அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 2 நவம்பர், 2012

மு.கா.வின் இரு எம்.பிக்களுக்கு பிரதி அமைச்சர் பதவி? ஹக்கீமுக்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சு!


-செயிட் ஆஷிப்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு விரைவில் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
கிழக்கு மாகாண ஆட்சியை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக அரச தரப்பினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளுள் இந்த விடயமும் அடங்கி இருந்ததாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் மெட்ரோ மிரருக்கு தெரிவித்தார்.
கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தற்போது வகிக்கும் நீதி அமைச்சுக்குப் பதிலாக வேறு ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவியும் தவிசாளர் பஷீர் சேகு தாவூதுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியும் மேலும் மூன்று எம்.பிக்களுக்கு பிரதி அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அப்போது மு.கா.வலியுறுத்தி இருந்தது.
அந்த உடன்பாட்டின் பேரிலேயே கிழக்கு முதலமைச்சர் பதவியை மு.கா. விட்டுக் கொடுத்ததுடன் வேறு நிபந்தனைகள் எதுவும் இன்றி கிழக்கின் ஆட்சியமைப்புக்கு ஆதரவு வழங்கியது என்றும் அந்த முக்கியஸ்தர் சுட்டிக் காட்டினார்.
இந்த விடயத்தை நேற்று ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் வலியுறுத்தியதாகவும் அதற்கு ஜனாதிபதி பச்சைக் கொடி காட்டி இருப்பதாகவும் அறிய முடிகிறது.
எவ்வாறாயினும் ஹக்கீமின் அமைச்சுப் பதவி மாற்றத்துடன் மு.கா.வின் இரண்டு எம்.பிக்களுக்கே பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் அதில் ஒருவராக பஷீர் சேகு தாவூத் இருப்பார் எனவும் கட்சியின் உயர் மட்டம் நம்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
மீதியாகவுள்ள ஒரு பிரதி அமைச்சர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பதை இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது என்றும் அந்த முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு அரசாங்கத்தில் மு.கா. இணைந்து கொண்டது முதலே அக்கட்சியின் எம்.பிக்களான ஹசன் அலி, பைசால் காசிம், ஹரீஸ், தௌபீக் ஆகியோர் பிரதி அமைச்சர் பதவியில் குறி வைத்து பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை முழு அமைச்சு அல்லாமல் மீண்டும் அரை அமைச்சுப் பதவியே வழங்கப்படுமானால் அதனை மு.கா. தவிசாளர் பஷீர் சேகு தாவூத் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று மெட்ரோ மிரருக்கு தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter