
அல்-உஸ்வா நனசல அறிவகத்திற்கு கணனிகள் வழங்கும் நிகழ்வு.
-மாகாண அமைச்சர் மன்சூர் பிரதம அதிதி-
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
மாகாண அமைச்சர் மன்சூரின் நிதிஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட கணனிகளும், அது தொடர்பான உபகரணங்களும் சம்மாந்துறை அல்-உஸ்வா நனசல அறிவகத்திற்கு வழங்கும் நிகழ்வு இன்று( 28) அல்-உஸ்வா பெண்கள் அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.
அல்-உஸ்வா நனசல கணனிப் பயிற்சி நிலையப் பணிப்பாளர் ஐ.எல்.எம்.முஸ்தபா மௌலவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக சேவைகள்,தொழிற் பயிற்சிக் கல்வியமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, கணனிகளையும், உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் உஸ்வா நிறுவனத் தலைவர் யூ.எல்.ஏ.றசூல், அமைச்சரின் பொது மக்கள் தொடர்பதிகாரி யூ.எல்.எம்.பஸீர் , கணனிப் பயிற்சி நிலைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறுவர் நிகழ்ச்சிகள் பலவும் இடம் பெற்றன.
இங்கு மாகாண அமைச்சர் மன்சூர் உரை நிகழ்த்துகையில் ' நமது ஜனாதிபதி மஹிந்த றாஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனை மூலம் உருவாக்கப்பட்ட இந்த நனசல அறிவகங்களை நமது பிள்ளைகள் பயன்படுத்துவதன் மூலம், எதிர்கால சவால்களுக்கு முகங் கொடுக்கக் கூடிய அறிவும், தொழில் நுட்பமுங் கொண்ட புத்திசாலிகளை உருவாக்க முடியும். எனவே இவற்றிற்கு எப்போதும் நமது ஒத்துழைப்புக்களும், ஒத்தாசைகளும் இருக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
Visual:
Usva Nanasala Training Centre-Min.Manzoor.
Ampara
Rafeek.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக