அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

நிந்தவூர் தொழிற் பயிற்சி காரியாலய இடமாற்ற சர்ச்சை; கிழக்கு மாகாண சபையில் பிரேரணை!


(எம்.எம்.ஏ ஸமட்)
Ariff (1)நிந்தவூரிலுள்ள அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி தலைமைக் காரியாலயம் அம்பாறை நகருக்கு இடமாற்றப்படுவதை கண்டித்து இம்மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வில் விஷேட ஆட்சேபனைப் பிரேரனையொன்றை முன்வைக்கவுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.
இப்பிரேரனை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இருப்பினும் அரச நிறுவனங்களின் எந்தவொரு தலைமைக் காரியாலயமும் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், இற்றைக்குப் 17 வருடங்களுக்கு முன்னர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் முயற்சியினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் இந்த அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சித் தலைமைக் காரியாலயம் நிந்தவூரில் நிறுவப்பட்டது.

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலக விவகாரம் மு.கா. வுக்கு பலப்பரீட்சை

நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலக விவகாரம் மு.கா. வுக்கு பலப்பரீட்சை
 
தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் 11 நிலையங்களும் சிங்கள பிரதேசங்களில் 6 அல்லது அதற்குக் குறைவான நிலையங்களுமே இயங்கி வருகின்றன. இவற்றுள் தமிழ் முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பயிற்சி நிலையங்களிலே 600 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர். சிங்களப் பிரதேசங்களில் 200 இற்கும் குறைவானவர்களே கற்கின்றனர். இப்படியிருக்கையில், மாணவர்களும் கிராமிய தொழிற்பயிற்சி நிலையங்களும் குறைவாகவுள்ள ஒரு பகுதிக்கு நிர்வாக அலுவலகத்தை மாற்றுவது – வியாபாரம் நடக்காத ஐயர் தெருவுக்கு ஆட்டிறைச்சிக் கடையை கொண்டு சென்ற கதையாகிவிடாதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
நிந்தவூர் கலீல் ஜிப்ரான்


நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலக இடமாற்றம் தொடர்பான சர்ச்சை இனிதே முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முயற்சிக்கு கைமேல் பலனாக அமைச்சர் வாக்குறுதி அளித்துவிட்டதால் இப்படியான நினைப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், உண்மையில் இப் பிரச்சினை இன்னும் தீரவில்லை. இப்போதுதான் மிகவும் சிக்கலானதாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் மாறியிருக்கின்றது.
அரச சேவைக்குள் இனவாத அரசியலின் தலையீடும் சிறுபான்மை சமூகத்திற்குள் வளர்த்து விடப்பட்டிருக்கின்ற சமூதாய அக்கறையின்மையும் காட்டிக் கொடுப்புக்களும்… தென்கிழக்கு மக்களிற்கு மறைந்த தலைவர் அஷ்ரப் விட்டுச் சென்ற ‘அமானிதத்தை’ அம்பாறைச் சிங்களவர்களுக்கு தவணை முறையில் பறிகொடுக்கும் அபாய நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றது.

site counter