அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 23 நவம்பர், 2012

நாளைய வரலாறு என்னைப்பற்றி மிகவும் தவறாக இருக்கும். யூதர்களை நான் ஏன் அழித்தேன் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள். -சர்வாதிகாரி ஹிட்லர்-

நாளைய வரலாறு என்னைப்பற்றி மிகவும் தவறாக இருக்கும். யூதர்களை நான் ஏன் அழித்தேன் என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள். -சர்வாதிகாரி ஹிட்லர்-

தேசிய ரீதியில் சாதனை படைத்த நிந்தவூர் மாணவனுக்கு ஆரிப் சம்சுடீன் வாழ்த்து!



-எம்.எம்.ஏ.ஸமட்-
தேசிய மட்டப் போட்டியில் இரு பதக்கங்களைப் பெற்று நிந்தவூர் பிரதேசத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை தேடிக் கொடுத்த நிந்தவூர் அல்- மதீனா வித்தியாலய மாணவன் ஆஷிக்கை மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் அம்மாணவனின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று வாழ்த்தியுள்ளார்.
அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற பரிதி வட்டம் வீசும் போட்டில் கலந்துகொண்டு தங்கம் பதக்கத்தினையும் குண்டெறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் இம்மாணவன் பெற்றுள்ளார்.
கிழக்கு மாகாணத்துக் கிடைத்த ஒரேயொரு தங்கப்ப தங்கம் இம்மாணவனினாலேயே பெறப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதற்கான போதிய வசதிகள் எதுவும் இல்லாத இப்பாடசாலையிலிருந்து போட்டில் கலந்து கொண்டு வெற்றியீட்டி தங்கம் பதக்கம் பெற்றது இம்மாணவனின் அயராத முயற்சியும் சாதனையுமாகும்.
பிரசேத்துக்குப் பெருமை தேடிக்கொடுத்த இம்மாணவனி்ன் வீடு தேடிச்சென்று அம்மாணவனுக்கு பரிசில்களும் வழங்கிய மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் இம்மாணவனின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவியளிக்கவுள்ளதாகவும் மாணவனிடம் உறுதியளித்துள்ளார்.
வாழக்கையில் வெற்றிபெறுபவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்துவது மனித நாகரிகமாகும் அதனை மாகாண சபை உறுப்பினர் புரிந்துள்ளமை போற்றத்தக்கதாகும்.

செவ்வாய் கிரகத்தில் வரலாற்று முக்கியத்துவமிக்க விடயம் - பூமியை அதிரவைக்கக்கவுள்ளதாம்..!




(தினகரன்)செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கியூரியா சிட்டி இயந்திரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். எனினும் அது குறித்து அவர்கள் மெளனம் காத்து வருகின்றனர்.

ஒருசில வாரங்களிலேயே சிகப்பு கிரகத்தில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்பது  குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வுள்ளது. கியூரியா சிட்டியின் மிக முக்கியமான ஆய்வு இயந்திரமான ‘சாம்’ ஊடாகவே இந்த புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கியூரியா சிட்டியின் இரசாயன ஆய்வுகூடமாக செயற்படும் ‘சாம்’ மூலம் செவ்வாய்க் கிரகத்தின் மண், வாயு மற்றும் பாறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ‘சாம்’ இயந்திரத்திற்கு உயிரினங்கள் இருப்பதற்கான அடிப்படை கட்டமைப்பை கண்டறியும் திறன் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அதனது சமீபத்திய கண்டுபிடிப்பு குறித்த தகவலை வெளியிட விஞ்ஞானிகள் மறுத்து வருகின்றனர். ஆனால், அது பூமியை அதிரவைக்கக்கூடியது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

“இந்த தரவு வரலாற்று புத்தகத்தில் பதியக்கூடியது. அது சிறப்பான ஒரு விடயம்” என கியூரியா சிட்டி இயந்திரத்தின் ஆய்வுக் குழுவின் தலைவர் ஜோன் கிரேட் சிங்கர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் புதிய கண்டுபிடிப்பு குறித்து எதிர்வரும் அமெரிக்க ஜியோபிசிக்கஸ் ஒன்றிய மாநாட்டில் வைத்து வெளிப்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்த மாநாடு எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி கலிபோர்னியாவில் ஆரம்பமாகவுள்ளது.

கியூரியா சிட்டியின் புதிய கண்டுபிடிப்பை உறுதி செய்ய அதை இருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளன. இதனாலேயே அதனை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2.5 பில்லியன் டொலர் செலவு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆறு சக்கரங்கள் கொண்ட கியூரியா சிட்டி இயந்திரம் கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் கொல்காட்டர் என்ற பகுதியில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இரண்டு ஆண்டு பரிசோதனைக் காலத்தைக் கொண்ட கியூரியா சிட்டியில் 10 வகை ஆய்வு இயந்திரங்கள் உள்ளன.

காஸா மக்களை இறைவன் தனது கையில் வைத்திருந்தான் - ஹமாஸ் தலைவர் தெரிவிப்பு




ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷால், “இஸ்ரேல் தனது இலக்கை எட்ட தவறியது” என தெரிவித்துள்ளார்.  இரு தரப்பு யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கெய்ரோவில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் காலித் மிஷால் இவ்வாறு குறிப்பிட்டார்.

“கடந்த 8 தினங்களாக காசா மக்களை இறைவன் தனது கையில் வைத்திருந்தான். இஸ்ரேல் தனது அனைத்து இலக்குகளில் இருந்து தோல்வியை கண்டது.” என்றார்.

இதன்போது யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு மத்தியஸ்தம் வகித்த எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கும் காலித் மிஷால் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். 

இதன்போது அவர் ஈரானுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். ஈரான் தமது ஆயுத சக்தியை பலப்படுத்தியதாக மிஷால் குறிப்பிட்டார். “எகிப்து தேர்வு செய்த அதன் தைரியம் மிக்க தலைவர் மொஹமட் முர்சிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எகிப்து பொறுப்புடனும் பலஸ்தீன மக்களின் தேவைகளை புரிந்து கொண்டும் செயற்பட்டது” என அவர் கூறினார்.

இஸ்ரேல் - காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையின்படி காசாவுக்கு பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. காசாவில் ஹமாஸ் அமைப்பு ஆட்சிக்கு வந்த பின் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் அந்த பகுதி இஸ்ரேலினால் முடக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய உடன்படிக்கையின்படி காசா எல்லைக்கான அனைத்து வாயில்களும் திறக்கப்படும் என மிஷால் கூறியுள்ளார். எனினும் யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் மீறுவது குறித்தும் காலித் மிஷால் எச்சரித்தார். “நீங்கள் உடன்பட்டால் நாமும் உடன்படுகிறோம். நீங்கள் உடன்படாவிட்டால் எமது கையில் ஆயுதம் இருக்கிறது. நாம் தொடர்ந்து ஆயுதங்களுடனேயே இருப்போம்” என்று மிஷால் கூறினார்.

சிரியா விவகாரத்தில் ஹமாஸ் அமைப்புக்கும் ஈரானுக்கும் இடையில் முரண்பாடு நிலவி வரும் நிலையிலேயே காலித் மிஷால் ஈரான் மீது நன்றி தெரிவித்தார். ஈரானின் பஜ்ர் 5 ரொக்கெட் மூலம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் வர்த்தக தலைநகரான டெல் அவிவ் மற்றும் ஜெரூசலம் வரை தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் - ஸர்மிலாவின் தந்தை (படங்கள்)




(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

'இந்த விடயத்தின் பாரதூரத் தன்மை எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை என்னால் இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் இந்தத் தவறுக்காக நான் இலங்கை முஸ்லிம் சமுதாயத்திடம் பொது மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். இது விடயமாக நான் எப்படியாயினும் எனது மகளுடன் தொடர்பை ஏற்படுத்தி ஏறாவூர் பள்ளி வாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துடன் பேசுமாறு வலியுறுத்துவேன், சம்மேளனத்தின் பிரதிநிதிகளான ஊர்ப்பிரமுகர்கள் எமது வீட்டுக்கு வந்து எங்களைச் சந்தித்து சுமுகமாகக் கலந்துரையாடியது எமக்குப் பெரும் ஆறுதலளித்திருக்கிறது என்று ஸர்மிலாவின் தந்தை கூறினார்.'

