
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மஹிந்த சிந்தனையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப் பொருளில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'கிராமிய மக்கள் ஒன்று கூடலும், நடமாடும் சேவையும்' நேற்று வீரமுனை, சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதாரம்,சுதேச வைத்தியம், மற்றும் சமூகசேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் பிரதேச சபை உதவித் தவிசாளர் யூ.கே.எம்.றகுமான், அமைச்சரின் செயலாளர்களான சட்டத்தரணி.ஏ.எல்.சஃபீர், யூ.எல்.எம்.பஸீர், ஏ.எம்.தபீக், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளினால் மக்களின் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு, தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இங்கு மாணவர்களின் கண் கவர் கலை கலாச்சார நிகழ்சிகள் இடம் பெற்றதோடு, சிறுவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இங்கு அமைச்சர் மன்சூர் உரையாற்றுகையில் ' தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற வீரமுனை, மல்வத்தை, வளத்தாப்பிட்டி எல்லாமே சம்மாந்துறைதான். சம்மாந்துறைப் பிரதேசத்திற்குட்பட்ட 51 கிராமசேவகர் பிரிவுகளிலுமுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒரு தாய் மக்கள் போன்று ஒற்றுமையாக வாழ வேண்டும். அவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்தால் தான் எதிர்காலத்திலாவது நாம் இழந்தவைகளைப் பெற்று, சுபீட்சமடைய முடியும்' எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக