அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தின செய்தி

ශ්‍රි ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සභාපතිතුමාගේ නිදහස් දින පණිවුඩය

ප්‍රජාතන්ත්‍රවාදී නිදහස් රටක ජීවත්වීම ශ්‍රි ලාංකිකයෝ සියළු දෙනාම ආඩම්බර විය යුතු කරුණකි. යටත් විජිත පාලනයට නතුව තිබූ රටවල් නිදහස ලබා ගැනීමට නොයෙකුත් සටන් හා පරිත්‍යාග කිරීමට සිදුවිය. අප රටේ නිදහස වෙනුවෙන් කැපවූ සියළු දෙනා සතුටින් සමරමු.

අප 66 වෙනි නිදහස් දිනය සමරන අවස්ථාවේ අප රට විවිධ පීඩනවලට ලක්වී ඇති බව පෙනේ. මෙම තත්වය දුරදිග යාමට නොදී අපගේ ප්‍රශ්න අපම විසඳා ගන්නා ප්‍රජාතන්ත්‍රවාදී යාන්ත්‍රනයන් ස්ථාපිත කල යුතුය. ශ්‍රි ලංකාවේ ජීවත්වෙන සියළු දෙනාම මෙය අපේ රට යන හැඟීමෙන් මෙරටේ නිදහසට අභියෝගවන කිසිම බාහිර බලවේගයක් රට තුලට ප්‍රවිශ්ට වීම අනුමත නොකරමු, යනුවෙන් හඬ නගන තත්වයක් උදාවිය යුතුය. අප ලද නිදහස සම්පූර්ණ වන්නේ එවිටය.

66 වෙනි නිදහස සමරන මෙරටේ සියළු වැසියන් හට මාගේ සුභාශිංෂණය සතුටින් පුද කර සිටිමි

උස්තාද් රෂීද් හජ්ජුල් අක්බර්
සභාපති ශ්‍රි ලංකා ජමාඅතේ ඉස්ලාමි

ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தின செய்தி

சுதந்திரமான ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்பது இலங்கையர் அனைவரும் பெருமைபடக் கூடிய ஒன்று. காலணித்துவ ஆதிக்கத்திலிருந்த  நாடுகள் பல்வேறு போராட்டங்கள், அர்ப்பணிப்புகளின் பின்னரே சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. எமது நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அனைவரையும் பெருமையுடன் நினைவுகூர்வோம்.

நாம் 66 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், எமது நாடு பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. இந்த நிலைமையைத் தொடர விடாமல் எமது பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ளும் ஒர் ஆரோக்கியமான ஜனநாயக பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும். இலங்கையில் வாழும் சகல இன மக்களும், “இலங்கை எமது நாடு. இந்நாட்டின் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கும் எந்த ஒரு வெளித் தலையீட்டையும் அனுமதிக்கமாட்டோம்” என்று கூறும் நிலை வரவேண்டும். அப்போதுதான் நாம் பெற்ற சுதந்திரம் நிறைவுபெறும். 

66வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
தலைவர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி








ශ්‍රි ලංකා ජමාඅතේ ඉස්ලාමි සභාපතිතුමාගේ නිදහස් දින පණිවුඩය ප්‍රජාතන්ත්‍රවාදී නිදහස් රටක ජීවත්වීම ශ්‍රි ලාංකිකයෝ සියළු දෙනාම ආඩම්බර විය යුතු කරුණකි. යටත් විජිත පාලනයට නතුව තිබූ රටවල් නිදහස ලබා ගැනීමට නොයෙකුත් සටන් හා පරිත්‍යාග කිරීමට සිදුවිය. අප රටේ නිදහස වෙනුවෙන් කැපවූ සියළු දෙනා සතුටින් සමරමු. අප 66 වෙනි නිදහස් දිනය සමරන අවස්ථාවේ අප රට විවිධ පීඩනවලට ලක්වී ඇති බව පෙනේ. මෙම තත්වය දුරදිග යාමට නොදී අපගේ ප්‍රශ්න අපම විසඳා ගන්නා ප්‍රජාතන්ත්‍රවාදී යාන්ත්‍රනයන් ස්ථාපිත කල යුතුය. ශ්‍රි ලංකාවේ ජීවත්වෙන සියළු දෙනාම මෙය අපේ රට යන හැඟීමෙන් මෙරටේ නිදහසට අභියෝගවන කිසිම බාහිර බලවේගයක් රට තුලට ප්‍රවිශ්ට වීම අනුමත නොකරමු, යනුවෙන් හඬ නගන තත්වයක් උදාවිය යුතුය. අප ලද නිදහස සම්පූර්ණ වන්නේ එවිටය. 66 වෙනි නිදහස සමරන මෙරටේ සියළු වැසියන් හට මාගේ සුභාශිංෂණය සතුටින් පුද කර සිටිමි උස්තාද් රෂීද් හජ්ජුල් අක්බර් සභාපති ශ්‍රි ලංකා ජමාඅතේ ඉස්ලාමි 

 ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தின செய்தி சுதந்திரமான ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்பது இலங்கையர் அனைவரும் பெருமைபடக் கூடிய ஒன்று.

