அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 3 அக்டோபர், 2012

திருத்தியமைக்கப்பட்ட அல்-ஆலிம் பாடத்திட்ட வெளியீட்டு விழா!

திருத்தியமைக்கப்பட்ட அல்-ஆலிம் பாடத்திட்ட வெளியீட்டு விழா!

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 
1976ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள அல்ஆலிம் பாடத்திட்டம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அரசாங்கப் பாடத்திட்டக் குழு, துறைசார்ந்த உலமாக்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பரீட்சைத் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் திருத்தியமைத்துள்ளது.
இப்பாடத்திட்டம் 2013ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் விதமாக அல்ஆலிம் முதவஸ்ஸிதா, அல்ஆலிம் ஸானவிய்யா ஆகிய இரு பரீட்சைகளுக்குமுரிய பாடத் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்ட வெளியீட்டு விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2012 ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு 10, இலக்கம் 10 ஹேஜ் கோட்ஸில் அமைந்துள்ள புகர் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வைபவத்தின் போது பாடத்திட்டம் சம்பந்தமான விளக்கவுரைகளை துறைசார்ந்த உலமாக்களைக் கொண்டு நிகழ்த்தப்படவுள்ளன. இவ்வைபவத்தில் பங்குபற்றுவதற்காக சகல அரபுக்கல்லூரி அதிபர்களுக்கும் நிர்வாகத் தலைவர்களுக்கும் ஏற்கனவே அழைப்பிதல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அழைப்பிதல் கிடைக்கப்பெறாத அரபுக்கல்லூரிகள் திணைக்களத்தின் 0112691874 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அழைக்கப்பட்ட சகலரும் இவ்வைபவத்தில் தவறாது சமூகமளிக்குமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி கேட்டுக் கொண்டுள்ளார்.

தனக்கு வேண்டாம் என உதறித் தள்ளிய அமைச்சுப் பதவியை பிள்ளையான் வேறொரு தமிழருக்கு பெற்றுக் கொடுத்திருக்கலாம்!

தனக்கு வேண்டாம் என உதறித் தள்ளிய அமைச்சுப் பதவியை பிள்ளையான் வேறொரு தமிழருக்கு பெற்றுக் கொடுத்திருக்கலாம்!

