அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 2 நவம்பர், 2012

ஜனாதிபதியுடன் மு.கா.சந்திப்பு; தியட்ட கிருள்ள புறக்கணிப்பு குறித்து முறையீடு!


-செயிட் ஆஷிப்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலறி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளது.
மு.கா.தரப்பில் கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், எம்.பி.க்களான ஹசன் அலி, எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எம்.தௌபீக், எம்.எஸ்.எம்.அஸ்லம் ஆகியோரும் ஜனாதிபதியுடன் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகபெரும ஆகியோரும் இப்பேச்சு வார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது மு.கா. எம்.பி.க்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என்று ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டதாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.
குறிப்பாக தியட்ட கிருள்ள திட்டத்தில் மு.கா. எம்.பி.க்களின் அபிவிருத்தி முன்மொழிவுகள் எவையும் உள்வாங்கப்படவில்லை என்று ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆகையினால் தியட்ட கிருள்ள திட்டத்திற்காக மு.கா. எம்.பிக்களுக்கு விசேட நிதி ஒதுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து திறைசேரி செயலாளர் முன்னிலையில் அமைச்சர்கள் மட்ட கூட்டம் ஒன்றை நடத்தி ஆராய்ந்து தீர்வு வழங்குமாறு அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகபெரும ஆகியோரை ஜனாதிபதி பணித்தார்.
அதேவேளை கிழக்கு மாகாண ஆட்சியை அமைப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக அரச தரப்பினால் வழங்கப்பட்ட உறுதி மொழிகளை நிறைவேற்றித் தருமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புன்முறுவலுடன் தலையசைத்தார் என்று அந்த மு.கா. முக்கியஸ்தர் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார். .
இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் எம்.பி. மற்றும் பைசால் காசிம் எம்.பி. ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இவர்களுள் பைசால் காசிம் எம்.பி. ஹஜ் கடமைக்காக புனித மக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter