நேற்று செவ்வாய்க்கிழமை வட மாகாண திணைக்கள தலைவர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்களை அழைத்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அதன் இணைத் தலைவர்களுள் ஒருவரான வட மாகாண ஆளுநர மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியும் கலந்து கொள்ள மண்டபத்த்pனுள் வருகை தந்தபோது தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களோ உள்ளுராட்சி சபைத் தலைவர்களோ எவரும் அவரை கணடு கொள்ளவோ மரியாதை வழங்கும் வகையில் எழுந்து நிற்கவோயில்லை.
இந்நிலையில் வடக்கு மாகாண திணைக்கள தலைவர்கள் மற்றும் அமைச்சு செயலாளர்களை நேற்று அழைத்து வடக்கு மாகாணத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு நிதிச் செலவு செய்யப்படாமை குறித்து பாய்ந்து விழுந்த அவர் பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜந்தாறு நாய்கள் வந்து ஊளையிட்டதாகவும் குறிப்பிட்டார்.
அந்நாயகளின் ஊளைச் சத்தம் உங்களுக்கும் கேட்டதாவென அவர் அதிகாரிகளை பார்த்து கேள்வியும் எழுப்பினார்.
நாய்களது ஊளையினால் எதனையும் தன்னால் அங்கு கேட்க முடியாது போய் விட்டதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.