அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 13 அக்டோபர், 2012

கடல் அலையை பயன்படுத்தி மின் உற்பத்தி – சம்மாந்துறை முஸ்லிம் இளைஞன் சாதனை


எமது நாட்டில் மட்டுமல்லாது முழு உலகமுமே இலத்திரணியல் மயமான இக் காலகட்டத்தில் மின் பாவனையாளர்களின் அன்றாடத் தேவை மிகவும் மிகைத்துள்ள நிலையில் இதன் உற்பத்தியிலே மிகவும் தேவை அதிகமாகக் காணப்படுகின்றது. இவற்றை நிபர்த்தி செய்யும் வகையில் பல முயற்சிகள் காணப்பட்டபொழுதிலும் பல்வேறுபட்ட இயற்கை செயற்கைச் சவால்களை எதிர்நோக்கிக்கொண்டிரு
க்கிறோம். அந்தவகையில் இன்று இலங்கையைப் பொறுத்தவகையில் நீர்மின் உற்பத்தி அதிகளவில் காணப்பட்டபொழுதிலும் அதிகவறட்சி காரணமாக மின்உற்பத்தி மிகவும் குறைவடைந்த நிலையில் மாற்றுவழிகளில் இதனை நிவர்த்தி செய்யும்பொருட்டு சில உற்பத்திகள் மேற்கொண்டபொழுதிலும் அதிலும் பல சிக்கல்கள் நிகள்வதுடன் போதியளவு உற்பத்திகளும் கிடைப்பதில்லை.

அதிலும் இன்று அனல்மின் உற்பத்தியைப் பொறுத்தவகையில் பாரிய முதலீட்டுடன் மக்கள் தேவையை உணர்ந்து நிர்மாணித்தபொழுதிலும் அதனால் சூழல் வழிமண்டலப் பாதிப்புகழுடன் உற்பத்திச் செலவும் அதிகளவிலேயே காணப்படுகின்றன. இந்த இக்கட்டான நிலைக்கு பாவனையாளர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில் புதிய ஒரு முறையை ஒருவர் மிக நீண்டகாலமாக தனக்குள்ளே வைத்திருந்துள்ளார் இவரை தாங்கள் இப்போதுதான் இனங் கண்டுபிடித்துள்ளோம்’. இதுபற்றி அவரை நேர்கண்டபோது இவ்வாறு பல நீண்ட கதைகளை விளக்கியுரைத்தார்.

தான் கடலலையைப் பயன்படுத்தி புதிய தொழில்ணுட்பத்தில் மின்உற்பத்தியை மேற்கொள்ளும் இத்துணிகரமான முயற்சியின் சிந்தனையில் 2004ம் ஆண்டுக்கு முன்னர் இருந்தே இச்சிந்தனை எனக்குள்ளே உள்வாங்கப்பட்டது.இதற்கான காரணங்கள் பல உண்டு அவற்றில் இறுக்கமான குடும்பப் பொருளாதார அழுத்தங்களின் பாரிய தாக்கங்களுடன் மின்கட்டணச்சுமையின் தாக்கங்களும் மேலிட்டது.

