அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 3 மார்ச், 2014

அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 8 வது மாநாடு - 2014

பிப்ரவரி 14,15,16- 2014 தினங்களில் இந்தியாவின் கும்பகோணம் அசூர் புறவழிச்சாலையில் ஹாஜி.இ.எஸ்.எம்.பக்கீர் முஹம்மது எம்.பி வளாகத்தின் டி.எஸ்.மஹாலில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இதில் சர்வதேசத்தின் பல நாடுகளில்இருந்தும் இலக்கிய வாதிகள் கலந்துகொண்டனர்; இலங்கையில் இருந்தும் முன்நிலை இலக்கியவாதிகள் பலரும் கலந்துகொண்டதோடு அவர்களில் பலருக்கு விருதுகளும் ,பட்டங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இம் மாநாட்டை கவிக்கோ அப்துல்றகுமான் தலைமையிலான இஸ்லாமிய இலக்கிய கழகமும்,ஹிஸ்வா சமூக சேவை அமைப்பும்  இணைந்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.
 
இம்மாநாட்டில் நிந்தவூர் கலை இலக்கிய பேரவையின் எஸ்முத்துமீரான் (சிரேஸ்ட சட்டத்தரணி, சிரேஸ்ட இலக்கியவாதி) தலைமையிலான கவிஞர் டொக்டர் ஜாபீர், கவிஞர் சிரேஸ்ட பொறியியலாளர் இஸ்மாயில், இலக்கியவாதி அன்வர்டீன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் விசேட பயிற்சியை முடித்துக் கொண்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.-பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதி-

            ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் எதிர்கால செயற் திட்டத்திற்கு அமைய பிரதேச அபிவிருத்தி சமூக மேம்பாட்டுத் திட்டங்களை அமுல்படுத்தும் உபாயங்களுள் ஒன்றான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டங்கள் தற்போது திருப்திகரமான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இப்பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி.எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயிலின் வழிகாட்டுதலில் இவ்வளாக கலை, கலாச்சார பீடம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்திறனை ஊக்குவிக்கும் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கல்முனைக் கல்வி வலயத்தைச் சேர்ந்த பயிற்சியை முடித்துக் கொண்ட 150 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் விசேட நிகழ்வு இன்று (01.03.2014) இ;ப்பல்கலைக் கழகத்தின் அரபு மொழிப் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

site counter