அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

நிந்தவூர் பிரதேச சபையின் அவசர கவனத்திற்கு...!

நிந்தவூர் பிரதேச சபையின் அவசர கவனத்திற்கு...! 
சுலைமான் றாபி

சமூகத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்கள் உள்ளன. அந்தப் பொறுப்புக்களை அவரவர்கள் செவ்வனே நிறைவேற்றும் போதுதான் அல்லல்படும் மக்களின் அவலங்களைக் குறைக்க முடியும். அந்த வகையில் நிந்தவூர் இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் காணப்படும் ஜேர்மன் நட்புறவு பாடசாலைக்கு முன்னாள் அமைந்துள்ள அரசடித் தோட்டத்தையும் , அட்டப்பள்ளத்தையும் இணைக்கும் பாலமாகும். இந்த பாலம் சுனாமிக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்பட்டாலும் தற்போது போதிய பாதுகாப்பு வசதியின்றி அது காணப்படுகிறது. இதனால் அன்றாடம் பயணம் செய்யும் பிரயாணிகள் மனப்பயங்களுடன் பயணிப்பதனை வெகுவாக அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் இந்த பாலத்தினூடாக பயணிக்கும் துவிச்சக்கர வண்டி, மோட்டார்  சைக்கிள், மோட்டார் வாகனம் மற்றும் கனரக வாகனங்களை தங்கள் உயிர்களை கேள்விக்குறியாக்கிய நிலைகளிலே இந்த பாலத்தினூடாக பயணிக்கின்றனர். 

மேலும் அதே போன்று 08அடி தாழ்வாக காணப்படும் இந்த பாலத்தின் கீழ்பகுதியூடாக வெள்ள நேரங்களில் அதிகமான நீர்கள் கடலுக்குச்செல்கின்றனது. மேலும் இந்தப்பாலத்தின் அருகில் தேசிய நீர்வழங்கல் வாடிகாலமைப்புச்சபையின் நீர்க்குழாய்களும்   செல்கின்றன. எனவே, இவை அனைத்திற்கும் தேவையான (Hand Rails மற்றும் Up Rights ) போன்றவைகள் இல்லாமல் உயிர்களுக்கும், வாகனங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது. மேலும் இந்த வீதியினூடாகவும், பாலத்தினூடாகவும் இரவுவேளைகளில் பயணிப்பதற்கு மின்சார வசதியின்றும்  இதன் அவல நிலை காணப்படுகிறது. 

எனவே இந்த வீதியினூடாக இரவிலும், பகலிலும் பயணம் செய்யும் பாடசாலை மாணவர்கள், தொழிலாளிகள், பிரயாணிகள் இன்னும் பாதசாரிகளின் நன்மை கருதி இந்த பாலதிற்கு தேவையான பாதுகாப்பு வேலிகளை அமைத்துக் கொடுப்பதும் இந்த பாலத்தின் பிரதேச எல்லைக்குதேவையான மின்சார வசதியினையும் பெற்றுக்கொடுப்பது  பிரதேச சபையின் கடமையல்லவா ??
 



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter