அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

நிந்தவூரிலுள்ள ஹொட்டல்கள், உணவு வழங்குமிடங்கள், விற்பனை நிலையங்களில் திடீர் பரிசோதனை. -பாவனைக்கு உதவாத பலஉணவுப் பொருட்கள் சிக்கின-

 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேசத்திலுள்ள ஹொட்டல்கள், உணவு வழங்குமிடங்கள், விற்பனை நிலையங்களில் இன்று திடீர் பரிசோதனை நடாத்தப்பட்டதில் பாவனைக்கு உதவாத பல உணவுப்பொருட்கள் சிக்கியதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையின் பணிப்பின் பேரில், நிந்தவூர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.திருமதி.தஸ்லீமா பஸீர் தலைமையிலான முப்பது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கொண்ட குழு இன்று நிந்தவூர் பிரதேசத்திலுள்ள ஹொட்டல்கள், சாப்பாட்டுக் கடைகள், தேனீர்ச் சாலைகள், மற்றும் உணவு வழங்கும் இடங்கள், மரக்கறிக் கடைகள், பழக் கடைகள் போன்ற இடங்களை ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர்.
இக்குழுவில் பிராந்திய உணவு,மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தக்கீர், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம், நிந்தவூர் பிரதேச பொறுப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஜீவராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் கிழக்கு சுகாதார அமைச்சர் மன்சூரைச் சந்தித்து மகஜர்.


( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)

அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.எம்.ரி.ஜாரியா தலைமையில், கிழக்கு மாகாண சுகாதாரம், மற்றும் சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத்துறை, தொழிற் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரை சம்மாந்துறையிலுள்ள அவரது மக்கள் பணியகத்தில் சந்தித்து, வைத்தியசாலையில் காணப்படும் பல்வேறு குறைபாடுகளையும், அத்தியவசியத் தேவைகளையும் எடுத்துக் கூறினர்.
இறுதியில் அவை அடங்கிய மகஜர் ஒன்றையும் அமைச்சரிடம் வைத்தியதிகாரி கையளித்தார்.

நிந்தவூர் அல்-மதீனா பாலர் பகல் பராமரிப்பு நிலைய விடுகை விழா.-மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்பாளர் பஸீர் பிரதம அதிதி-

                 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

நிந்தவூர் அல்-மதீனா பாலர் பகல் பராமரிப்பு நிலையத்தின் வருடாந்த விடுகை விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் நேற்று மாலை நிந்தவூர் அல்-அஸ்றக் தேசியக் கல்லூரியில் இடம் பெற்றது.

பாலர் நிலைய முகாமைதம்துவப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.ஆர்.பிர்தௌஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருந்த கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியம், சமூக சேவைகள், சிறுவர் நன்நடத்தை, கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழிற் பயிற்சி கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் திடீரென்று இந்நியா பயணமானதால், அவரது மக்கள் தொடர்பு அதிகாரி யூ.எல்.பஸீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சுமார் 45 வருடங்களின் பின் அபிவிருத்தியைக் காணும் நிந்தவூர் மேர்சா வீதி.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூரில் பழம்பெருமை வாய்ந்த வீதிகளில் ஒன்றான 'மேர்சா வீதி' சுமார் 45 வருடங்களின் பின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகிறது.
வெள்ளம் ஏற்படும் காலங்களில் இப்பிரதேச நீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதால் இப்பிரதேசம் முழுவதும் நீரில் மூழ்கி, இம்மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது வழமையாகும்.
இந்நிலைமையினை இப்பிரதேச மக்கள் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீலிடம் முறையிட்டதையடுத்து,  மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ரூபா பத்து இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் இவ்வீதி 'கொங்றீட்' வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

பைசால் காசீம் எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு சமூக நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு. -பிரதம அதிதியாக பைசால் காசீம் எம்.பி பங்கேற்பு-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதிஒதுக்கீட்டிலிருந்து நிந்தவூர்ப் பிரதேசத்திலுள்ள அரச, மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கு இலத்திரனியல் உபகரணங்களும், தளபாடங்களும் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை நிந்தவூர் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

site counter