அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 20 டிசம்பர், 2012

அரசின் தடையை மீறி நீதவான்களின் வருடாந்த மாநாடு!


shirani_CI

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அனுசரணையுடன் வருடாந்தம் நடைபெறும் நீதவான்களுக்கான மாநாட்டை அரசாங்கம் ரத்து செய்த போதிலும், அம்மாநாட்டை திட்டமிட்டபடி நடாத்த நீதவான்கள் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கம் இந்த மாநாட்டை ரத்து செய்த போதிலும், திட்டமிட்டபடி மாநாட்டை நடாத்த நீதவான்கள் தீர்மானித்துள்ளனர். நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த வருடாந்த மாநாடு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொள்வார். முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் இந்த மாநாட்டின் பிரதம சொற்பொழிவாளராக கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வருடாந்த நீதவான்கள் மாநாட்டிற்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சு நிதி அனுசரணை வழங்கி வந்ததாகவும், அரசியல் காரணங்களுக்காக இம்முறை அனுசரணை மறுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் தன்னார்வ அடிப்படையில் நீதவான்களின் பங்களிப்புடன் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter