அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வியாழன், 1 நவம்பர், 2012

நிவாரணம் வழங்க 200 மில்லியன் கை இருப்பில்; அமைச்சின் அதிகாரிகளுக்கான விடுமுறையும் ரத்து!


இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க 200 மில்லியன் ரூபா பணம் இருப்பில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிதியும் மீதமிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு அமைச்சின் அதிகாரிகளுக்கான விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.
கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகள் 24 மணிநேரமும் செயற்பட்டு வருவதாகவும் குறைபாடுகள் இன்றி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையை ஸ்ரீலங்கா சிங்கள பெளத்த குடியரசாக மாற்ற மஹிந்த கம்பனி தீவிர முயற்சி!


இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என்பதாகும். பெயரில் இருக்கும், ஜனநாயகமும், சோசலிசமும் நாட்டுக்குள்ளே கிடையாது.
ஆனால், நாட்டில் ஜனநாயகத்திற்கும், சோஷலிசத்திற்கும் பதிலாக சிங்களமும், பெளத்தமும் நடைமுறையில் தலை விரித்தாடுவது எல்லோருக்கும் தெரியும். இந்த நடைமுறை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் நீண்ட கால திட்டத்தை முன்கூட்டியே அறிவிக்கிறது.
அதுதான், ஸ்ரீலங்கா சிங்கள பெளத்த குடியரசு என்பதாகும். முழுநாட்டையும், சிங்கள பெளத்தர்களின் நாடு என அறிவிக்கும் இலக்கை நோக்கி மகிந்தவும், அவரது சகோதரர்களும் நாட்டை கொண்டு போகின்றார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
“அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய இயக்கத்தின் அங்குரார்ப்பண ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு பார்ன்ஸ் பிளசில் இன்று காலை நடை பெற்றது.
சுரேஷ் பிரேமசந்திரன், விக்கிரமபாகு கருணாரத்ன, சிறிதுங்க ஜெயசூரிய, அசாத் சாலி, சரத் மனமேந்திர, அருணா சொய்சா ஆகியோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இன்று நாட்டில், அதிகரப் பிரிவினைக்கு எதிரான ஒரு திட்டமிட்ட இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது. விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, தினேஷ் குணவர்த்தன ஆகிய அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச ஆகியோர் இதன் பின்னணியில் இருகின்றனர்.
இவர்கள் அரசின் அதிகாரமிக்க செல்லப்பிள்ளைகள். ஆனால், இது பற்றி கேட்டால், அரசின் ஊடக பேச்சாளர், சிறுபிள்ளைதனமாக பதில் சொல்கிறார். நாட்டு மக்களை முட்டாள்களாக கருதி பதில் சொல்கிறார். இன்னமும் கூட பதிமூன்று ப்ளஸ் என்று பேசுகிறார்கள். பதிமூன்றை அகற்ற முடிவு செய்யவில்லை என்று சொல்கிறார்.
இந்த நாட்டு மக்களுக்கு தாய்நாடு இலங்கை. நம் எல்லோருக்கும் தந்தை நாடு இந்தியா. அங்கிருந்துதான், இங்கே எல்லாம் வந்தது. மொழி, கலை, கலாச்சாரம், சங்கீதம், மதம் எல்லாம் அங்கிருந்து வந்தவைதான். இன்றும் கூட அங்கிருந்து பெரும் முதலைகளின் முதலீடுகள் வருகின்றன.
அவர்களுக்கு, நம் நாட்டு நிலங்கள் கபடத்தனமாக வழங்கப்படுகின்றன. அங்கிருந்து எல்லாம் வேண்டும். ஆனால் இந்தியாவில் நடைமுறை ஆகியுள்ள, அதிகாரப்பிரிவினை முறைமை, மொழிவாரி மாநில முறைமை உங்களுக்கு வேண்டாம்.
அங்கு தமிழ்நாடு தமிழ் மொழி பேசும் மக்களுக்கான மாநிலம். கன்னடத்துக்கு கர்நாடகா, தெலுங்குக்கு ஆந்திரா, மலையாளத்திற்கு கேரளா என ஏறக்குறைய 28 மொழிவாரி மாநிலங்கள் உள்ளன. ஆனால் எல்லாம் ஒரே இந்தியா. அங்கும் இன, மத பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனாலும், அவை எல்லாவற்றையும் மீறி அங்கு ஐக்கியம் நிலவுகின்றது.
இமய முனையிலிருந்து, குமரி முனைவரை இந்தியர் என்ற உணர்வு இருக்கின்றது. இத்தனை பெரிய நாட்டில், நிலவும் ஐக்கியத்துக்கு காரணம் அங்குள்ள இந்த நியாயமான அதிகார பிரிவினை என்பதை இந்த இனவாதிகள் வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.
இன்று தமிழர்கள் ஆயுதம் தூக்க போவதில்லை. தமிழர்கள் நாட்டை பிரிக்க போவதில்லை. வட-கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் பெரும்பான்மை ஆணையை பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதை தெளிவுபட கூறி விட்டார். அதற்கு மேலதிகமாக சிங்க தேசிய கொடியை அசைத்தும் காட்டி விட்டார். இதையே நமது ஜனநாயக மக்கள் முன்னணியும் கூறுகின்றது.
இந்நாட்டில் பல தமிழ் கட்சிகள் இருந்தாலும், கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளும், நமது கட்சியையும் சேர்த்து இந்த ஆறு தமிழ் கட்சிகள்தான் இந்நாட்டில் வாழும் மிகப் பெரும்பான்மை தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் என்பதை மறவாதீர்கள். ஆகவே இதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணக்கருத்து.
இத்துனை சொல்லியும், நீங்கள் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நியாயமான அதிகாரங்களை பிரித்து, நாட்டை ஐக்கியப்படுத்த தயார் இல்லை. எங்களை ஒன்றுமில்லாமல் கடலிலா பாய சொல்கிறீர்கள்?
தேசியகீதம் பற்றிய பிரச்சினை பேசப்பட்டபோது, இந்தியாவில் இந்தி மொழியில் தான் தேசியகீதம் பாடப்படுகிறது என்று நாடாளுமன்றத்திலேயே சொன்ன அறிவு கொளுந்துதான் இந்த விமல் வீரவன்ச. இந்தியாவில், சிறுபான்மை மொழியான வங்காளத்தில்தான் அந்நாட்டு தேசிய கீதம் பாடப்படுகிறது என்பது கூட தெரியாமல் இவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
புலிகளின் தோல்வியை தமிழ் மக்களின் தோல்வியாக மட்டும் இல்லாமல் முஸ்லிம் மக்களின் தோல்வியாகவும் மாற்றி முழு நாட்டையும் சிங்கள பெளத்த நாடாக மாற்ற நாம் விட மாட்டோம். சிங்கள மக்களின் மனசாட்சியை தட்டி நாம் நாம் பேசுவோம். எவருக்கும் பயந்து எமது இந்த,“அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம்” என்ற இயக்கத்தை கைவிட மாட்டோம்.