நிந்தவூரில் இடம்பெற்ற 66வது சுதந்திர தின நிகழ்வுகள். (பிரத்தியேகப் படங்கள்)

(சுலைமான் றாபி)
இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தினத்தினையொட்டி இன்று (04.02.2014) நிந்தவூரின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.  அந்த வகையில் இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் நிந்தவூர் கிளை  ஏற்பாடு செய்த பிரதான நிகழ்வு அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையிலும், அதனைத்தொடர்ந்து நிந்தவூர் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நிகழ்வு அதன் அலுவலக வளாகத்திலும், அதனைத்தொடர்ந்து நிந்தவூர் பிரதேச சபையிலும் , மாவட்ட தொழிற்பயிற்சி  அதிகார சபையிலும் இடம்பெற்றன. 

இதேவேளை இந்த சுதந்திர நிகழ்வின் சிறப்பம்சமாக பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட சுதந்திர தின ஊர்வலமும் இந்நிகழ்வுகளை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்

அல் - ஹம்றா வித்தியாலயத்தில், எஸ். ஆர். டீ பவுண்டேசனின் ஏற்பாட்டில், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் பெரீஸ் முஹம்மட் அவர்களின் வழிகாட்டலில், பாடசாலை வழாகத்தில் 'சிரமதான' நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

28.12.2013 ஆம் திகதி சனிக்கிழமை, காலை 08.30 மணியலவில், அல் -  ஹம்றா வித்தியாலயத்தில், எஸ். ஆர். டீ பவுண்டேசனின் ஏற்பாட்டில், வித்தியாலய அதிபர் ஏ. அமீர் அலி தலைமையில், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் பெரீஸ் முஹம்மட் அவர்களின் வழிகாட்டலில், பாடசாலை வழாகத்தில் 'சிரமதான' நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி எம். எச். எம். பைஸல் அமீன் அவர்களும் சமுக சேவையாளர் எ. எ. சீ. எம். நிசாம் மற்றும் வித்தியாலய பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர், பிரதேச மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

நிந்தவூர் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் (IT Campus) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. -பிரதம அதிதி பைஸால் காசீம் எம்.பி-



நிந்தவூர் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் (IT Campus) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

-பிரதம அதிதி பைஸால் காசீம் எம்.பி-         ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் கோட்டக் கல்விக் காரியாலயமும்> ஐ.ரி.கெம்பசும் இணைந்து நடாத்திய பட்டமளிப்பு (சான்றிதழ் வழங்கும்) விழா இன்று (02.02.2014) நிந்தவூர் அல்- மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் நடைபெறறறது.
ஐ.ரி.கெம்பசின் முகாமைத்துவப் பணிப்பாளர் யூ.முஜிபுர் றகுமான் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன்> நிந்தவூர்க் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

அரசியல்வாதிகளின் பிரிவினையை வைத்துக் கொண்டு கல்வியைப் பாழடிக்கும் அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். -மாகாண அமைச்சர் மன்சூர் அதிகாரிகள் மத்தியில் சூழுரை-

அரசியல்வாதிகளின் பிரிவினையை வைத்துக் கொண்டு கல்வியைப் பாழடிக்கும் அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்.
              -மாகாண அமைச்சர் மன்சூர் அதிகாரிகள் மத்தியில் சூழுரை-
               (ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்;)
' அரசியல்வாதிகளின் பிரிவினையை வைத்துக் கொண்டு, கல்வியினைப் பாழடிக்கும் விதத்தில் செயற்படும் ஒரு சில அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். ஒரு சில அதிகாரிகள் தமது சுயநலன்களுக்காக இடமாற்றங்களைச் செய்து விட்டு, அவற்றைக் கருத்து முரண்பாடுகளுடன் காணப்படும் அரசியல் தலைவர்களின் தலைமீது சுமத்துவது வளக்கமான செயலாகி விட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்' என மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறைக் கல்வி அபிவிருத்தி தொடர்பான உயர்மட்ட மாநாடு நேற்று முதல் நாள் சம்மாந்துறை வலயக் கல்விக் காரியாலயத்தில் இடம் பெற்றது.
மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சமூகசேவைகள், சிறுவர் நன்நடத்தைப் பராமரிப்பு, விளையாட்டுத் துறை, கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் நுட்ப அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூரின் ஏற்பாட்டிலான இம்மாநாடு சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் டாக்டர்.உமர் மௌலானா தலைமையில் இடம் பெற்றது.

சம்மாந்துறையின் கல்வியை மேலோங்கச் செய்யும் அதிபர்கள் மாநாடு. -மாகாண அமைச்சர்கள், உள்ளுர் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு-

மாகாண அமைச்சர் மன்சூரின் ஏற்பாட்டில்
சம்மாந்துறையின் கல்வியை மேலோங்கச் செய்யும் அதிபர்கள் மாநாடு.
         -மாகாண அமைச்சர்கள், உள்ளுர் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு-

                 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சம்மாந்துறையின் கல்வியை மேலோங்கச் செய்யும் அதிபர்கள் மாநாடு நேற்று ( 28 ) சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, சுகாதாரம்,மற்றும் தெழில் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

site counter