.jpg)
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அம்பாரைப் பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய அம்பியுலன்ஸ் வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலய வளாகத்தில் இடம் பெற்றது.
அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். சேனக தலாகல தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம்,மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
ஜப்பான் அரசாங்கத்தின் ஜெய்கா திட்டநிதி உதவியில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்ட புதிய அன்பியுலன்ஸ் வண்டிகளில் ஒரு தொகுதியினையே இன்று அமைச்சர் மன்சூர் தெஹியத்தகண்டிய போதனா வைத்தியசாலை, மகாஓயா போதனா வைத்தியசாலை, பதியத்தலாவ மாவட்ட வைத்தியசாலை போன்றவற்றிற்கு வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் அம்பாரைப் பிராந்திய திட்டமிடல் சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.எம்.திலக் ராஜபக்ஷ, பதியத்தலாவ மாவட்ட வைத்தியதிகாரி பி.கே.ரத்னசிறி, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி.ஏ.எல்.சஃபீர், பொது மக்கள் தொடர்பு அதிகாரி யூ.எல்.எம்.பஸீர் உள்ளிட்ட வைத்தியர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், உயரதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.