அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

திவிநெகும: மு.கா. ஆடிய நாடகம்!



-மப்றூக்-
திரும்பவும் ஓர் அரசியல் நாடகம் மேடையேறியுள்ளது. நாடகத்தின் பெயர் ‘திவிநெகும சட்ட மூலம்’! கிழக்கு மாகாணசபையில் கடந்த 02ஆம் திகதி மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பார் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை சிறப்பாக ஏற்று நடித்திருந்தார்கள். சிலர் நடிக்க வைக்கப்பட்டார்கள். இன்னும் சிலர் – தாங்கள் நடிக்கின்றோம் என்று தெரியாமலேயே நாடகத்துக்குள் வந்து போனார்கள்.
திவிநெகும சட்ட மூலத்தில் பிரச்சினைகளே இல்லை என்றால் – அதுகுறித்து இத்தனை வாதப் பிரதிவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்திருக்க நியாயமில்லை.
திவிநெகும சட்ட மூலத்தினூடாக – மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்படுவதாகவும், கிராமிய மட்டத்திலான அபிவிருத்திகள், மாகாண மட்டத்திலிருந்து மத்திய அரசின் கைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதே விமர்சனங்களை முன்வைத்து, கிழக்கு மாகாணசபையில் திவிநெகும சட்ட மூலத்துக்கு எதிராக த.தே.கூட்டமைப்பு வாக்களித்துள்ளது.
இன்னொருபுறம், திவிநெகும சட்ட மூலம் நிறைவேறினால், சமுர்த்தி உதவி பெறுபவர்களுக்கான கொடுப்பனவுகள் கிடைப்பது தடைப்பட்டு விடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். ஏழை மக்களுக்குப் பணமாகவோ அல்லது பொருளாகவோ உதவி செய்வதற்கு திவிநெகும சட்ட மூலத்தில் உத்தரவாதங்கள் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இப்படி ஏராளமான விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகிவரும் திவிநெகும சட்ட மூலத்தினைத்தான் கிழக்கு மாகாணசபையில் மு.காங்கிரஸ் கண்களை மூடிக்கொண்டு ஆதரித்திருக்கின்றது.
திவிநெகும சட்ட மூலம் குறித்தும், அதற்கு ஆதரவாக கிழக்கு மாகாணசபையில் மு.காங்கிரஸ் வாக்களித்தமை தொடர்பிலும் அந்தக் கட்சிக்குள் ஒருமித்த கருத்துகள் இல்லை.
திவிநெகும சட்ட மூலமானது – வலது கையால் கொடுத்ததை இடது கையால் பறித்துக் கொள்ளும் ஒரு தந்திரமாகும். மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசின் அமைச்சர் – திவிநெகும சட்டத்தினூடாக பிடுங்கிக் கொள்கின்றார். அந்த வகையில், அதிகாரப் பரவலாக்கலை விரும்பும் எவரும் இந்த சட்ட மூலத்தை ஆதரிக்க மாட்டார்கள் என்று கூறுகின்றார் மு.காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர். இவர் பிரபல்யமானதொரு சட்டத்தரணி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆனால், திவிநெகும சட்ட மூலத்தில் சிறுபான்மையினருக்கு பாதிப்புகள் எவையும் இல்லை என்று மு.கா.வின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணசபையில் திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் மு.காங்கிரஸ் என்ன நிலைப்பாட்டினை எடுக்கப் போகிறது? என்கிற கேள்வியும், எதிர்பார்ப்பும் – அரசியலை அப்பாவித்தனமாகப் புரிந்து வைத்திருப்போரிடையே இருந்தது. ஆனால், அந்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாகவே மு.கா. வாக்களிக்கும் என்று – மு.கா. தலைவர் ஹக்கீமையும், அவரின் அரசியலையும் அறிந்தவர்கள் கணித்து வைத்திருந்தனர். அது அப்படியே நடந்தது!
திவிநெகும சட்ட மூலத்துக்கு கிழக்கு மாகாணசபையில் ஆதரவாக வாக்களிப்பதென்று மு.காங்கிரஸின் தலைமை ஏற்கனவே தீர்மானித்து விட்டது. ஆனாலும், அதை ‘எடுத்தாற்போல்’ நிறைவேற்றுவதற்கு ஹக்கீம் விரும்பவில்லை. அதனால்தான், வாக்களிப்பு விடயத்தில் இத்தனை கூத்துக்களும், கும்மாளங்களும் இடம்பெற்றன. கிழக்கு மாகாணசபையில் திவிநெகும சட்ட மூலத்துக்கு மு.காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை – ‘ஒரு விபத்தினை’ப் போல் சித்திரித்துக் காட்டுவதற்கு மு.காங்கிரஸின் ‘தலை’கள் முயற்சிக்கின்றன. இதுதான் உண்மை என்கிறார் அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினரொருவர்!
திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் ஆராய்வதற்கு கிழக்கு மாகாணசபையில் கால அவகாசம் கோருவோம் என்றார் மு.கா.வின் செயலாளர் ஹசனலி. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. அந்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக மு.கா.வின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஏழு பேரும் வாக்களித்து விட்டனர்.
இந்தக் குளறுபடி எப்படி நடந்தது? மு.கா. செயலாளர் ஹசனலி இப்படி விளக்கம் தருகின்றார்ளூ ‘திவிநெகும சட்ட மூலத்தினை ஆராய்வதற்கு கால அவகாசம் கோருமாறு கிழக்கு மாகாணசபையின் மு.காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீலிடம் – நாம் கூறியிருந்தோம். ஆனால், மு.கா. உறுப்பினர்களை ஜெமீல் பிழையாக வழி நடத்தி, திவிநெகும சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்துவிட்டார்’!
உண்மையில், கடந்த 02ஆம் திகதி கிழக்கு மாகாணசபை அமர்வின் போதுதான் திவிநெகும சட்ட மூலத்துக்கு மு.காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக அந்தக் கட்சியின் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் கூறியுள்ளார். ஆனால், அன்றைய தினம் – சபை அமர்வுக்கு முன்னதாக இடம்பெற்ற கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவைக் கூட்டத்திலேயே – மு.கா.வின் அமைச்சர்களான மன்சூர் மற்றும் ஹாபீஸ் நஸீர் ஆகியோர் திவிநெகும சட்ட மூலத்துக்கு மு.காங்கிரஸ் ஆதரவளிக்கும் எனத் தெரிவித்திருந்தனர்.
திவிநெகும சட்ட மூலம் தொடர்பாக – கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர்களுக்கு அந்தக் கட்சியின் தலைமைத்துவம் எந்தவிதமான விளக்கங்களையோ, அறிவுறுத்தல்களையோ மாகாணசபை அமர்வுக்கு முன்னதாக வழங்கியிருக்கவில்லை. கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர்கள் இதை உறுதி செய்தார்கள். ஏராளமான விமர்சனங்களையும், வாதப் பிரதிவாதங்களையும் எதிர்கொண்டுள்ள திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் – தனது மாகாணசபை உறுப்பினர்களுக்கு மு.கா. தலைமைத்துவம் போதிய விளக்கங்களையோ, அறிவுரைகளையோ வழங்கவில்லை என்பதிலிருந்தே, இந்த சட்டமூலம் தொடர்பில் மு.கா. தலைமைத்துவம் கொண்டிருந்த அசிரத்தை மனப்பாங்கினைப் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?!
திவிநெகும சட்ட மூலத்தினை கிழக்கு மாகாணத்தில் ஏன் ஆதரித்தீர்கள் என்று கிழக்கு மாகாண மு.காங்கிரஸ் அமைச்சர் மன்சூரிடம் கேட்டோம். ‘திவிநெகும சட்ட மூலம் சமூகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதொன்றாக இருந்தால், அது குறித்து கட்சித் தலைமை எமக்கு அறிவித்திருக்கும். ஆனால், அவ்வாறான அறிவுறுத்தல்கள் எவையும் தலைமையிடமிருந்து எமக்கு கிடைக்கவில்லை. அதேவேளை, திவிநெகும சட்ட மூலத்தினைப் படித்துப் பார்த்த போது அதில் சமூகத்துக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் எவையும் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் அந்த சட்ட மூலத்தினை ஆதரித்தோம். இவை தவிர, கிழக்கு மாகாணசபையில் அரசும், மு.கா.வும் இணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில், முதல் அமர்விலேயே அரசுக்கு எதிராக வாக்களிப்பதென்பது தர்ம சங்கடமானதொரு விடயமாகவும் இருந்தது’ என்று அவர் பதிலளித்தார்.
கிழக்கு மாகாண சபையில் திவிநெகும சட்ட மூலம் சமர்ப்பிக்கப்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு – தனது மாகாணசபை உறுப்பினர்களுக்கு இச் சட்ட மூலம் குறித்து கருத்தரங்கொன்றினை நடத்தியது. அதன்போது, இச் சட்ட மூலத்திலுள்ள சாதக, பாதகங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இறுதியில், திவிநெகும சட்ட மூலத்துக்கு எதிராக கிழக்கு மாகாணசபையில் வாக்களிக்க வேண்டும் என்கிற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது. த.தே.கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் அவ்வாறே செய்தனர். மு.கா.வும் இப்படியொரு கருத்தரங்கினை நடத்தியிருந்தால், அந்தக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் இது விடயத்தில் தெளிவுகளைப் பெற்றிருப்பார்கள், சரியான முறையில் – அவர்கள் செயற்பட்டிருக்கவும் கூடும்.
எது எவ்வாறிருந்தபோதும், திவிநெகும சட்ட மூலத்தினை கிழக்கு மாகாணத்தில் ஆதரிப்பதைத் தவிர வேறு தெரிவுகள் மு.கா. தலைமைக்கு இருக்கவில்லை என்பதுதான் உண்மையாகும். கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இந்த சட்ட மூலத்தினை ஆதரித்து வாக்களித்ததன் பின்னணியில் மு.கா. தலைவர் இருந்ததாகவும் சில கதைகள் உலவுகின்றன. திவிநெகும சட்ட மூலத்தினை எதிர்ப்பதென மு.கா. தலைமை முடிவு செய்திருந்தால், கடந்த 02ஆம் திகதி, கிழக்கு மாகாணசபையில் தனது 07 உறுப்பினர்களூடாகவும் அதைச் செய்து காட்டியிருக்க முடியுமல்லவா?!
திவிநெகும சட்ட மூலம் கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டமைக்கான முழுப் பொறுப்பினையும், மு.காங்கிரஸின் தலைமைத்துவமே ஏற்க வேண்டும். இதை விடுத்து கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மீது – பழி சுமத்தும் வகையில் கட்சியின் செயலாளர் உள்ளிட்டோர் பேசிவருவது ஏற்புடையதல்ல. இது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ‘அடுத்தவனை’ப் பலிகொடுக்கும் முயற்சியாகும்.
இன்னொருபுறம், சிறுபான்மை சமூகங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதொன்றாக விமர்சிக்கப்படும் திவிநெகும சட்ட மூலத்துக்கு எதிராக – மனச்சாட்சியின் அடிப்படையில், சுயாதீனமாக வாக்களிக்கும் திராணி – கிழக்கு மாகாணசபையின் எந்தவொரு மு.கா. உறுப்பினருக்கும் இருக்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. தலைவருக்குத் தலை ஆட்டுகின்றவர்களாவும், ‘ஊர் ஓடும் போது ஒத்து ஓடுகின்றவர்களாக’வும்தான் கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர்கள் இருந்துள்ளார்கள்.
‘இருப்பவன் சரியாக இருந்தால் சிரைப்பவன் நன்றாகச் சிரைப்பான்’ என்று கிராமங்களில் கூறுவார்கள். திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் மு.கா. தலைமை – சரியாகச் செயற்பட்டிருந்தால், அந்தக் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் முறையாக நடந்திருப்பார்கள் என்கிறார் மு.கா.வின் முக்கிய பிரமுகரொருவர்.
அப்படிப் பார்த்தால், இங்கு இருப்பவனும் சரியில்லை, சிரைப்பவனும் சரியில்லை..!!
Courtesy: Tamil Mirror

புத்தளம் - தப்போவ மீ ஓயாவில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு


புத்தளம் - தப்போவ மீ ஓயாவில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
புத்தளம் தப்போவ - பாவட்டாமடு கிராமம் ஊடாக செல்லும் மீ ஓயாவில் மிதந்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இச்சடலத்தை மீட்டுள்ளனர். 

சடலமாக மீட்கப்பட்டவர் தப்போவையைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயென அடையாளம் காணப்பட்டுள்ளார். 

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

சடலம் குருநாகல் வைத்தியசாலையில வைக்கப்பட்டுள்ளது. 

புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(அ- தெ) 

யாழில் 9 மாதங்களில் 19 கொலை, 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பதிவு


யாழில் 9 மாதங்களில் 19 கொலை, 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பதிவு


யாழ்.குடாநாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 19 கொலைச் சம்பவங்களும் 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார். 

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விசேட உரையாற்றும் போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்.குடாநாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பாரிய குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. 

2011 ஆம் ஆண்டில் 21 கொலைச் சம்பவங்கள் யாழில் நடைபெற்றுள்ளது. இம்முறை அது குறைவடைந்து 19 ஆக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்தோடு யாழில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகரித்துச் சென்றுள்ளது. 2012 இந்த வருடத்தில் 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதில் காதல் விவகாரம் தொடர்பாக 21 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உறவினர்களினால் 3 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், 8 பேர் யாழ்.மாவட்டத்தைச் சேராத வெளிமாவட்டத்தவர்களினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படத்தப்பட்டுள்ளனர். 

இந்த பாலியல் வல்லுறவுச் சம்பவங்களிவ் 27 பேர் சிறுமியர்கள் எனவும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறான குற்றச் சம்பவங்களைத் தவிர வாள்வெட்டுச் சம்பவங்கள், வீடு உடைத்துக் கொள்ளைச் சம்பவங்கள் என பல குற்றச் செயல்கள் பதிவு செய்யப்ட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

(அத தெரண நிருபர்) 

திவிநெகும குறித்து தனக்கு அறிவிக்கப்படாமை யாப்புக்கு முரணானது - சபாநாயகர்


திவிநெகும குறித்து தனக்கு அறிவிக்கப்படாமை யாப்புக்கு முரணானது - சபாநாயகர்
திவிநெகு சட்ட மூலம் குறித்து உயர் நீதிமன்றம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்தல் விடுத்தமை யாப்புக்கு முரணானது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திவிநெகும குறித்து உயர் நீதிமன்றால் தனக்கு தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
 

சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியல் வெளியீடு: இலங்கை முதலிடம்

சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேசக் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலின் 127 புள்ளிகள் பெற்று இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது.
டி20 உலகக் கிண்ணத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி ஏனைய அணிகளை விடத் தொடர்ச்சியான, தொடர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் அணி 5 இடங்கள் முன்னேறி 121 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்தது.
இந்திய அணி 120 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்படுகிறது.
புதிய தரவரிசை பட்டியல்:
இலங்கை
மேற்கிந்தியத் தீவுகள்
இந்தியா
இங்கிலாந்து
தென் ஆப்ரிக்கா
பாகிஸ்தான்
அவுஸ்திரேலியா
நியூசிலாந்து
வங்கதேசம்
அயர்லாந்து
ஜிம்பாப்வே