சேதங்களை மதிப்பிட சென்ற குழுவினரின் வாகனம் மீது மரம் விழுந்தது


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் வாகனம் மீது பாரிய மரமொன்று  விழுந்ததினால்  வாகனம் பலத்த சேதற்திற்குள்ளாகியது.

புத்தளம் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை வீசிய கடும் காற்றினால் ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பிட சென்ற குழுவினரின் வாகனமே இவ்வாறு சேதமடைந்துள்ளது.

மேற்படி வாகனத்தில் பயணித்தவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ் வாகனத்தில், புத்தளம் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் பொறுப்பாளர் பிரிக்கேடியர் ரணவீர தலைமையிலான குழுவினர் பயணித்துள்ளனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் நேற்று இரவு வீசிய கடும் காற்றினால் வீடுகள், கடைகள் உள்ளடங்களாக 20 கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன்  நான்கு பேர் காயமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்தது.

புத்தளத்தில் 10 வீடுகள் சேதமுற்றுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் உடப்பு பிரதேசத்தில் 10 கட்டடிடங்கள் சேதமுற்றுள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தம் இடம்பெற்ற இடங்களுக்கு உடனடியாக விஜயம் மேற்கொண்ட புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் நிலைமைகளினை நேரடியாக அவதானித்தார்.

பிரதம நீதியரசரிற்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வர அரசாங்கம் தீர்மானம்



(கெலும் பண்டார)

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவதற்கு  ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


இது தொடர்பாக நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் குற்றப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி வழங்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான பிரேரணையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118 பேரிடம் அரசாங்கம் ஏற்கனவே கையெழுத்துக்களை பெற்றுள்ளது.

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயகா தனது கணவருடன் தொடர்புள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் நீதி சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரட்ன தொடர்பான இவரது செயற்பாடுகள் ஆகியவை தொடர்பாக இந்த குற்ற பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையொப்பமிட்டிருந்தால் குற்றப் பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொள்வார். அத்துடன் இந்த பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஒரு வாக்கு பெரும்பான்மையாக இருந்தால் போதுமானதாகும்.

இதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றங்களை ஆராய்வதற்காக தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்


இப்பகுதிகளில் கடும் காற்று வீசக்கூடிய வாய்ப்புள்ளது. ஆனாலும் இலங்கைக்கு அப்பால்; 'நிலம்' சூறாவளி நகர்ந்துசெல்வதால் காலநிலையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தாதெனவும் அத்திணைக்களம் கூறியுள்ளது.

site counter