-தர்ஷன்-
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் ஏழு பதவிகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதன் காரணமாகவே தமிழர்களுக்கு பதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என முன்னாள் கிழக்கு மாகாண கால் நடை அபிவிருத்தி, விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் துரையப்பா நவரெட்னராஜா கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2008 மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் தெரிவான இவர் இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
போனஸ் ஆசனம் ஊடாக மீண்டும் மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள அவரிடம் மாகாண அமைச்சர்களில் தமிழர்கள் எவரும் இம்முறை இடம்பெறாமை குறித்து கேட்ட போது இவ்வாறு அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இந்த ஏழு பதவிகளும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பகிரப்பட்டதனால் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் எதுவும் கிடைக்கவில்லை.
2008 ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு மாகாண சபையில் கால் நடை அபிவிருத்தி விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராகப் பதவி வகித்தேன். அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராகப் போட்டியிட தமிழர்கள் எவரும் முன்வராத காரணத்தினாலே நான் போட்டியிட்டேன். திருகோணமலை மாவட்டத்திற்கும் எனக்கும் தொடர்பு உள்ளது நான் கங்குவேலி கிராமத்தை சேர்ந்தவன்.
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை அபிவிருத்தி உட்பட சகல துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தது. கடந்த மாகாண சபையில் கூட ஆளும் கட்சியில் தமிழர்கள் எவரும் பிரதிநிதிகளாகத் தெரிவாகவில்லை.
இத்தேர்தலில் திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நான் போட்டியிட்டாலும் தமிழ் மக்கள் தங்களுக்கு அபிவிருத்தி, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அரசாங்க பிரதிநிதித்துவம் தேவையில்லை என அவற்றை நிராகரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கினார்கள். இதன் காரணமாக நான் தோல்வியடைந்தேன் எனக்கு கிடைத்த வாக்கு 933 வாக்குகள் மட்டும் தான்.
கடந்த மாகாண சபையில் அமைச்சர் பதவி வகித்த நான் மூவின மக்களுக்கும் சேவையாற்றியுள்ளேன். இதன் காரணமாக மக்கள் எனக்கு ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. இதன் காரணமாக கூடுதலான வாக்குள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன் ஆனால் தமிழ் பிரதிநிதித்துவம் அரசாங்கத்திற்குள் தேவையில்லை என ஒட்டுமொத்த தமிழ் மக்களும் என்னை நிராகரித்தார்கள். இதற்காக மக்கள் மீது நான் ஆத்திரப்படவில்லை கோபப்படவில்லை மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்பாக நான் ஏற்றுக்கொண்டேன்.
இந்த தேர்தல் முடிவைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானித்துள்ளார்கள் என்று தான் நான் கூறுவேன். தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியை தாங்களே எழுதியுள்ளார்கள் எதிர்காலத்தில் இதனால் வரும் நன்மையும் தீமைகளையும் அவர்களால் தேர்ந்தெடுக்கபட்டவை.
தமிழ் மக்கள் என்னைத் தூக்கியெறிந்தாலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போனஸ் ஆசனம் ஒன்றை வழங்கி என்னைத் தாங்கிப் பிடித்துள்ளார்கள். இதன் மூலம் எனது கௌரவத்தையும் பாதுகாத்தனர்.
இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் வழங்கிய சேவைக்காக இந்த கௌரவம் எனக்கு வழங்கப்பட்டது இதற்காக நான் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றியுடையவனாக இருப்பேன்.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம், காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் முதலமைச்சர் பதவி நான்கு அமைச்சர் பதவி சபைத் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் ஆகிய ஏழு பதவிகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். இந்த ஏழு பதவிகளும் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் பகிரப்பட்டதனால் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய பதவிகள் எதுவும் கிடைக்கவில்லை.
முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனக்கு கிடைக்க வேண்டிய சுகாதார அமைச்சர் பதவி உதறி தள்ளினார். தனக்கு அப்பதவி தேவையில்லை தான் ஒரு சாதாரண உறுப்பினராக இருக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் விட்ட தவறு தனக்கு அந்த பதவி தேவையில்லாவிட்டாலும் தனது கட்சில் போட்டியிட்ட ஒருவருக்கு கிடைக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. அவரும் வேறு ஒரு கட்சிக்கு அந்த பதவியைக் கொடுத்திருக்க வேண்டும் என கூறினாரோ தெரியவில்லை. அந்த வகையில் தமிழ் மக்களுக்குரிய பதவி கைநழுவிப் போயுள்ளது.
இருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிஇ ஸ்ரீ லங்கா முஸ்லிம்; காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் வருங்கால அரசியலை நிதானமாகச் சிந்தித்திருக்க வேண்டும் தமிழ் மக்களும் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளார்கள் தெரிந்திருக்க வேண்டும். இந்த மூன்று மாவட்டங்களிலும் அரசாங்கத்திற்கு வாக்களித்த தமிழ் மக்களை அரசாங்கம் உதறித்தள்ளியுள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது.
இந்நிலையில் இந்த கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு ஒரு பதவியாவது வழங்கியிருக்க வேண்டும் என்ற ஆதங்கம் பொதுவாக அரசியல் ஆய்வாளர்கள் மத்தியிலே பொதுவாக உள்ளது. ஆகவே இந்த பதவிப் பகிர்வுகளில் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்திற்கு வாக்களித்த தமிழர்கள் கூட விசனப்படுமளவிற்கு இந்த பதவிப் பகிர்வு இடம்பெற்றுள்ளது.
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஒரு போனஸ் பிரதிநிதித்துவத்தை வழங்கியது போல் அமைச்சு பதவியொன்றை வழங்கி தமிழ் மக்களைக் கௌரவித்திருக்க வேண்டும் என அரசுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பலரும் தங்கள் எதிர்பார்ப்பை என்னிடம் தெரிவித்தனர்.
ஆனால் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் தங்களுக்குள் பேரம் பேசி பதவிகளைப் பகிர்ந்து கொண்டார்களே தவிர தமிழ் மக்களை ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை. தங்களுடைய இனத்தை மையப்படுத்தி தங்களுடைய அரசியலை முன்னெடுக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ் மக்களை அவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
கடந்த 30 வருடகால யுத்தத்திற்கு முகம் கொடுத்து பாரிய இன்னல்களையும் துன்பங்களை பல இழப்புகளைச் சந்தித்த தமிழ் மக்களுக்கு ஒரு பதவியையாவது கொடுத்து அவர்களை கௌரவப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு வரவில்லை. ஆனால் தமிழ் மக்கள் அக் கட்சிகளுக்கு தான் இல்லா விட்டாலும் ஜனாதிபதிக்கு கூட இருக்க வில்லை என குறைபட்டும் கூறுகிறார்கள் ஆனால் இதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் அவ்வாறான குறைகளை நான் கூற வில்லை.
ஆனால் நான் கவலையுடன் கூறிக்கொள்வது என்னவென்றால் முஸ்லிம் கட்சிகள் ஒரு பதவியையாவது ஆகக் குறைந்து பிரதி தவிசாளர் பதவியையாவது தமிழ் மக்களுக்கு வழங்கி திருப்திப்படுத்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.
நான் இது தொடர்பாக இந்த கட்சிகளுடனோ அல்லது வேறு தரப்பினரிடமோ நேரடியாகப் பேசவில்லை காரணம் எனக்கு அரசியல் பின்புலம் இல்லை. நான் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரின் கவனத்திற்கு இதனைச் சுட்டிக்காட்டினேன். தேர்தலில் தோல்வியடைந்த எனக்கு பதவிகள் தேவையில்லை என்பதையும் அவரிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர்களுடைய மனங்களில் என்ன இருந்தது என்பதை என்னால் அறிய முடியவில்லை.

எரிபொருள் விலைக் குறைப்பு இல்லையாயின் வேலைநிறுத்தம்: தனியார் பஸ் உரிமையாளர்

எரிபொருள் விலைக் குறைப்பு இல்லையாயின் வேலைநிறுத்தம்: தனியார் பஸ் உரிமையாளர்

(ஒலிந்தி ஜயசுந்தர)

லங்கா இந்தியன் ஒயில் கம்பனி, டீசலின் விலையை லீற்றரக்கு 4 ரூபாவால் அதிகரித்ததன் பின், மேல்மாகான தனியார் பஸ் உரிமையாளர்கள் எரிபொருளின் விலைகள் குறைக்கப்பட்டு தமது ஏனைய கோரிக்கைகள் ஏற்கப்படாதுவிடின் தாம் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக குறிப்பிட்டனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது விடின், எதிர்வரும் 30ஆம் திகதி மேல் மாகாணத்தில் சேவையிலுள்ள பஸ்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் டீசலின் விலையை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளதாகவும் எனவே, தனியார் பஸ்களுக்கு டீசல் மானியம் வழங்கப்பட வேண்டுமெனவும் அச்சங்கம் குறிப்பிட்டது. 

திவிநெகும சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு இல்லை: ஹாபிஸ் நஷீர்

திவிநெகும சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு இல்லை: ஹாபிஸ் நஷீர்

(றிப்தி அலி)

திவிநெகும சட்டமூலத்தினால் சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான ஹாபிஸ் நஷீர் அஹமட் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதன் காரணமாகவே கிழக்கு மாகாண சபையில் இந்த சட்டமூலம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது எமது கட்சி ஆதரவாக வாக்களித்தது என அவர் குறிப்பிட்டார்.

இந்த திவிநெகும சட்டமூலத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த அதிகாரங்களும் மீளப்பெறப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏழு பேரும் கலந்தாலோசித்த பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என மாகாண அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த சட்டமூலம் ஏற்கனவே அமைச்சரவையில் நிறைவேற்றபட்டதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வின் போது ஆற்றிய உரையின் முழு விபரம்,

திவிநெகும சட்டமூலத்திற்கு அங்கீகாரத்தை வழங்குவது குறித்து இந்த சபை இப்போது விவாதித்துக் கொண்டிருக்கிறது. முக்கியமான ஒரு சட்டமூலமான இதனை நாடாளுமன்றத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ சமர்ப்பித்த போது இதனை மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்கு வழங்கிப் பெற்று மீள சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்தே இங்கு இப்போது நாம் அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த சட்டமூலம் ஏதோ அவசரமாக சமர்ப்பிக்கப்பட்டது போன்று ஒரு மாயத்தோற்றம் வெளியில் உள்ளது. அதுவல்ல உண்மை என்பதை நான் ஆதாரத்துடன் கூற விரும்புகிறேன்.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முதலாவது திவிநெகும உத்தேச சட்டமூலத்திற்கான பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பத்திரத்திற்கான முதல் அமைச்சரவை அனுமதி கடந்த வருடம் செப்டெம்பர் எட்டாம் திகதி வழங்கப்பட்டது. 