சர்வதேச டி20 தரவரிசைப் பட்டியல் வெளியீடு: இலங்கை முதலிடம்

சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின் டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேசக் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்த தரவரிசைப் பட்டியலின் 127 புள்ளிகள் பெற்று இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது.
டி20 உலகக் கிண்ணத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி ஏனைய அணிகளை விடத் தொடர்ச்சியான, தொடர்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் அணி 5 இடங்கள் முன்னேறி 121 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்தது.
இந்திய அணி 120 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்படுகிறது.
புதிய தரவரிசை பட்டியல்:
இலங்கை
மேற்கிந்தியத் தீவுகள்
இந்தியா
இங்கிலாந்து
தென் ஆப்ரிக்கா
பாகிஸ்தான்
அவுஸ்திரேலியா
நியூசிலாந்து
வங்கதேசம்
அயர்லாந்து
ஜிம்பாப்வே

ஓடும் ரயிலில் மோதுண்டு சிலாபத்தில் ஒருவர் தற்கொலை


ஓடும் ரயிலில் மோதுண்டு சிலாபத்தில் ஒருவர் தற்கொலை


சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவரான மற்றும் பலாபன ரயில் நிலையங்களுக்கு இடையில் மைக்குளம் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் மோதுண்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த அலுவலக ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் நேற்று (08) இரவு 07.45 அளவில் இடம்பெற்றுள்ளது. 

தற்கொலை செய்து கொண்ட 41 வயதுடைய நபரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(அத தெரண) 

ஓடும் ரயிலில் மோதுண்டு சிலாபத்தில் ஒருவர் தற்கொலை


ஓடும் ரயிலில் மோதுண்டு சிலாபத்தில் ஒருவர் தற்கொலை


சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவரான மற்றும் பலாபன ரயில் நிலையங்களுக்கு இடையில் மைக்குளம் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் மோதுண்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த அலுவலக ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் நேற்று (08) இரவு 07.45 அளவில் இடம்பெற்றுள்ளது. 

தற்கொலை செய்து கொண்ட 41 வயதுடைய நபரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(அத தெரண) 

ஓடும் ரயிலில் மோதுண்டு சிலாபத்தில் ஒருவர் தற்கொலை


ஓடும் ரயிலில் மோதுண்டு சிலாபத்தில் ஒருவர் தற்கொலை


சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவரான மற்றும் பலாபன ரயில் நிலையங்களுக்கு இடையில் மைக்குளம் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் மோதுண்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த அலுவலக ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் நேற்று (08) இரவு 07.45 அளவில் இடம்பெற்றுள்ளது. 

தற்கொலை செய்து கொண்ட 41 வயதுடைய நபரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(அத தெரண) 

நீதி கோரி சட்டத்தரணிகள் போராட்டம்

புறக்கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். நீதி சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரத்ன நேற்றைய தினம் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


நீதி கோரி சட்டத்தரணிகள் போராட்டம்

நீதி கோரி சட்டத்தரணிகள் போராட்டம்



நித்திரையில் இருந்த தாய் - மகன் மீது சாமத்தில் பொல்லடி! மகன் பலி


மொனராகலை - கல்வல வீதி - ரம்புக்கனை பகுதி வீடொன்றில் நித்திரையில் இருந்த தாய் மற்றும் மகன் மீது இனந்தெரியாத நபர்கள் பொல்லுகள் கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். 
நித்திரையில் இருந்த தாய் - மகன் மீது சாமத்தில் பொல்லடி! மகன் பலி
நேற்று (08) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தாய் மற்றும் மகன் ஆகியோர் மொனராகலை வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டனர். 

இதில் 16 வயது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

தாய் தொடர்ந்தும் சிறிபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் தாக்குதல் நடத்தக் காரணம் என்பன இதுவரை வெளியாகவில்லை. 

மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(அத தெரண) 

site counter