பிரதம நீதியரசர் ஷராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தான் கையெழுத்திட வில்லை என இடது சாரியான சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
ஆகையினால் அது பற்றி பேச தான் தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை பிரதமர் நீதியரசருக்கு எதிரான நம்பிககையில்லா பிரேரணையில்
தானும் கையெழுத்திடவில்லை என மற்றொரு இடது சாரியான தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் பற்றி தற்போது கருத்து கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக