அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

எரிபொருள் மானியம் வழங்கு; இல்லையேல் வேலை நிறுத்தம்; 15 ஆம் திகதி வரை அரசுக்கு காலக்கெடு!


PBus

 (எம்.பைஷல் இஸ்மாயில்)
அரசாங்கம் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்பாக எரிபொருள் மானியம் வழங்காதுவிடின் நாடாளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
பஸ் கட்டண உயர்வுக்குப் பதிலாக அரசாங்கம் தமக்கு எரிபொருள் மானியம் தருவதையே தாம் விரும்புவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் 14 ஆம் திகதி பஸ் கட்டணங்ளை உயர்த்த அனுமதிப்பதாக அதிகாரம் வாய்ந்தவர்கள் கூறியிருந்தனர். ஆனால் இப்போது அதைச் செய்ய மறுத்து தமது வாக்குறுதியை மீறியுள்ளனர்.
இப்போது அவர்கள் இந்த விடயத்தை பற்றிப் பேசுவதை தவிர்த்து வருகின்றனர். எமக்கு நிதிவடிவில் அல்லது எரிபொருள் வடிவில் உதவி வழங்குவது அவசியம்.
இதில் ஏதோவொன்றை அரசாங்கம் தர மறுக்குமாயின் முன்னறிவித்தலின்றி பஸ் வேலை நிறுத்தத்தை தொடங்குவோம். தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
சேவையிலுள்ள சுமார் 20 ஆயிரம் பஸ்களில் 16 ஆயிரம் பஸ்கள் தனியாருக்கு உரியவை. 4 ஆயிரம் பஸ்களை மட்டும் சேவையிலீடுபடுத்த இலங்கை போக்வரத்து சபைக்கு தேசிய போக்குவரத்து ஆணையகமும் தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சும் 280 இலட்சம் ரூபா உதவியை வழங்கியுள்ளன. ஆனால் எமக்கு இந்த உதவி கிடைப்பதில்லை. என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
லஞ்சத்தின் அடிப்படையில் சட்டத்தை மீறி பஸ் அனுமதிகள் வழங்கப்படுவதால் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ரூபா நஷ்டம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

site counter