அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

வாக்குறுதிகளை நிறைவேற்றி ஊருக்கு உழைப்பேன்















வாக்குறுதிகளை நிறைவேற்றி ஊருக்கு உழைப்பேன்  


சுலைமான் லெவ்வை

நிந்தவூர்ப் பிரதேசத்தில் கடந்த காலங்களில் கிடப்பில் கிடந்த பல்வேறு அபிவிருத்திப் பணிகள் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

1ம் பிரிவு கிராம சேவகர் பிரிவு 12, 11ம் பிரிவுகளில் வாழ்வோர். கடந்த காலங்களில் சொல்லொணா துயரம் அடைந்துள்ளனர். இந்த கஷ்டமான நிலைமையில் இமாம் கஸ்ஸாலி வீதி, மலையார் வீதி, காரைதீவு, நிந்தவூர் வீதி, விவசாய கால்நடை காரியாலய வீதி, வெட்டுவாய்க்கால் வீதி, மீராநகர் குறாஸ் வீதி போன்ற பவலதரப்பட்ட வீதிகள் சுமார் 2 1/2 கோடி ரூபா செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநர் றியல் அட்மிரல் மொஹான் விஜய விக்கிரமவின் அனுமதியுடன் நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்க் கட்சி தலைவர் வை. எல். சுலைமாலெவ்வையின் அயராத முயற்சியினால். இந்த நிதி பெறப்பட்டு ஜெயிக்கா திட்டப் பணிப்பாளர், கருணை நாதன், பிரதம பொறியியலாளர் றிஸ்வி ஆகியோரின் அனுசரணையுடன் இவ்வேலைத்திட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் இப்பிரதேசத்தில் உள்ள 1500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் நன்மை அடைந்துள்ளன.

நிந்தவூர் பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றம் கருதி அல் மஸ்ஹர் பெண்கள் உயர் தர பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க 2008 ஆம் ஆண்டு மூன்று மாடிக்கான அடிக்கல் நடப்பட்டு சுமார் 45 இலட்சம் ரூபா செலவில் முதல் மாடி வேலைகள் முடிவடைந்தன.

எதிர்க்கட்சி தலைவரான எனது முயற்சியினால் இது ஆரம்பிக்கப்பட்டது.
இப்பாடசாலை அதிபர், ஆசிரியர்களை என்னால் மறக்க முடியாது.

இப்பாடசாலையை நல்ல முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பையும் கருத்தில் கொண்டதனால் இக்கட்டட வேலைகளை துரிதப்படுத்தும் வகையில் என்னிடம் கேட்டுக் கொண்டதுக்கிணங்க கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு, காணி, போக்கு வரத்து அமைச்சின் செயலாளர் புஸ்ப குமாரவின் அனுசரணையுடனும், கிழக்கு மாகாண, ஆளுநர் அவர்களின் அனுமதியுடனும் ஒதுக்கப்பட்ட 60 இலட்சம் ரூபா பண ஒதிக்கீட்டில் இப்பாடசாலையின் மூன்று மாடி கட்டட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தவிசாளர் தாஹிர் அபிவிருத்திப் பணிகளுக்கு தன் னால் முடியுமான வரை ஆதரவு வழங்கிக் கொண்டு இருக் கின்றார்.
கிழக்கின் உதயம் மற்றும் மஹிந்த சிந்தனைக்கு தவிசாளர் மதிப்பளிப்பது மிகவும் வரவேற்கதக்கது.

அல் அஸ்றக் தேசிய பாடசாலையில் இப்பாடசாலையில் கல்வி கற்கும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பல இன்னல்களை தற்போது பாடசாலைக்கான பாதைகள் மிகவும் துரிதமான முறையில் காபட் போடப்பட்டுள்ளது.

நிந்தவூரின் நன்மை கருதி பாடசாலை முன்பாக அமைக்கப்பட இருக்கும் மேம்பாலத்தை உடனடியாக முடித்து தருமாறு அமைச்சர் நிர்மலா கொத்தலாவுடன் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடி உள்ளேன். இப்பாலம் அமைக்கும் வகையில் அமைச்சர் 1 கோடியே 12 இலட்சம் ரூபா பணத்தை ஒதுக்கித் தருவதாக வாக்களித்துள்ளார். இப்பாலத்தை அமைப்பதற்கு அரசியல் வாதிகள், எமது ஊரின் கல்விமான்கள் படித்த புத்திஜீவிகள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து உதவ முன்வர வேண்டும்.

இதேபோன்று அஸ்ஸாபி வித்தியாலயம் கடந்த சுனாமி காலங்களில் பாதிக்கப்பட்டது. இது சுமார் 50 வருடங்கள் பழமைவாய்ந்த இப் பாடசாலை தற்போது கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றது. இப்பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்கால நன்மை கருதி பாடுபடுவதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது.

இப்பாடசாலை பெற்றார் நலன் விரும்பிகள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரதேச சபையின் எதிர்க் கட்சி தலைவர் என்ற வகையிலும் பாடசாலையின் நலன் விரும்பி என்ற வகையிலும் அயராது பாடுபட்டு சுமார் 75 இலட்சம் ரூபா செலவில் இரண்டு மாடி கட்டடத்துக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுனாமியால் முற்றாக அழிந்து போன அல் - அதான் வித்தியாலயம் தற்போது இயங்கி வருகின்றது. 1ம் தரம் தொடக்கம் 5ம் தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேவையான தளபாடங்களை பெற்றுக்கொடுக்கும் பணியில் இருந்து கல்வி அமைச்சு முதற் கட்டமாக இப்பாடசாலை ஆசிரியர்களின் நன்மை கருதியும் மேசை, கதிரைகளையும் தந்துள்ளார்.

கடந்த காலங்களில் நிந்தவூர் விவசாயிகள் வெல்லஸ்கட்டு வயல் பிரதேசங்களுக்கு சென்று விவசாயத்தை மிகவும் கஷ்டப்பட்டு செய்து வந்துள்ளனர். விவசாயிகள் தங்களின் விவசாயத்துக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் பாதை இல்லாமல் வண்டி மூலமாக சென்று கஸ்ட்டப்பட்டார்கள்.

இவ்வேலைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கல்முனை நீர்ப்பாசன திணைக்களத்தை பணித்துள்ளேன். இவ்வேலைத்திட்டம் பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி மேற்கொள் ளப்பட்டுள்ளது.

அட்டப்பளத்தில் நீர் தாங்கி அமைந்துள்ள பிரதேசத்தில் பல வருடமாக மின்சாரப் பாவனை இல்லாமல் பாதை இருளில் கிடந்து வந்தது. இப்பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மின்சாரத்தை வழங்கும் பணியில் கிழக்கு மாகாண பிரதிப் பிரதம பொது முகாமையாளர் திரு தவனேஸ்வரன், அம்பாறை மின்சார சபையின் அதிகாரிகளை பணித்துள்ளார்.

site counter