அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 20 டிசம்பர், 2012

குவைத்தில் ''இஸ்லாமிய சூழலிலா என் குடும்பம்'' - மார்க்க சொற்பொழிவு


அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்,

மாபெரும் மார்க்க சொற்பொழிவு இன்ஷாஅல்லாஹ் வெள்ளிகிழமை குவைத்  மங்காப் நகரில் நடைபெற உள்ளது. 
அனைவரும் வருகை தந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற அன்புடன் அழைக்கிறோம்.

(“ஸவ்த்துல் குர்ஆன்” குழுவினர்)
 

வெள்ளத்தில் மிதக்கும் மாவடிப்பள்ளிப் பாலம்; நமது அமைச்சர்கள் அக்கறை கொள்ள மாட்டார்களா? உலமாக் கட்சி விசனம்!



flood.J6652PG
மாரி காலத்தில் வெள்ளத்தினால் தடைப்படும் நீண்ட கால பிரச்சினையான மாவடிப்பள்ளி தாம்போதியை திருத்துவதில் முஸ்லிம் கட்சித் தலைவர்களின் அசிரத்தை விசனத்துக்குரியதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
கல்முனையிலிருந்து சம்மாந்துறை, அம்பாறை நோக்கிச்செல்லும் பிரதான வீதியில் குறுக்கிடும் மாவடிப்பள்ளி பாலம் மாரி காலத்தில் நீரால் நிரம்பி வழிவதையும் வாகனங்கள் போக முடியாத நிலையையும் நாம் அறிந்த வரை கடந்த நாற்பது வருடங்களாக காண்கிறோம்.
இத்தகைய நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தர எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலை தரும் விடயமாகும்.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள இரண்டு முஸ்லிம் கட்சிகள் அரசில் பங்காளிக் கட்சிகளாக இருக்கின்றன. இதன் தலைவர்களான அதாவுள்ளாவும் ஹக்கீமும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாக இருக்கின்றனர். 1989ம் ஆண்டு முதல் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் உள்ளது. ஆனாலும் இப்பிரச்சினை வருடா வருடம் வருவதும் வெள்ளம் வற்றியபின் மறந்து விடுவதுமாகவே உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் முறையான வடிகாண்களோ, பாலங்களோ அமைக்கப்படாhமல் வெறுமனே அறைகுறையாக இவை செயற்படுத்தப் பட்டுள்ளதால் நீரோட்டம் தடைப்பட்டு மக்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஓவ்வொரு வருடத்தின் மாரிகாலத்திலும் மாணவர்களும், பிரயாணிகளும் பயணம் செய்ய முடியாமல் இரு பக்கமும் தவித்து நிற்கும் காட்சி உறங்கிக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் தலைமையிலான முஸ்லிம் கட்சிகளுக்கு இன்னமும் உணர்வைத்தரவில்லை.
இந்த மாவட்டத்தில் ஹக்கீமுக்கு என்பதினாயிரம் வாக்குகளும், அதாவுள்ளாவுக்கு முப்பதினாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளும் உள்ளன. இவற்றைக் காட்டி தமது பிழைப்பை நடத்தும் இவர்கள் மக்களின் அன்றாட பிழைப்பு பற்றி அக்கறை காட்டவேயில்லை. தேர்தல் காலத்தில் தவிர வேறு காலங்களில் மக்களை எட்டியும் பாhக்காத இத்தகைய தலைமைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மக்களின் இத்தகைய நீண்ட காலப்பிரச்சினை பற்றி அக்கறை இருக்காது என்பது உண்மைதான்.
ஆனாலும் மக்களும் தேர்தல் வந்தால் இத்தகைய போலிகளுக்கு கூஜா தூக்குபவர்களாகவும் தமது பிரச்சினைகளை முற்றாக மறந்து விடுபவர்களாகவும் இருப்பதுதான் மிகப்பெரும் பலவீனமாகும்.

அரசின் தடையை மீறி நீதவான்களின் வருடாந்த மாநாடு!


shirani_CI

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனுசரணையுடன் வருடாந்தம் நடைபெறும் நீதவான்களுக்கான மாநாட்டை அரசாங்கம் ரத்து செய்த போதிலும், அம்மாநாட்டை திட்டமிட்டபடி நடாத்த நீதவான்கள் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கம் இந்த மாநாட்டை ரத்து செய்த போதிலும், திட்டமிட்டபடி மாநாட்டை நடாத்த நீதவான்கள் தீர்மானித்துள்ளனர். நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த வருடாந்த மாநாடு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொள்வார். முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் இந்த மாநாட்டின் பிரதம சொற்பொழிவாளராக கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வருடாந்த நீதவான்கள் மாநாட்டிற்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சு நிதி அனுசரணை வழங்கி வந்ததாகவும், அரசியல் காரணங்களுக்காக இம்முறை அனுசரணை மறுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் தன்னார்வ அடிப்படையில் நீதவான்களின் பங்களிப்புடன் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்ணின் உடல் உருக்குலையாத நிலையில் கண்டுபிடிப்பு!



500 ஆண்டுகளுக்கு முன்னர்
அர்ஜென்டீனா Llullaillaco என்ற மலைப்பகுதியில் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிறுமி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இதைக் கண்டெடுத்த ஆய்வாளர்களுக்கு குறித்த சிறுமியின் உடல் அதிர்ச்சி தரும் விடயமாக காணப்பட்டது. இவ்வுடல் மம்மி போன்று பதப்படுத்தப் படவில்லை .. 

ஆனாலும் தோல் இதயம் நுரையீரல் போன்ற தசைகள் உருக்குலையாது இன்னமும் காணப்படுகின்றன. 

மதரீதியாக உடலை பாதுகாக்க எதோவொரு நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. 

இன்கா (inca) எனும் இனத்தவர்கள் கடவுளின் கட்டளைப்படி சிறுவயதில் இறப்பவர்களை மீளாத உறக்கத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். இதன் போது இறந்த உடலானது இருந்த நிலையில் உறக்கத்திற்கு தயார் செய்யப்படுகிறது. 

இவர்களின் நடைமுறை எகிப்திய மம்மிகளின் உருவாக்கத்தில் இருந்து வேறுபட்டது. இப்பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் பின்னர் இங்கு வாழ்ந்து அழிவடைந்த இன்கா இன மக்களின் வரலாறு வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது. 

உலக முடிவுநாள்.: மாபெரும் 10 அடையாளங்கள்....


"நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்."
(The holy Qur`an - 31:34)
 

புத்தளத்தில் தொடர்ந்து மழை - மக்களை மீட்கும் பணியில் கடற்படை (படங்கள்)


(அபூ நாதில்)


தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.  தெதுரு ஓயா, பத்துளு ஓயா, கடுபிடி ஓயா மற்றும் ஹெமில்டன் அளை  வழிந்தோடுவதால் புத்தளம் மாவட்டத்தில் 7 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

தரை போக்குவரத்து மற்றும் புகையிரத போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் பணியில் கடற் படை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 








 

site counter