ஸர்மிலா ஸெய்யித்  தமிழோசை ஊடாக இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சுற்றுலாத்துறை வளர்ச்சியும் பொருளாதார நன்மையும் ஏற்படும் என்று கருத்துத் தெரிவித்ததன் பின்னர் இலங்கை முஸ்லிம் சமுதாயத்தினரிடையேயும் பொதுவாகவும் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் அவசர மாநாடு கூட்டப்பட்டு  ஆராயப்பட்ட பின்னர் இது விடயமாக மேற்படி ஸர்மிலாவிடம் விளக்கம் பெறுவதற்காக மௌலவிமார் உட்பட ஊர்ப்பிரமுகர்களைக் கொண்ட அடங்கிய ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

அந்தக் குழுவினரின் தொடர் நடவடிக்கையின் ஒரு கட்டமாக நேற்று மாலை மேற்படி ஸர்மிலா ஸெய்யித்தின் வீட்டுக்குச்சென்று சந்திப்பை நடத்தியபோதே ஸர்மிலாவின் தந்தை மேற்சொன்ன கருத்தை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து குழுவினரிடம் கூறிய போது,

'முழுமையாக நாம் இஸ்லாமிய மார்க்கத்திற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும், நமது செயற்பாடுகளால் புனித இஸ்லாத்திற்கு எதுவித களங்கமும் வந்து விடக்கூடாது.

எனது மகளைப் பின்புலத்திலிருந்து யாரோ பிழையாக வழி நடத்தி தங்களது நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அவரைப் பயன்படுத்த முயற்சிக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அந்த வழிக்கு எனது மகளை விட்டு விடாமல் மீண்டும் இந்த சமுதாயத்தில் வந்து இணைந்து நிம்மதியாக வாழ்வதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் செய்து தர வேண்டும் என்று அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். 

தற்சமயம் கொழும்பில் தங்கியிருக்கும் ஸர்மிலா நேற்று முன்தினம் மாலையிலிருந்து தங்களது குடும்பத்தாருடன் எதுவித தொடர்புகளையும் வைத்திருக்கவில்லை என்றும் அவரது தந்தை சொன்னார.



அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி அதிபராக ஏ.ஜி.எம்.தாவூத் மீண்டும் நியமனம்!



(பி.முஹாஜிரீன்)
கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி மீண்டும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
தொழிநுட்பக் கல்லூரியின் அதிபர் தொடர்பான சர்ச்சை காரணமாக மூடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட இக்கல்லூரிக்கு ஏற்கனவே அதிபராக இருந்த ஏ.ஜி.எம்.தாவூத் மீண்டும் அதிபராக தொழிற் பயிற்சித் திணைக்களப் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.றசான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இதில் கல்லூரியின் விரிவுரையாளர்கள் உட்பட கல்லூரியின் அபிவிருத்திக் குழுவினரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இத்தொழிநுட்பக் கல்லூரிக்கு சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரியில் சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளராகக் கடமையாற்றிய இறக்காமத்தை சேர்ந்த ஏ. ஜனூர்தீன் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 19 ம் திகதி முதல் தொழிநுட்பக் கல்லூரி ஆரம்பிக்கப்படதாகவும் கடந்த வாரம் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்த போதும் 19 ம் திகதி தொழிநுட்பக் கல்லூரி திறக்கப்படாமல் இன்றைய தினமே மீண்டும் ஏ.ஜி.எம். தாவூத் அதிபராக கடமையேற்றதுடன் கல்லூரியும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காஸா தாக்குதலைக் கண்டித்து தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் ஆர்ப்பாட்டம்!


காஸாவில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் மனித படுகொலை மற்றும் வன்முறைகளைக் கண்டித்து தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை தென்கிழக்கு பல்கலைகழக முன்றலில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் திரையிடப் பட்டால் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராடுவோம்; தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை!


விஸ்வரூபம் திரைப்படம் இலங்கையில் எங்கும் திரையிடக் கூடாது. மீறி திரையிட்டால் குறிப்பிட்ட திரையரங்குகளை முற்றுகையிட்டு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுப்போமென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.
அது வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;
கமல் ஹாஸனின் நடிப்பில் வெளிவர விருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிப்பதாகவும் இஸ்லாமியர்கள் பற்றிய தவறான எண்ணங்களை மக்கள் மத்தியில் விதைப்பதாகவும் எமக்கு செய்திகள் வெளி வந்துள்ளன.
இந்நிலையில் திரைப்படத்தின் விளம்பர காட்சி அமைப்புகள் கூட அரபி எழுத்தணி வடிவில் தான் அமைந்துள்ளன. இது ஒரு சமுதாயத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் செயலாகும். இதேபோல் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் தொடர்பாக தவறான எண்ணங்களை சினிமாக்களினூடாக பரப்புவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இதேவேளை, அகிம்சையையும், நல்லொழுக்கத்தையும் போதிக்கும் தூய்மையான மார்க்கத்தை சினிமாவின் மூலம் கொச்சைப்படுத்துவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளிலும் ஜமாத் தொடர்ந்து ஈடுபடுமென அச் செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

site counter