அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 13 அக்டோபர், 2012

அல்ஆலிம் புதிய பாடத் திட்டத்தில் பாரிய குளறுபடி; மாணவர்களுக்கும் பெரும் அநீதி!


அல்ஆலிம் புதிய பாடத் திட்டத்தில் பாரிய குளறுபடி; மாணவர்களுக்கும் பெரும் அநீதி!

முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அல்ஆலிம் பரீட்சைகளுக்கான பிரமாணங்களும் திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டங்களும் சம்பந்தமான கை நூலில் பல முரண்பாடுகள் காணப்படுவதோடு அறபுக் கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக்கு பாரிய அநீதிகளும் எற்படுத்தப்பட்டுள்ளன என அகில இலங்கை உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது சம்பந்தமாக உலமா கட்சித் தலைவர முபாரக் மௌலவி முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
“மேற்படி திணக்களத்தால் அண்மையில் அல்ஆலிம் பரீட்சைகளை முதவஸ்ஸித்தா மற்றும் ஸானவிய்யா என்றும் பெயர் மாற்றப்பட்டது சம்பந்தமாக கைநூல் ஒன்று வெளியிடப்பட்டது.
இதில் பக்கம் 16ல் திணக்கள பணிப்பாளர் வை.எல்.எம்.நவவி அவர்கள் எழுதியுள்ள செய்தியில் ‘இப்புதிய பாடத்திட்டம் 8 வருடங்களை உள்ளடக்கியதாக வரையப்பட்டுள்ளது என்றும் மூன்று வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் அல்ஆலிம் முதவஸ்ஸிதா பரீட்சைக்கும், 5 வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் ஸானவிய்யா பரீட்சைக்கும் 8 அல்லது 9 ஆண்டுகளை பூர்த்தி செய்தவர்கள் அல்ஆலிம் ஜாமியா பரீட்சைக்கும் தோற்றுவதற்கு தகுதியுடையவர்கள்’ என கூறப்பட்டுள்ளது.
இங்கு குளறுபடி என்னவென்றால் மேற்படி கைநூல் அல்ஆலிம் முதவஸ்ஸத்தா மற்றும் ஸானவிய்யா சம்பந்தமானது என்றே முகப்பில் தலைப்பிட்டு விட்டு இது 8 வருடங்களை உள்ளடக்கியுள்ளது என கூறுவது முரண்பாடாக உள்ளது.
அத்துடன் 8 அல்லது 9 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் அறபு மதுரசா எதுவும் இலங்கையில் இல்லாத நிலையில் 9 வருடங்கள் என கூறுவது 8 வருட பாடத்திட்டம் என்பதற்கும் முரண்பாடாக உள்ளது. அல்ஆலிம் ஜாமியாவுக்குரிய பாடத்திட்டங்கள் இல்லை. ஆகவே அல்ஆலிம் மு மற்றும் ஸ என்பவை 5 வருட பாடத்திட்டம் என்பதே சரியானது.
அத்துடன் ஒரு மாணவர் அறபு கல்லூhரியில் இணைந்து 3 வருடத்தில் க. பொ. த சா. தரப்பரீட்சைக்கும் அல்ஆலிம் முதவஸ்ஸித்தா பரீட்சைக்கும் தோற்ற வேண்டும் என பக்கம் 49ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் அறபு மொழி கற்கத்தொடங்கி மூன்று வருடங்களில் மேற்படி பரீட்சைக்கு தோற்றுவது என்பது சாத்தியமாகாது மட்டுதல்ல அவனது அறிவுத்தரத்துக்கு பாரிய சவாலாகவும் உள்ளது.
காரணம் மேற்படி பரீட்சைக்கென குறிப்பிட்டுள்ள பாடங்களில் தப்சீர் ஜலாலைன் என்பது பெரும்பாலும் அறபு மதுரசாக்களில் 4 அல்லது 5ம் ஆண்டிலேயே கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில் அறபுக்கல்வியில் 3 ஆண்டுகளை பூர்த்தி செய்த மாணவன் இந்தப்பெரிய பாடத்திட்டத்தை எவ்வாறு உள்வாங்க முடியும்? அதுவும் அவன் க.பொ.த.சா.தர பரீட்சையையும் அதே ஆண்டில் எழுதுவது என்றால் இதனை விட பெரிய அநியாயம் இருக்க முடியாது.
பொதுவாக அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு க.பொ.த.சா.தர பரீட்சைக்குப் படிப்பதற்கே நேரம் போதாது என அவதிப்படும் நிலையில் அறபுக்கல்வி கற்க வந்த மாணவனின் தலையில் ஒரே ஆண்டில் க.பொ.த.வும் ஆல்ஆலிமும் எழுத வேண்டும் என்பது குருவியின் தலையில் பாறாங்கல்லை வைத்ததற்கு சமமானதாகும். இதே போல்தான் அவன் உயர்தரம் எழுதும் போது அல்ஆலிம் ஸானவிய்யா எழுத வேண்டும் என குறிப்பிட்டிருப்பதுமாகும்.
ஆக அறபு மதுரசாவில் கற்கும் மாணவன் ஒருவன் க.பொ.த.சா/த, உ/த, அல்ஆலி;ம் முதவஸ்ஸித்தா, ஸானவிய்யா, தர்மாச்சார்ய பரீட்சை மற்றும் மௌலவி தராதர பரீட்சை என பல பரீட்சைகளுக்கு முகம் கொடுக்கிறான். இதன் மூலம் மதுரசாக்களுக்கு மாணவர்கள் செல்லக் கூடாது என்றும் அவ்வாறு சென்றாலும் இத்தகைய பாறாங்கற்களை சுமக்க முடியாமல் ஓடி விட வேண்டும் என்பதையும் ஊக்கமளிப்பது போலவே தெரிகிறது. இத்தகைய அநியாயத்தை அகில இலங்கை உலமா சபையும் கண்களை மூடிக்கொண்டு அங்கீகரித்துள்ளமை கவலைக்குரியதாகும்.
இது போன்ற பல அநியாயங்களும் முரண்பாடுகளும் மேற்படி பாடத்திட்டத்தில் காணப்படுகின்றன. முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் அழைப்பு விடுக்கும் பட்சத்தில் இந்தத்தவறுகளையும் அநியாயங்களையும் சுட்டிக்காட்ட உலமா கட்சி தயாராக உள்ளது” என மௌலவி முபாறக் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter