( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேசத்திலுள்ள ஹொட்டல்கள், உணவு வழங்குமிடங்கள், விற்பனை நிலையங்களில் இன்று திடீர் பரிசோதனை நடாத்தப்பட்டதில் பாவனைக்கு உதவாத பல உணவுப்பொருட்கள் சிக்கியதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையின் பணிப்பின் பேரில், நிந்தவூர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.திருமதி.தஸ்லீமா பஸீர் தலைமையிலான முப்பது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கொண்ட குழு இன்று நிந்தவூர் பிரதேசத்திலுள்ள ஹொட்டல்கள், சாப்பாட்டுக் கடைகள், தேனீர்ச் சாலைகள், மற்றும் உணவு வழங்கும் இடங்கள், மரக்கறிக் கடைகள், பழக் கடைகள் போன்ற இடங்களை ஒரே நேரத்தில் முற்றுகையிட்டனர்.
இக்குழுவில் பிராந்திய உணவு,மருந்துப் பரிசோதகர் எஸ்.தஸ்தக்கீர், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம், நிந்தவூர் பிரதேச பொறுப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்.ஜீவராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உணவு வழங்குமிடங்களிலும், விற்பனை நிலையங்களிலும் கைப்பற்றப்பட்ட ( பாவனைக்கு உதவாத) பல உணவுப் பொருட்கள், பிரதேச சபைக்குச் சொந்தமான ரக்டர்களில் ஏற்றிச் செல்லப்பட்டு, அழித்தொழிக்கப்பட்டன.
இங்கு கருத்துத் தெரிவித்த மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பீ.பேரம்பலம் ' எமது மேற்பார்வையின் போது பல உணவு வழங்குணர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் சிலருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். பலருக்கு சட்ட நடவடிக்கை மேற் கொள்ளவுள்ளோம். இன்னும் சிலர் எமது நடவடிக்கையின் போது தமது நிலையங்களைத் திடீரென்று பூட்டியுள்ளனர். அவர்களின் தயாரிப்புக்களில் தவறு உள்ளதால்தான் அவர்கள் அவ்வாறு பயத்தில் பூட்டியுள்ளனர். எனவே அவர்களையும் விரைவில் பரிசோதனைக்கு உட்படுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக