அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 6 நவம்பர், 2013

அம்பாரை மாவட்டத்திலுள்ள பல குழங்கள் மாகாண அமைச்சர் உதுமாலெவ்வையினால் புனரமைப்பு. அவற்றைநேரில் பார்வையிடுவதற்கு ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு...!

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரை மாவட்டத்திலுள்ள பல குழங்கள் கிழ
க்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி நீர்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வையின் அயராத முயற்சியினால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகிறது.
மத்திய நீர்பாசனத் திணைக்களமும், கிழக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களமும் இணைந்து அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு, வள்ளக்குண்டு வடிச்சல், இப்றாகீம் பள்ளம், முகத்துவாரம், மீனோடைக்கட்டு வாய்க்கால்களின் அபிவிருத்திப்பணிகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
'இந்த ஆற்றிற்குச் சொந்தமான எல்லைகளைச் சிலர் அடைத்து வைத்துக் கொண்டு, சொந்தம் கொண்டாடுவதால் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் சில தற்காலிகத் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும், இவர்களின் இச்செயற்பாட்டினால்  கிராமத்தின் எழில் குன்றிப்போவதோடு, பல்வேறு நீர்வள,நிலவள நன்மைகள் இல்லாமல் போய் விடுகின்றன. எனவே, இவற்றைச் செய்பவர்கள் எதிர்கால சமூகத்தின் நன்மையைக் கருத்திற் கொண்டு செயற்படவேண்டும்.' என அமைச்சர் உதுமாலெவ்வை தெரிவித்தார்.
இவ்வாறு அமைச்சர் உதுமாலெவ்வையினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப்பணிகளையும், அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களையும் நேரில் சென்று பார்வையிடுவதற்ககான வாய்ப்புக்கள் அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் மாகாண சபை வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, மத்திய நீர்பாசனப் பொறியியலாளர் எம்.இசட்.எம்.டபிள்யூ.இப்றாஹீம், மாவட்டச் செயலக திட்டப் பணிப்பாளர்ஐ.எல்.தௌபீக், மாகாண சுற்றாடல் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நஐPப், கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜெஸுர் , அமைச்சரின் பொது மக்கள் தொடர்பு அதிகாரி எம்.எஸ்.எம்.ஜஃபர் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





site counter