அத்துடன் அடிக்கடி மின்வெட்டுகளும் கட்டண உயர்வுகளும் வாழ்வாதாரக் கல்வி உரிமைகளையும் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தின.இதன் விறக்திகளின் உச்சநிலைகளும் எதிர்ப்புக்கள் தோல்விகளும் இரண்டறக் கலந்து அலையின் ஒதுக்கங்களாக வாழ்வில் அலைமோதின. இவற்றின் வெழிப்பாடுகளாக இறைவனின் வரப்பிரசாதமாக இந்ஞானவழி ஊற்றெடுத்தது.இதன்பேரில் தான் தனிமையாகவே சிந்தித்துச் செயற்பட்டேன்.அக்காலத்தில் எவராலும் எதிர்பாராச் சுனாமி பேரலை எதிர்கொண்டதால் எனது திட்டம் கைகூடாதென்றெண்ணிக் கைவிட்டாலும் எனது சிந்தனையைக் கைவிடாது மாற்றுவழிகளை எப்போதும் சிந்தித்துக் கொண்டேயிருந்தேன்.அதன் மாதிரி வடிவங்களையும் சிறப்புத் தெழில்நுட்பத்தினூடாக கற்பனையில் யதார்த்தங்களை உற்றுநோக்கி வடிவமைத்து இதன் சாத்தியம்பற்றி தனது புத்திக்கும் சக்திக்கும் உட்பட்டவகையில் அலசிஆராய்ந்து அனைத்துச் சவால்களையும் முறியடித்து பலஅமைப்பு முறைகளில் பல மாற்றங்களையும் உருவாக்கி வடிவம் கொடுத்தேன் இறுதியாக வடிவமைத்த வடிவத்தில் முழுநம்பிக்கையும் அதிக சாத்தியமும் தென்பட்டது இதன் மாதிரியைத் தனது பொருளாதார வசதிக்குட்பட்டவாறு மிகவும் எழிதாய் வடிவமைத்து கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் இளைஞர் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மகுடம் சூட்டுவழா போட்டி இறுதிச் சுற்றுக்குக் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. இதன்வாயிலாக தான்அடையாளம் காணப்பட்டேன்.இப்போட்டியின்இறுதிமுடிவையும் எதிர்பார்த்தவண்ணம் உள்ளேன்.

தான் இதனை இவ்வளவுகாலமும் இலைமறையாக வைத்திருந்ததன் மர்மமென்ன? தேவைகள் நிறைந்திருந்தும் இதனை ஏன் மக்கள்மயப்படுத்தி உரிய பலன்களைக் கொடுக்கவில்லை? என்று வினவியபோது,

தான் இதனை இவ்வளவுகாலமும் மர்மமாக வைத்திருந்ததற்கான பல காரணங்கள் உண்டு அவற்றில் சில காரணஙங்களாக..

01.தான் இதனை முழுமையாக வடிவமைத்து நிரூபித்துக் காட்டுவதற்கு முயற்சித்துப் பார்ப்பதற்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் அற்றவனாகக் காணப்பட்டேன்.

02.இவற்றைஅரைகுறையாக முயற்சிக்கப்போனால் இதன் முயற்சி வீணாகுவது மாத்திரமல்லாது பல எதிர்ப்புகளையும் சவால்களையும் எதிர்நோக்கவேண்டிய சூழல் காணப்பட்டது.

03.எனது இம்முயற்சிக்குத் தேவையான அடிப்படை அறிவேதும் போதாமல் இருந்ததால் இதனை ஏற்படுத்தித் தனது நிலமையை வளர்த்துக்கொள்ள நீண்டகாலமும் தேவைப்பட்டது. இதனைக் குறுகிய காலத்துக்குள் வளர்த்துக்கொள்ளப் போதிய பணவசதியோ பக்கபல துணைவசதிகளோ காணப்படவுமில்லை.

04.இவைகளுக்கப்பால் தான் இவ்வளவு முயற்சிசெய்த இந்தமுயற்சியை தொழில்நுட்பத் திருடர்களும் தனியாள் சுயநலதாரர்களால் சூரையாடப்படாமலும் இதனைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் திடீரைன்று இதனை அறிமுகம் செய்யவில்லை.

தற்போது எமது நாட்டிலும் பல நாடுகளிலும் காணப்படுகின்ற மின்சாரத்தேவையை நிவர்திக்கும் வகையில் எனது இந்த முயற்சியை சும்மா வைத்துக் கொண்டு இருப்பது எவருக்கும் பிரயோசணமில்லை என்பதால் தற்போது ஏற்பட்டுள்ள அதிக மின்தேவையைப் பொருட்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வின் சுமையில் தான் ஒரு துணைப்பங்காளியாக மாறி உதவும் வகையிலும் இதனை நிர்மாணிக்க முன்வந்துள்ளேன்.ஆனால் இவற்றின் முதற்ட்டத்தினை நிர்மாணித்து இதன் உற்பத்திச் சாத்தியத்தை நிரூபித்துக் காட்ட சுமார் 15 தொடக்கம் 20 இலட்சமாவது குறைந்தது தேவைப்படும். இதனை ஈடுசெய்யுமளவு என்னுடைய பொருளாதாரச் சக்தி போதாமையால் தான் இதனைச் சம்மந்தப்பட்ட அமைச்சரவைக்கும் அரச தனியார் நிறுவன உதவியாளர்களிடமிருந்தும் இதன் உதவியை மிகவிரைவில் எதிர்பார்க்கிறேன்.

இதுமுழுமையாக சாத்தியமாகுமிடத்து நாட்டின் பொருத்தமான பல்வேறு இடங்களிலும் அமைக்கமுடியும். எனவே இதன் முதற்கட்ட முயற்சிக்கு உதவுவதினூடாக இம் மின்உற்பத்தித் தேவையின் நிலையை சீர்செய்ய என்னால் உதவமுடியும்.இதேவேளை தான் வெறுமெனே தனியார் நிறுவனங்களுக்கு விற்று அதிகஇலாபம் தேடுவது எனது நோக்கமல்ல ஆனால் அரச அரசதனியார் நிறுவனங்களோ இதற்கு உதவுமாயின் முதலீட்டாளர்களையோ முயற்சியாளர்களையோ பொதுமக்களையோ பாதிக்காதவாறு தான் ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் அடிப்படையிலேயே இதனை உருவாக்குவேன். இதன்போது சம்பந்தப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கோ வதிவிடச் சூழல்களுக்கோ பாதிப்புக்களை ஏற்படுத்தாது மிகவும் பாதுகாப்புடனும் அவதானத்துடனும் நிர்மாணிக்க உத்தேசித்துள்ளேன்.
தாங்கள் அனைத்துத் தரப்பாரும் இதற்குப் பூரண சம்மதமும் ஒத்துழைப்பும் தந்து உதவவேண்டும். கடலும் ஆபத்தானது மின்சாரமும் ஆபத்தானது எல்லா ஆபத்துக்களையும் கடந்து இதனை சாதிக்க இறைவன் துணை நிற்கட்டும்.

இதுவரை வங்கியில் அடகுவைத்த பல இலட்சங்களின் வட்டித் தொகைமட்டும் 40-50000 ரூபாய்வரை உள்ளதுடன் மீட்கப்படாதவையும் இன்னும் எனக்கு உண்டு என்பது மிகக் குறிப்பிடத்தக்கது.

A.L.M.MARSOOK (மர்சூக்) மக்கள் வங்கிக் கிளை

106/1B புளக் ‘த’ கிழக்கு 00064 சம்மாந்துறை.

ஹிஜ்றா 1ம் வீதி க.இல.064200140028275
 — with Hajjul Zamaan.

போதை தருவதால் தடை செய்யப்பட்ட கொரெக்ஸ் இருமல் மருந்து. அநுராதபுர பாமசி ஒன்றில் கொள்ளை.


அநுராதபுரம் மருந்தகம் (பாமசி ) ஒன்றிலிருந்து தடைசெய்யப்பட்ட கொரெக்ஸ் இருமல் மருந்து போத்தல்கள் திருடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் போதை ஏற்படும் என்பதற்காக சிலர் இந்த மருந்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்ததை அடுத்து இந்த மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மருந்துக்கு அடிமையான சிலரே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அநுராதபுரம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

அல்ஆலிம் புதிய பாடத் திட்டத்தில் பாரிய குளறுபடி; மாணவர்களுக்கும் பெரும் அநீதி!


அல்ஆலிம் புதிய பாடத் திட்டத்தில் பாரிய குளறுபடி; மாணவர்களுக்கும் பெரும் அநீதி!

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அல்ஆலிம் பரீட்சைகளுக்கான பிரமாணங்களும் திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களும் சம்பந்தமான கை நூலில் பல முரண்பாடுகள் காணப்படுவதோடு அறபுக் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கு பாரிய அநீதிகளும் எற்படுத்தப்பட்டுள்ளன என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக உலமா கட்சித் தலைவர முபாரக் மௌலவி முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
“மேற்படி திணக்களத்தால் அண்மையில் அல்ஆலிம் பரீட்சைகளை முதவஸ்ஸித்தா மற்றும் ஸானவிய்யா என்றும் பெயர் மாற்றப்பட்டது சம்பந்தமாக கைநூல் ஒன்று வெளியிடப்பட்டது.
இதில் பக்கம் 16ல் திணக்கள பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி அவர்கள் எழுதியுள்ள செய்தியில் ‘இப்புதிய பாடத்திட்டம் 8 வருடங்களை உள்ளடக்கியதாக வரையப்பட்டுள்ளது என்றும் மூன்று வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் அல்ஆலிம் முதவஸ்ஸிதா பரீட்சைக்கும், 5 வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் ஸானவிய்யா பரீட்சைக்கும் 8 அல்லது 9 ஆண்டுகளை பூர்த்தி செய்தவர்கள் அல்ஆலிம் ஜாமியா பரீட்சைக்கும் தோற்றுவதற்கு தகுதியுடையவர்கள்’ என கூறப்பட்டுள்ளது.
இங்கு குளறுபடி என்னவென்றால் மேற்படி கைநூல் அல்ஆலிம் முதவஸ்ஸத்தா மற்றும் ஸானவிய்யா சம்பந்தமானது என்றே முகப்பில் தலைப்பிட்டு விட்டு இது 8 வருடங்களை உள்ளடக்கியுள்ளது என கூறுவது முரண்பாடாக உள்ளது.
அத்துடன் 8 அல்லது 9 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் அறபு மதுரசா எதுவும் இலங்கையில் இல்லாத நிலையில் 9 வருடங்கள் என கூறுவது 8 வருட பாடத்திட்டம் என்பதற்கும் முரண்பாடாக உள்ளது. அல்ஆலிம் ஜாமியாவுக்குரிய பாடத்திட்டங்கள் இல்லை. ஆகவே அல்ஆலிம் மு மற்றும் ஸ என்பவை 5 வருட பாடத்திட்டம் என்பதே சரியானது.
அத்துடன் ஒரு மாணவர் அறபு கல்லூhரியில் இணைந்து 3 வருடத்தில் க. பொ. த சா. தரப்பரீட்சைக்கும் அல்ஆலிம் முதவஸ்ஸித்தா பரீட்சைக்கும் தோற்ற வேண்டும் என பக்கம் 49ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் அறபு மொழி கற்கத்தொடங்கி மூன்று வருடங்களில் மேற்படி பரீட்சைக்கு தோற்றுவது என்பது சாத்தியமாகாது மட்டுதல்ல அவனது அறிவுத்தரத்துக்கு பாரிய சவாலாகவும் உள்ளது.
காரணம் மேற்படி பரீட்சைக்கென குறிப்பிட்டுள்ள பாடங்களில் தப்சீர் ஜலாலைன் என்பது பெரும்பாலும் அறபு மதுரசாக்களில் 4 அல்லது 5ம் ஆண்டிலேயே கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில் அறபுக்கல்வியில் 3 ஆண்டுகளை பூர்த்தி செய்த மாணவன் இந்தப்பெரிய பாடத்திட்டத்தை எவ்வாறு உள்வாங்க முடியும்? அதுவும் அவன் க.பொ.த.சா.தர பரீட்சையையும் அதே ஆண்டில் எழுதுவது என்றால் இதனை விட பெரிய அநியாயம் இருக்க முடியாது.
பொதுவாக அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு க.பொ.த.சா.தர பரீட்சைக்குப் படிப்பதற்கே நேரம் போதாது என அவதிப்படும் நிலையில் அறபுக்கல்வி கற்க வந்த மாணவனின் தலையில் ஒரே ஆண்டில் க.பொ.த.வும் ஆல்ஆலிமும் எழுத வேண்டும் என்பது குருவியின் தலையில் பாறாங்கல்லை வைத்ததற்கு சமமானதாகும். இதே போல்தான் அவன் உயர்தரம் எழுதும் போது அல்ஆலிம் ஸானவிய்யா எழுத வேண்டும் என குறிப்பிட்டிருப்பதுமாகும்.
ஆக அறபு மதுரசாவில் கற்கும் மாணவன் ஒருவன் க.பொ.த.சா/த, உ/த, அல்ஆலி;ம் முதவஸ்ஸித்தா, ஸானவிய்யா, தர்மாச்சார்ய பரீட்சை மற்றும் மௌலவி தராதர பரீட்சை என பல பரீட்சைகளுக்கு முகம் கொடுக்கிறான். இதன் மூலம் மதுரசாக்களுக்கு மாணவர்கள் செல்லக் கூடாது என்றும் அவ்வாறு சென்றாலும் இத்தகைய பாறாங்கற்களை சுமக்க முடியாமல் ஓடி விட வேண்டும் என்பதையும் ஊக்கமளிப்பது போலவே தெரிகிறது. இத்தகைய அநியாயத்தை அகில இலங்கை உலமா சபையும் கண்களை மூடிக்கொண்டு அங்கீகரித்துள்ளமை கவலைக்குரியதாகும்.
இது போன்ற பல அநியாயங்களும் முரண்பாடுகளும் மேற்படி பாடத்திட்டத்தில் காணப்படுகின்றன. முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் இந்தத்தவறுகளையும் அநியாயங்களையும் சுட்டிக்காட்ட உலமா கட்சி தயாராக உள்ளது” என மௌலவி முபாறக் தெரிவித்துள்ளார்.

திவிநெகும’ – மதில் மேல் பூனையாக ரவூப் ஹக்கீம்! மௌனம் களைந்து பொறுப்புக் கூறுவாரா?



திவிநெகும சட்ட மூலம் மாகாண சபைகளில் அங்கிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அச்சட்ட மூலம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இச்சட்ட மூலத்தை பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் 09.10.2012 அன்று முன் வைத்துள்ளார். இச்சட்ட மூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இந்த விவாதங்களில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றது என்பது அரசியல் அவதானிகளின் கவனத்ததை பெரிதும் திசை திருப்பியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தார்கள். அப்போது அச்சட்ட மூலத்திற்கான இறுதி முடிவினை எடுப்பதற்கு தலைவர் ரவூப் ஹக்கீம் நாடு திரும்பியதும், ஆராந்து முடிவெடுப்போம் என்று கட்சியின் செயலாளர் மற்றும் பிரதிச் செயலாளர் கிழக்கு மாகாண சபையில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்ட போதிலும் அவ்வுறுப்பினர்கள் அச்சட்ட மூலத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தனர்.
திவிநெகும சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் கொண்டு வரப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளிநாட்டில் இருந்தார். இப்போது பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் முன் வைக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் நாட்டில் இருந்து கொண்டிருக்கின்றார். இந்நிலையில் ரவூப் ஹக்கீம் என்ன முடிவை எடுக்கப் போகின்றார் என்பது அவரின் எதிர்கால அரசியலுக்கு முக்கியத்துவம் வாந்ததாகும்.
ஏனெனில், இச்சட்ட மூலத்திற்கு கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து இருந்த போது பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ரவூப் ஹக்கீம் (எஸ்.எம்.எஸ்.) குறுந் தகவல் மூலமாக அறிவித்ததாகவும் கூறப்பட்டன. தலைவர் இச்சட்ட மூலத்தைப் பற்றி எதுவும் எங்களிடம் கூறாததால், இச்சசட்டம் சிறுபான்மையினருக்கு பாதிப்பாக இருக்காது என்று கருதி திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று முஸ்விம் காங்கிரஸைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபையின அமைச்சர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
திவிநெகும சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட போது தமது தலைவருடன் தொலைபேசியில் கதைத்ததாகவும், பின்னர், தலைவரின் கருத்துக்கு அமைவாக சட்ட மூலத்திற்கு கால அவகாசம் கோருமாறு குழுத் தலைவர் ஜெமீலிடம் கேட்டுக் கொண்டதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இக்கருத்துக்களுக்கு விடை அளிக்க வேண்டிய பொறுப்பு ரவூப் ஹக்கீமுக்கு இருக்கின்றது. வழக்கம் போன்று மௌனமாக இருந்து விட முடியாது. வழக்கம் போன்ற நடைமுறையை ரவூப் ஹக்கீம் பின்பற்றுவாராயின் அதற்காக அவர் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியேற்படும்.
இச்சட்ட மூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் காட்டிய அவசரம் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸின் மூலமாக பெற்றுக் கொள்வதற்கான தேர்தல் என்று ஆவேசப்பட்டு பேசிய போதிலும், முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸால் பெற்றுக் கொள்ள இயலவில்லை. இந்த அதிருப்தி மக்கள் மத்தியில் குறையாத நிலையில் திவிநெகும சட்ட மூலம் அந்த அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செதுள்ளது.
