அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 22 ஆகஸ்ட், 2012

எனது ஏறாவூர் பேச்சை திரிபுபடுத்தி அரசியல் கபடத்தை சிலர் செய்ய முயல்கின்றனர் – பசீர் சேகுதாவூத்


-நமது செய்தியாளர்-
நான் என்றும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களிக்குமாறு கூறுவேன் எனது ஏறாவூர் பேச்சை திரிபு படுத்தி அரசியல் கபடத்தை சிலர் செய்ய முயல்கின்றனர் இது அவர்களின் அரசியல் வங்குரோத்து தனமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் இன்று விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நான் ஏறாவூரில் பேசிய பேச்சை சிலர் பிழையாக விளங்கிக் கொண்டு அதை வைத்து சிலர் அரசியல் இலாபம் தேட முயற்சி செய்கின்றனர். இது அவர்களின் அரசியல் வங்குரோத்து தனமாகும்.
இந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அரசாங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுமென இருந்தது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்தன அந்த நேரம் எனது சொந்த ஊரான ஏறாவூரை ஒற்றுமைக்கடுத்துவதற்காக ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலானவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைக்க விரும்பினேன.
அந்த வகையில் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன் அந்த பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் றஊப் ஹக்கீமும் கலந்து கொண்டார்.
இந்த வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கமும் இணைந்து கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட இருந்த சூழ் நிலையில் அலிசாஹீர் மௌலானா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார்.
அதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட தீர்மானித்த போது அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட முன்வந்தாலும் அவர் ஏற்னவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்ட காரணத்தினால் அதை அங்கு ரத்து செய்து விட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர் பட்டியலில் களமிறங்க முன் வந்தார் எனினும் இரண்டு கட்சிகளிலும் கையொப்பமிட்டால் சட்டரீதியாக அவரின் பெயர் இல்லாமல் போய் விடும் என்ற காரணத்தினாலும் அவர் அங்கு வெளியே வரமுயாமல் இக்கட்டில் மாட்டிக்கொண்டதால் மௌலானா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்.
அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வருவதற்கு செய்த தியாகங்களையும் அவர் காட்டிய ஆர்வத்தையும் நான் நன்றியுடன் பார்க்கின்றேன்.
இந்த தேர்தலின் பின்னர் அலிசாஹீர் மௌலானாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைப்பதற்கு முயற்சிக்கின்றேன். அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கும் ஏறாவூரில் கேட்கும் வேட்பாளர் நசிர் ஹாபீசுக்கும், வெற்றிலைக்கு வாக்களிப்பவர்கள் அலிசாஹீர் மௌலானாவுக்கும் வாக்களிக்க வேண்டும் என்பதையே கூறினேனே தவிர வெற்றிலைக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்னு நான கூறவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட போது கதிரைச்சின்னத்திற்கு வாக்களிக்கு மாறு கூறியுள்ளேன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்ட போது யானைச்சின்னத்திற்கு வாக்களிக்கு மாறு கூறியுள்ளேன்.
இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தனது சொந்த சின்னமான மரத்தில் போட்டியிடுகின்றது இதனால் நான் ஏன் வேறு ஒரு சின்னத்திற்கு வாக்களிக்கு மாறு கூறவேண்டும்.
ஏறாவூரில் இரண்டு கட்சிகளிலும் இரண்டு பிரதி நிதித்தவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் ஏறாவூரில் மிக நீண்ட காலமாக எனக்கும் மௌலானாவுக்குமுள்ள அரசியல் முறன்பாட்டையும் இல்லாமல் செய்யும் வகையிலுமே அவ்வாறு பேசினேன்.
இதை சரியாக புரிந்து கொள்ளாத அரசயில் கபடத்தனம் செய்பவர்கள் பிழையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூத் வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளார் என பசப்பி திரிகின்றனர்.
அமைச்சர் றிசாத் பதியுதீனும் காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் இதனையே பசப்பியுள்ளார்.
எனது பேச்சை இவர்கள் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை.  அரசியல் தேர்தல் காலங்களில் இவ்வாறான வங்குரோத்துத்தனம் இவ்வாறானவர்களிடமிருந்து வெளிப்படும் அதுவே இப்போதும் இவர்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெற்றியடையச்செய்ய வேண்டும்.
மிகவும் தீவிர தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் முஸ்லிம் காங்கிரசின் வெற்றிக்காக ஈடுபடுவேன் யாருடைய சொந்த நலன்களுக்காகவுமல்ல என்பதை தெளிவாக கூறிவைக்க விரும்பகின்றேன்.
மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் இலட்சியப்பாதையில்இந்த கட்சியினூடாக பயணிக்கின்றேன்என அவர் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

site counter