வியாழன், 27 செப்டம்பர், 2012
இனியும் அமெரிக்காவின் உருட்டல், மிரட்டல் எடுபடாது – ஈரான் அதிபர்
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள அகமதிநிஜாத் அங்கு அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர 12க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து முயற்சித்து வருகின்றன. அதில் ஒன்றாக ஈரானும் உள்ளது.
எங்களது அணு சக்தித் திட்டங்களை கேள்வி கேட்கயாருக்கும் அதிகாரம் கிடையாது. மேற்கத்திய நாடுகள் என்னதான் எங்களுக்குத் தடை விதித்தாலும் எங்களது பணிகள் தொடர்ந்து தங்கு தடையின்றி நடந்து கொண்டுதான் உள்ளன.
இப்போது புதிய உலக வரிசை உருவாகும் நேரம் வந்து விட்டது. இனியும் அமெரிக்காவின் உருட்டல்கள், மிரட்டல்கள் எடுபடாது. அவர்களும் உலக நாடுகள் மீதான தங்களது ஆதிக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று எல்கேஜி குழந்தைக்குக் கூட அமெரிக்கா உலக நாடுகளை மிரட்டிக் காரியம் சாதிப்பதை உணர்ந்துள்ளது. மைக்ரோபோன் மூலம் உத்தரவிட்டு காரியம் சாதிக்கிறது அமெரிக்கா. தங்களது விருப்பங்களை, மிரட்டல்களை போன் மூலம் அவர்கள் சாதிக்கி நினைக்கிறார்கள். ஆனால் இது முடியப் போகும் நேரம் வந்து விட்டது. இனிமேலும் அவர்களை யாரும் சக்கரவர்த்தி போல பார்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை.
ஆதிக்கம் முடிவுக்கு வர வேண்டும், ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர வேண்டும், கட்டளைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்றார் அகமதிநிஜாத். (Oneindia)
சமூகத்திற்கு ஹக்கீம் இழைத்துள்ள துரோகத்தை அடுத்த சந்ததி கூட மன்னிக்காது; அசாத் சாலி காட்டம்!
கிழக்கு மாகாண சபைத் தேர்தலே ஹக்கீமின் இறுதித் தேர்தலாகும். அவரால் இனிமேல் கண்டியில் அல்ல, அம்பாறையிலும் போட்டியிட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
கிழக்குத் தேர்தலில் நான் ஒரு வீட்டுக்கேனும் செல்லாது வாக்குகளை பெற்றேன். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு நேரமிருக்கின்றது. தாமதிக்காமல் கிழக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரி பிழையை திருத்திக் கொள்ள வேண்டும்.
ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் துரோகம் இழைத்து விட்டார். இது ஒரு கரை படிந்த அத்தியாயமாகும். அடுத்த சந்ததி கூட இதனை மன்னிக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள அஸாத் சாலி மன்றத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தில் பதவி வகிக்கக் கூடாது ௭ன்ற சிறந்த கொள்கையை இந்த அரசாங்கம் முறையாக அமுல்படுத்தினால், ராஜபக்ச குடும்பத்தில் ௭த்தனை பேர் மிஞ்சுவர் ௭ன்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இரண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது ௭ன்று தனக்கு அறிவுறுத்தியதை அடுத்தே அமைச்சர் ௭ஸ்.௭ம். சந்திரசேன தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.
அவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சு பதவி வகிக்க முடியாது என்றால் சபாநாயகர் சமல் ராஜபக்ச பதவி விலகினால் ௭த்தனை பேர் பதவி விலக வேண்டும்.
அரச ஊழியர்களுக்கு 13, 432 ரூபா சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தல்
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த, செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையில், தமது தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்கு பொலிஸாரை பயன்படுத்த அரசாங்கம் முயற்சித்தால் பதில் கொடுக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்களை தமது சங்கம் கோரும் எனத் தெரிவித்தார். ஏனெனில் இந்த போராட்டம் நியாயமானது என அவர் கூறினார்.
"உண்மையான தொழிற்சங்கப் போராட்டம் வெற்றியளிக்கும் என நாம் நம்புகிறோம். அரசாங்க அடக்குமுறைக்குப் பயந்து வாபஸ்பெறுவது அறிவார்ந்த நடவடிக்கை அல்ல. ஏனெனில், அதிகாரத்திலுள்ள ஒவ்வொரு அரசாங்கமும் இதை செய்யமுயற்சிக்கிறது. அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் வகையில் தொழிற்சங்கங்கள் தமது பலத்தை வலுப்படுத்த வேண்டும்" என அவர் கூறினார்.
"2006 ஆம் ஆண்டின் பின்னர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம், 7069 ரூபாவையே படியாக அதிகரித்துள்ளது. 2006 ஆம் ஆண்டில் ஒரு குடும்பம் குறைந்தபட்சம் 25,344 ரூபாவை செலவிட்டது. வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணின்படி, கடந்த மாதம், குடும்பமொன்றுக்கான செலவு 46,396 ரூபாவாக அதிகரித்தது. எனவே தொழிலாளிகளின் அடிப்படை சம்பளத்திற்கும், வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுபடி வழங்கப்படாததன் நிலுவைக்கும் இடையிலான இடைவெளியை நிவர்த்திப்பதற்காக 13,442 ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டும் என லால் காந்த கூறினார்.
தீர்வு என்பது மக்களுக்கானது, தலைவர்களுக்கானதல்ல: சம்பந்தன்
வாகன விபத்தில் தந்தை பலி; தாயும் குழந்தையும் காயம்
(எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர)
புத்தளம், வண்ணாத்திவில்லுப் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை பலியான அதேவேளை, தாயும் 2 மாதக் குழந்தையும் காயமடைந்துள்ள நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மன்னாரிலிருந்து சிலாபத்துறையூடாக கற்பிட்டி சென்றுகொண்டிருந்த பஸ், மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
NTRinfor |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)