இலங்கைக்கான அமெரிக்க நிலையத்தின் ஊடகத் துறை அதிகாரிகளுக்கும், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்களுக்குமான சந்திப்பு.
(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
+(2).jpg)
'உள்ளுர் இணையத்தள ஊடகவியலாளர்களின் சமூகத் தொடர்பாடல்களும், அவர்கள் எதிர் கொள்ளும் சவால்களும்' பற்றி இச்சந்திப்பின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கான அமெரிக்க நிலையத்தின் தகவல்.ஊடகத்துறை அதிகாரி கிறிஸ்தோபர் டீல், அமெரிக்க நிலைய தகவல் வள அதிகாரி லிண்டா பாக்கர், தகவல் வெளிக்கள அதிகாரி சாமினி சின்னையா ஆகியோருடன், அம்பாரை மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், உள்ளுர் இணையத்தள ஊடகவியலாளர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
உள்ளுர் இணையத்தள ஊடகவியலாளர்கள், மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளும், சவால்களும் பற்றி விரிவாக ஆராயப்பட்டதன் இறுதியில் இங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க நிலையத்தின் தகவல், ஊடகத்துறை அதிகாரி கிறிஸ்தோபர் டீல் ' ஒவ்வொரு மாகாணங்களிலுமுள்ள ஊடகவியலாளர்களுக்குத் தேவையான நவீன வசதிகளுடன் கூடிய பயிற்சிகளை நாம் வழங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றும், இப்பயிற்சி நெறிகளில் திறமை காட்டும் ஊடகவியலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி வழங்கவும் யோசித்துள்ளோம்' எனவும் தெரிவித்தார்.