அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 24 நவம்பர், 2013

அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்புக் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல். -கிழக்கு கட்டளைத் தளபதி லால் பெரேரா பங்கேற்பு-

அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்புக் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல்.
              -கிழக்கு கட்டளைத் தளபதி லால் பெரேரா பங்கேற்பு-
            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் பாதுகாப்புக் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் இடம் பெற்றது.
அம்பாரை மாவட்ட இராணுவப் பொறுப்பதிகாரி ஹரன் பெரேரா தலைமையில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி ஜென்ரல் லால் பெரேரா, காரைதீவு 631வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கேணல் பிரியந்த கமகே, அம்பாரை மாவட்ட இராணுவ சிவில் பொறுப்பதிகாரி மேஜர் நவரெட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அம்பாரை மாவட்ட உலமாக்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், சிவில் பாதுகாப்புக் குழுவினர் போன்றோருடன் தற்கால பாதுகாப்பு நிலவரமும், முஸ்லிம் பிரதேசங்களும் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

நிந்தவூர்ப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் பற்றி ஆராயும் உயர்மட்ட மாநாடு.


           ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர்ப் பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை ஆராய்ந்து, அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உயர்மட்ட மாநாடு இன்று நிந்தவூர்ப் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சி.பைசால் காசீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், பிரதேச சபைத் தலைவர் எம்.ஏ.எம்.தாஹீர், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.தஹாநாயக்க, காரைதீவு 631வது படைப்பிரிவின் பொறுப்பதிகாரி கேணல்.பிரியந்த கமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும் இம்மாநாட்டில் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் வை.எல்.சுலைமா லெவ்வை, பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ரி.ஜப்பார் அலி, ஏ.எம்.றியாஸ், கிராம சேவகர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரிகள், அரச உயரதிகாரிகள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு, கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.தஹாநாயக்க ' யாரோ இனந்தெரியாத சிலர் அண்மைக் காலங்களாக நிந்தவூர்ப் பிரதேசத்தில் மக்களின் அமைதியைக் குலைத்து, சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நிச்சயமாக இவர்கள் தூர இடங்களிலிருந்து வர முடியாது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். இவர்களைப் பிடிக்க பொது மக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும். பொது மக்கள் சட்டத்தைக் கையில் எடுக்க முடியாது. சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கவே பொலிசார் இருக்கின்றனர். இவ்வாறான விடயங்களில் பொலிசாரைச் சந்தேகங் கொள்ளக் கூடாது. மக்களுக்கும், பொலிசாருக்குமிடையில் நல்லுறவு பேணப்பட வேண்டும்.' எனக் கேட்டுக் கொண்டார்.











site counter