ஆதலால், ரவூப் ஹக்கீம் விடை கூற வேண்டிய கட்டாயம் உள்ளது. ரவூப் ஹக்கீமின் விடையால்தான் பல முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கு முடியும். மேற்படி கருத்துக்களை முன் வைப்பவர்களின் உண்மைத் தன்மைகள் புரியும்.
கிழக்கு மாகாண சபையில் இச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது முதல் இப்பத்தி எழுதும் வரை திவிநெகும பற்றி ரவூப் ஹக்கீம் இன்னும் வாய் திறக்கவேயில்லை.
குறி்ப்பிட்ட சட்ட மூலம் மாகாண சபைகளில் நிறைவேற்றப்பட்டு விட்டதென்பதனால் எதனையும் செய முடியாதென்று சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பணிக்கப் போகின்றாரா? அல்லது எதிர்த்து வாக்களிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை பணிக்கப் போகின்றாரா? இதில் எந்த முடிவை எடுத்துக் கொண்டாலும் முஸ்லிம் காங்கிரஸை பாதிக்கச் சீயும்.
எஸ்.எம்.எஸ்.மூலமாக தான் அறிவிக்கவில்லை என்று ரவூப் ஹக்கீம் தெரிவிப்பராயின், அவரது கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார்கள் என்றாகி விடும். தான் அறிவித்தது உண்மை என்று ரவூப் ஹக்கீம் சோல்வாராயின் வாக்களிக்கச் செய்து விட்டு எதுவும் தெரியாதவரைப் போல் இருக்கின்றார் என்ற விமர்சனம் முன் வைக்கப்படும்.
தன்னிச்சையாக மாகாண சபை உறுப்பினர்கள் முடிவு எடுத்து இருந்தால் அவர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
திவிநெகும சட்ட மூலத்திற்கு பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபைகளின் அதிகாரத்தைக் குறைக்கும் நடவடிக்கை என்று எதிர்த்து வாக்களிக்குமாயின் அடுத்த கனமே முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்.
எவ்வாயினும், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திவிநெகும சட்ட மூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாகவே வாக்களிக்கும்.
திவிநெகும சட்ட மூலத்திற்கு கிழக்கு மாகாண சபையில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினாகள் எதிர்த்து வாக்களித்து இருந்தால், இன்று முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இருக்காது.
திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் போதிய கவனம் செலுத்தவில்லை. அதாவது, இச்சட்ட மூலம் மேல் மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஆதரவாக வாக்களித்து இருந்தார்.
அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கு இச்சட்ட மூலம் கொண்டு வரப்படும் என்று தெரிந்து இருந்தம் தமது கட்சி உறுப்பினர்களுக்கு அது பற்றிய விளக்கங்களை கொடுக்காது, வெளிநாட்டுக்கு சென்றமை முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாகக் கட்டமைப்பின் தன்மையை தெளிவுபடுத்துகின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாகக் கட்டமைப்பு என்றுமில்லாத வகையில் பின்னடைவைக் கண்டுள்ளது.
பதவியையும் சுகபோகத்தையும் அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளே அதிகம் காணப்படுகின்றன. இதனை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இல்லாமல் செய்து சமூகத்திற்கான அரசியலைச் செய்ய வேண்டும்.
இந்நடவடிக்கை தாமதம் ஆகுமாயின் மக்கள் செல்வாக்கற்ற கட்சி என்ற புதிய நாமத்தை முஸ்லிம் காங்கிரஸ் சூடிக் கொள்ள வேண்டியேற்படும்.
@எஸ்.றிபான்

site counter