மார்ச், 2014

100 கோடியிலான நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல் இன்று மக்களிடம் கையளிப்பு. சுமார் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் பாரிய ஏற்பாடுகள்.

100 கோடியிலான நிந்தவூர் ஜும்ஆப்பள்ளிவாசல் இன்று மக்களிடம் கையளிப்பு.
சுமார் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் பாரிய ஏற்பாடுகள்.
         (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
நீண்ட காலமாகப் பணரமைக்கப்பட்டு வந்த நிந்தவூர் ஜும்ஆப் பெரிய பள்ளி வாசல் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

பராக்கிரம பாகு மன்னன் காலத்தில் இலுக்கு ஓலையினால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வரலாற்றையுடைய பழம் பெருமை வாய்ந்த இப்பள்ளிவாசல் இன்று முழுக்க முழுக்க நிந்தவூர் மக்களின் பரோபகார சிந்தனையின் மூலமும், வள்ளல் குணத்தினாலும் சுமார் ருபாய் 100 கோடி செலவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

இதன் நிர்மான வேலைகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இன்று(22) இப்பள்ளிவாசலை மக்களிடம் கையளிக்கவுள்ளதாக பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன் தெரிவித்தார்.

இதேவேளை 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிந்தவூரில் இடம்பெற்றது போல் பாரிய கந்தூரி (அன்னதான நிகழ்வு) வும் இடம்பெறுவதற்கான பாரிய வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இன்று நிந்தவூரிலுள்ள 35ஆயிரம் பேருக்கும், வெளி ஊர்களிலுள்ள 15ஆயிரம் பேருக்குமாக மொத்தம் 50 ஆயிரம் பேருக்கும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம் பெற்றுக் கொண்டிக்கின்றன.

பள்ளிவாசலின் அழகையும், பிரமாண்டமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கந்தூரி நிகழ்வின் காட்சிகளையும் ஊரிலுள்ள பெண்களும், பெரியவர்களும் சாரி சாரியாக வந்து பார்வையிடுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.









செவ்வாய், 18 மார்ச், 2014

நிந்தவூரில்; தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள்.

நிந்தவூரில்;
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள்.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு நிந்தவூர்ப் பிரதேசத்திலும் பல்வேறு நிகழ்சிசிகள் ஒழுங்கு செய்து நடைமுறைப்படுத்தப்பட்டன.
நிந்தவூர்ப் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி.தஸ்லிமா மஜீட் தலைமயிலான குழுவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்> வைத்தியசாலைப் பணியாளர்கள்> பாடசாலை ஊழியர்கள்> பாடசாலை மாணவர்கள்> அதிபர்> ஆசிரியர்கள் பிரதேச சபை ஊழியர்கள், பிரதேச செயலகப் பணியாளர்கள், பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டு>பங்களிப்புச் செய்தனர்.
அரச>தனியார்> பொது நிறுவனங்களைத் துப்பரவு செய்தல்> டெங்கு ஒழிப்புக்கான நடவடிக்கைகள்> தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான விழிப்பூட்டல் > போதைப் பொருள் ஒழிப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இக்குழுவினரால்

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியில் கணனிப் பயிற்சியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியில்
கணனிப் பயிற்சியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
                 -மாகாணக் கல்விப் பணிப்பாளர் பிரதம அதிதி-
            (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரி;; கணனிப் பயிற்சி நிலையத்தில் ஒரு வருடப் பயிற்சி நெறியைப் பூரணப்படுத்திய மாணவர்களுக்கு விசேட சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (17) கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.

கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், கிழக்கு மாகாண நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர்  கே.கலாநிதி , நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் , கல்முனை வலய நிருவாக உத்தியோகத்தர் ஏ.ஜுனைட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிஸாம் ' இன்று உலகம் எதிர் கொள்ளும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியதாகத் திகழும் கணனித் தொழில் நுட்பத்தை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியமாகும்' எனத் தெரிவித்தார்.

நிந்தவூர் அல்-பதுரியா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள். -எம்.பிக்களான ஹசன் அலி, பைசால் காசீம் அதிதிகள்-


நிந்தவூர் அல்-பதுரியா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள்.
           -எம்.பிக்களான ஹசன் அலி, பைசால் காசீம் அதிதிகள்-
              ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-பதுரியா வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக இல்ல விளையாட்டுப் போட்டியொன்று நேற்று இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர்  ஏ.எம்.நசீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹசன் அலி, எம்.சீ.பைசால் காசீம் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகம்வுகளில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம், தென்கிழக்குப் பல்கலைக் கழக கலை, கலாச்சாரப் பிரிவின் பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார், சட்டத்தரணி ஏ.எம்.நசீல், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் எம்.எல்.றபீக் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இப்பிரதேசத்தில் இது போன்றதொரு விளையாட்டு விழா இதற்கு முன்னர் இடம் பெறாததால், இப்பிரதேச பொது மக்கள், பெற்றோர், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பாடசாலை மாணவர்கள்,  ஆசிரியர்கள், அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவர்களும், ஆசிரியர்களும் 'ஸபா', 'மர்வா' என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
இறுதியில் 'மர்வா' இல்லம் முதலிடத்தைப் பெற்றது. வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பரிசுகள், சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டன.

சனி, 15 மார்ச், 2014

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டம்

அம்பாறை  மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டம்
(சுலைமான் றாபி)

பொருளாதார அபிவிருத்தி செயத்திட்டங்களை இலக்காகக் கொண்டு  அம்பாறை மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக அறிவுறுத்தும் கூட்டமொன்று இன்று 2014.03.11அம்பாறை எச்.எம். வீரசிங்க மைதானத்தில் டைபெற்றது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் 2014ம் வருடத்திற்காக அம்பாறை  மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக அறிவுறுத்துவதற்காகவே  இடம்பெற்றது. 

இந்த கூட்டத்தில் அமைச்சர்களான பீ.தயாரட்ன, ஏ.எல்.எம்.அதாவுல்லா, பிரதியமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம், ஷிரியானி விஜயவிக்ரம, பீ.எச்.பியசேன, எம்.ரீ.ஹஸனலி, கிழக்கு மாகாண ஆளுநர் ரியர்அட்மிரல் மொகான்விஜயவிக்ரம, அம்பாறை  மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அல்விஸ், மாகாண சபை அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் உட்பட பலரும்
கலந்து கொண்டனர்.

செவ்வாய், 11 மார்ச், 2014

நிந்தவூர் பிரதேச ஓய்வூதியர்களின் வருடாந்த ஒன்று கூடலும், சர்வதேச மகளீர் தினமும்.

நிந்தவூர் பிரதேச
ஓய்வூதியர்களின் வருடாந்த ஒன்று கூடலும், சர்வதேச மகளீர் தினமும்.
            (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)

நிந்தவூர் பிரதேச அரச சேவை ஓய்வூதியர்களின் வருடாந்த ஒன்று கூடலும், சர்வதேச மகளீர் தினமும் நேற்று நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

நிந்தவூர் பிரதேச சங்கத் தலைவர் ஏ.எல்.எம்.பஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

முன்னாள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.இஸ்ஸதீன், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.தௌபீக், அம்பாரை மாவட்ட சங்க உபதலைவர் எஸ்.செல்லத்துரை, முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அமீன், பிரதேச செயலக கணக்காளர் ஏ.ஆர்.எம்.நிசாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

திங்கள், 10 மார்ச், 2014

சுகாதார வாரத்தை முன்னிட்டு கல்முனையில் கிழக்கு மாகாண சுகாதார முன்னோடி மாநாடு. -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-

சுகாதார வாரத்தை முன்னிட்டு
கல்முனையில் கிழக்கு மாகாண சுகாதார முன்னோடி மாநாடு.
                   -மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
               ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையற்றதும், சுகாதார சீர்கேடுகள் இல்லாததுமான அமைதியான வாழ்வைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தின் முன்னோடி மாநாடு இன்று கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்றது.
கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழில் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

புதன், 5 மார்ச், 2014

நிந்தவூரில் லங்கா விவசாயப் பேரவையின் அம்பாரை மாவட்ட மாநாடு.

நிந்தவூரில்
லங்கா விவசாயப் பேரவையின் அம்பாரை மாவட்ட மாநாடு.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
லங்கா விவசாயப் பேரவையின் அம்பாரை மாவட்ட மாநாடு இன்று நிந்தவூர் சீ.எச்.எப் றெஸ்ட்டுPறண்ட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
' பாரம்பரிய நெல் உற்பத்தியில் இரசாயனப் பாவனையைத் தவிர்த்து, நஞ்சுக் கலப்பற்ற, தூய்மையான அரிசி உற்பத்தியைப் பெருக்கி, ஆரோக்கியத்துடன் வாழ்வோம்' எனும் தொணிப் பொருளில் இம்மாநாடு இடம் பெற்றது.
அம்பாரை மாவட்டப் பேரவையின் தலைவர் எம்.ஐ.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் லங்கா விவசாயப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சோமசிறி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் மாபெரும் இரத்ததான நிகழ்வு.

நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் மாபெரும் இரத்ததான நிகழ்வு.
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் சமூக சேவைப் பிரிவினர் ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று (02) பள்ளிவாசல் வளாகத்தில் இடம் பெற்றது.
பள்ளிவாசல் தலைவர் ஐ.பி.முகையதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விரத்ததான நிகழ்விற்கு நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள், கல்முனை அஷ்றப் ஞாபகர்த்த வைத்தியசாலை ஊழியர்கள், நிந்தவூர் அமானா சனசமூக நிலையத் தொண்டர்கள் ஆகியோர் அனுசரணை வழங்கினர்.
இதில் கலந்து கொண்ட பல நூற்றுக் கணக்கான மக்களிடமிருந்து கேமிக்கப்பட்ட இரத்தப்பைகள் கல்முனை அஷ்றப் ஞாபகர்த்த வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

திங்கள், 3 மார்ச், 2014

அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 8 வது மாநாடு - 2014

பிப்ரவரி 14,15,16- 2014 தினங்களில் இந்தியாவின் கும்பகோணம் அசூர் புறவழிச்சாலையில் ஹாஜி.இ.எஸ்.எம்.பக்கீர் முஹம்மது எம்.பி வளாகத்தின் டி.எஸ்.மஹாலில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இதில் சர்வதேசத்தின் பல நாடுகளில்இருந்தும் இலக்கிய வாதிகள் கலந்துகொண்டனர்; இலங்கையில் இருந்தும் முன்நிலை இலக்கியவாதிகள் பலரும் கலந்துகொண்டதோடு அவர்களில் பலருக்கு விருதுகளும் ,பட்டங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இம் மாநாட்டை கவிக்கோ அப்துல்றகுமான் தலைமையிலான இஸ்லாமிய இலக்கிய கழகமும்,ஹிஸ்வா சமூக சேவை அமைப்பும்  இணைந்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
 
இம்மாநாட்டில் நிந்தவூர் கலை இலக்கிய பேரவையின் எஸ்முத்துமீரான் (சிரேஸ்ட சட்டத்தரணி, சிரேஸ்ட இலக்கியவாதி) தலைமையிலான கவிஞர் டொக்டர் ஜாபீர், கவிஞர் சிரேஸ்ட பொறியியலாளர் இஸ்மாயில், இலக்கியவாதி அன்வர்டீன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் விசேட பயிற்சியை முடித்துக் கொண்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.-பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதி-

            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் எதிர்கால செயற் திட்டத்திற்கு அமைய பிரதேச அபிவிருத்தி சமூக மேம்பாட்டுத் திட்டங்களை அமுல்படுத்தும் உபாயங்களுள் ஒன்றான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டங்கள் தற்போது திருப்திகரமான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இப்பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி.எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயிலின் வழிகாட்டுதலில் இவ்வளாக கலை, கலாச்சார பீடம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்திறனை ஊக்குவிக்கும் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கல்முனைக் கல்வி வலயத்தைச் சேர்ந்த பயிற்சியை முடித்துக் கொண்ட 150 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (01.03.2014) இ;ப்பல்கலைக் கழகத்தின் அரபு மொழிப் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

உலுகிலுள்ள எல்லா மக்களுக்கும் விரைவில் இலவச இண்டர்நெட் சேவை. இனி “நெட் பில்” தொல்லை இல்லை?

உலுகிலுள்ள எல்லா மக்களுக்கும் விரைவில் இலவச இண்டர்நெட் சேவை. இனிநெட் பில்தொல்லை இல்லை?
- Imran Sls -


உலுகிலுள்ள எல்லா மக்களுக்கும் விரைவில் இணையதள சேவை இலவசமாகக் கிடைக்க இருக்கிறது.
அவுட்டர் நெட் (Outer Net) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், விண்வெளியில் இருந்து சாட்டிலைட் மூலம் வை ஃபை வழியாக உலகிலுள்ள எல்லாக் கணினியிலும் ஸ்மார்ட் தொலைபேசிகளிலும்  இணையதள சேவை இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே
இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

site counter