அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 13 அக்டோபர், 2012

திவிநெகும’ – மதில் மேல் பூனையாக ரவூப் ஹக்கீம்! மௌனம் களைந்து பொறுப்புக் கூறுவாரா?



திவிநெகும சட்ட மூலம் மாகாண சபைகளில் அங்கிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அச்சட்ட மூலம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இச்சட்ட மூலத்தை பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் 09.10.2012 அன்று முன் வைத்துள்ளார். இச்சட்ட மூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இந்த விவாதங்களில் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றது என்பது அரசியல் அவதானிகளின் கவனத்ததை பெரிதும் திசை திருப்பியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்து இருந்தார்கள். அப்போது அச்சட்ட மூலத்திற்கான இறுதி முடிவினை எடுப்பதற்கு தலைவர் ரவூப் ஹக்கீம் நாடு திரும்பியதும், ஆராந்து முடிவெடுப்போம் என்று கட்சியின் செயலாளர் மற்றும் பிரதிச் செயலாளர் கிழக்கு மாகாண சபையில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்ட போதிலும் அவ்வுறுப்பினர்கள் அச்சட்ட மூலத்திற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தனர்.
திவிநெகும சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் கொண்டு வரப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளிநாட்டில் இருந்தார். இப்போது பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் முன் வைக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் நாட்டில் இருந்து கொண்டிருக்கின்றார். இந்நிலையில் ரவூப் ஹக்கீம் என்ன முடிவை எடுக்கப் போகின்றார் என்பது அவரின் எதிர்கால அரசியலுக்கு முக்கியத்துவம் வாந்ததாகும்.
ஏனெனில், இச்சட்ட மூலத்திற்கு கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து இருந்த போது பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. இச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ரவூப் ஹக்கீம் (எஸ்.எம்.எஸ்.) குறுந் தகவல் மூலமாக அறிவித்ததாகவும் கூறப்பட்டன. தலைவர் இச்சட்ட மூலத்தைப் பற்றி எதுவும் எங்களிடம் கூறாததால், இச்சசட்டம் சிறுபான்மையினருக்கு பாதிப்பாக இருக்காது என்று கருதி திவிநெகும சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று முஸ்விம் காங்கிரஸைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபையின அமைச்சர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
திவிநெகும சட்ட மூலம் கிழக்கு மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட போது தமது தலைவருடன் தொலைபேசியில் கதைத்ததாகவும், பின்னர், தலைவரின் கருத்துக்கு அமைவாக சட்ட மூலத்திற்கு கால அவகாசம் கோருமாறு குழுத் தலைவர் ஜெமீலிடம் கேட்டுக் கொண்டதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இக்கருத்துக்களுக்கு விடை அளிக்க வேண்டிய பொறுப்பு ரவூப் ஹக்கீமுக்கு இருக்கின்றது. வழக்கம் போன்று மௌனமாக இருந்து விட முடியாது. வழக்கம் போன்ற நடைமுறையை ரவூப் ஹக்கீம் பின்பற்றுவாராயின் அதற்காக அவர் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியேற்படும்.
இச்சட்ட மூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் காட்டிய அவசரம் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸின் மூலமாக பெற்றுக் கொள்வதற்கான தேர்தல் என்று ஆவேசப்பட்டு பேசிய போதிலும், முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸால் பெற்றுக் கொள்ள இயலவில்லை. இந்த அதிருப்தி மக்கள் மத்தியில் குறையாத நிலையில் திவிநெகும சட்ட மூலம் அந்த அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செதுள்ளது.
ஆதலால், ரவூப் ஹக்கீம் விடை கூற வேண்டிய கட்டாயம் உள்ளது. ரவூப் ஹக்கீமின் விடையால்தான் பல முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கு முடியும். மேற்படி கருத்துக்களை முன் வைப்பவர்களின் உண்மைத் தன்மைகள் புரியும்.
கிழக்கு மாகாண சபையில் இச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது முதல் இப்பத்தி எழுதும் வரை திவிநெகும பற்றி ரவூப் ஹக்கீம் இன்னும் வாய் திறக்கவேயில்லை.
குறி்ப்பிட்ட சட்ட மூலம் மாகாண சபைகளில் நிறைவேற்றப்பட்டு விட்டதென்பதனால் எதனையும் செய முடியாதென்று சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பணிக்கப் போகின்றாரா? அல்லது எதிர்த்து வாக்களிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை பணிக்கப் போகின்றாரா? இதில் எந்த முடிவை எடுத்துக் கொண்டாலும் முஸ்லிம் காங்கிரஸை பாதிக்கச் சீயும்.
எஸ்.எம்.எஸ்.மூலமாக தான் அறிவிக்கவில்லை என்று ரவூப் ஹக்கீம் தெரிவிப்பராயின், அவரது கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார்கள் என்றாகி விடும். தான் அறிவித்தது உண்மை என்று ரவூப் ஹக்கீம் சோல்வாராயின் வாக்களிக்கச் செய்து விட்டு எதுவும் தெரியாதவரைப் போல் இருக்கின்றார் என்ற விமர்சனம் முன் வைக்கப்படும்.
தன்னிச்சையாக மாகாண சபை உறுப்பினர்கள் முடிவு எடுத்து இருந்தால் அவர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
திவிநெகும சட்ட மூலத்திற்கு பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபைகளின் அதிகாரத்தைக் குறைக்கும் நடவடிக்கை என்று எதிர்த்து வாக்களிக்குமாயின் அடுத்த கனமே முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்.
எவ்வாயினும், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திவிநெகும சட்ட மூலத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாகவே வாக்களிக்கும்.
திவிநெகும சட்ட மூலத்திற்கு கிழக்கு மாகாண சபையில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினாகள் எதிர்த்து வாக்களித்து இருந்தால், இன்று முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இருக்காது.
திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் போதிய கவனம் செலுத்தவில்லை. அதாவது, இச்சட்ட மூலம் மேல் மாகாண சபையில் கொண்டு வரப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஆதரவாக வாக்களித்து இருந்தார்.
அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கு இச்சட்ட மூலம் கொண்டு வரப்படும் என்று தெரிந்து இருந்தம் தமது கட்சி உறுப்பினர்களுக்கு அது பற்றிய விளக்கங்களை கொடுக்காது, வெளிநாட்டுக்கு சென்றமை முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாகக் கட்டமைப்பின் தன்மையை தெளிவுபடுத்துகின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் நிர்வாகக் கட்டமைப்பு என்றுமில்லாத வகையில் பின்னடைவைக் கண்டுள்ளது.
பதவியையும் சுகபோகத்தையும் அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளே அதிகம் காணப்படுகின்றன. இதனை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இல்லாமல் செய்து சமூகத்திற்கான அரசியலைச் செய்ய வேண்டும்.
இந்நடவடிக்கை தாமதம் ஆகுமாயின் மக்கள் செல்வாக்கற்ற கட்சி என்ற புதிய நாமத்தை முஸ்லிம் காங்கிரஸ் சூடிக் கொள்ள வேண்டியேற்படும்.
@எஸ்.றிபான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter