இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை நினைவு கூரும் முகமாக இலங்கை ஜமாஅதே இஸ்லாமி நிந்தவூர் கிளையினால் நிந்தவூரில் உள்ள அனைத்து அமைப்புக்கள> நிறுவனங்கள்> கழகங்கள் மற்றும் பாடசாலைகளை ஒன்றினைத்து ஏற்பாடு செய்யப்பட்ட 'ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் சுதந்திர தினத்தை நினைவு கூருவோம்' எனும் தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயல் முற்றலிள் இருந்து ஆரம்பித்து நிந்தவூர் பிரதேச செயலகம் வரை சென்றது.
வெள்ளி, 7 பிப்ரவரி, 2014
இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நிந்தவூரில் இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டிலான சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்.
.jpg)
நிந்தவூரில் இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டிலான சுதந்திர தினக் கொண்டாட்டங்கள்.
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டிலான சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இன்று நிந்தவூரில் இடம் பெற்றது.
இலங்கை ஜமா அத்தே இஸ்லாமியின் நிந்தவூர் கிளைப் பொறுப்பாளர் அதிபர் ஏ.எல்.நிசாமுத்தீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசல் முற்றத்திலிருந்து ஆரம்பமான இவ்வூர்வலம் நிந்தவூர் பிரதான வீதி வளியாகச் சென்று நிந்தவூர் பிரதேச செயலகத்தை ஊடறுத்து வெட்டாற்றுப் பாலத்தில் முடிவடைந்தது.
பாடசாலை மாணவர்களாலும், ஜமா அத்தே இஸ்லாமி தொண்டர்களாலும் வீதிகளால் சென்ற அனைத்து வாகனங்களுக்கும் தேசியக் கொடிகள் பொருத்தப்பட்டன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)