இரண்டாவது திவிநெகும உத்தேச சட்டமூல பத்திரம் இந்த வருடம் ஜீலை 24ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. அதற்கு மறுநாள் இவற்றை அமைச்சரவை உப குழு ஆராய்ந்தது. இதனையடுத்து 'திவிநெகும' இரண்டாவது உத்தேச சட்டமூல பத்திரத்திற்கு ஜீலை 26ஆம் திகதி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பின்னர் கடந்த ஜீலை 30ஆம் திகதி இந்த அமைச்சரவை அனுமதி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

இதற்கடுத்தபடியாக 'திவிநெகும' சட்டமூலம் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசனை குழுவிடம் ஜீலை 31ஆம் திகதி முன்வைக்கப்பட்டது. இந்தப் பின்னணியின் கீழ் தான் ஓகஸ்ட் 10ஆம் திகதி இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

கடந்த மாதம் 18ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியபோது இந்த சட்டமூலம் தொடர்பான தனது அபிப்பிராயத்தை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. உயர் நீதிமன்றத்தின் கூற்றுக்கமைய மறுநாள் மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்காக இது அனுப்பப்பட்டது.

எதிர்க்கட்சியினர் கூறுவது போல இது வெறுமனே அவசர அவசரமாக எடுக்கப்பட்ட ஒரு  செயற்திட்டம் என்று நாம் எடுத்த எடுப்பிலேயே கூறிவிடமுடியாது. இந்த 'திவிநெகும' சட்டமூலத்தின் உள்ள சாதக பாதகங்களை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

என்னைப் பொறுத்தவரை நான் இந்த 'திவிநெகும' உத்தேச செயற்றிட்டத்தை ஆராய்ந்து பார்த்தபோது  அதில் பாரதூரமான தவறுகளோ, விளைவுகளோ இருப்பதாக கருதமுடியவில்லை.எல்லாமே ஒரு திணைக்களத்தின் கீழ் வருவதற்கான ஏற்பாடுகள் இதில் உள்ளன. இதன்படி இதிலுள்ள ஊழியர்கள் திணைக்களத்தின் கீழுள்ள அரச ஊழியர்களாகவே இருப்பர். ஆதிகார சபை ஒன்று இருக்குமாயின் அதில் அமைச்சர் ஒருவரின்  ஊழியர்களே இருப்பர்.

திணைக்களம் என்று வரும் போது அதிலுள்ளவர்கள் அரச சேவைகள் ஆணைக்குழுவின் ஊழியர்களாகவே இருப்பார். அவர்கள் சுயாதீனமானவர்கள். இந்த 'திவிநெகும'வை கட்டுப்படுத்தும் திணைக்களம் நேரடியாக கணக்காய்வாளர் நாயக திணைக்களத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

இப்போதுள்ள அதிகார சபைகளை பாருங்கள் அப்படி இல்லை இந்த 'திவிநெகும' அமுலுக்கு வந்தால் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பினால் கூட கணக்குக் காட்ட வேண்டிய ஒரு நிலை உள்ளது. உண்மையில் இது ஒரு நல்ல அம்சம் நிதிக் கட்டுப்பாடு இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.

சனசமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்டமைப்பை இது கொண்டுள்ளதையும் நாம் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஊர்களில் இருக்கும் சமூக அமைப்புக்களை வலுப்படுத்த வேண்டும். 'திவிநெகும' தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தனைமானி அறிவித்தலின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நான் பார்த்த போது சமுதாய அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்கள் இந்த காலத்திற்கேற்ப தேவையென்பதை உணரமுடிகின்றது.

போரினால் கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் இன்னமும் குறைந்தளவு வருமானத்தில் வாழும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை சீராக்கி, வாழ்வாதார வாய்ப்புக்களை மேம்படுத்த இந்த 'திவிநெகும' உதவுமானால் அதற்கு நாம் உரிய அங்கீகாரத்தை வழங்குவதா இல்லையா என்பதை எமது மாகாண சபை உறுப்பினர்கள்  சொல்ல வேண்டும்.

தேர்தல் காலங்களில் நாம் பலதும் பத்தும் பேசியிருப்போம். எப்படியோ தேர்தலில் வென்ற பிறகு நாம் அனைவரும் மக்களுக்கு சேவையாற்ற திடசங்பற்பம் பூண்டுள்ளோம். இந்த எனது கருத்தில் இங்குள்ள அனைவரும் உடன்படுவார்கள் என்று நம்புகிறேன்.

அடுத்ததாக திவிநெகும சமுதாய அடிப்படையிலான பிராந்திய ரீதியிலான வங்கிகள் குறித்து 'திவிநெகும' வர்த்தமானி பத்திரத்தின் ஏழாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நான் ஆராய்ந்து பார்த்த போது 'திவிநெகும' பயனாளிகளிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், அவர்களுக்கு கடன் வசதிகளை வழங்குதல், பயன்தாரிகளுக்கு வருமானத்தை அதிகரித்தல் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கிழக்கில் இன்னமும் எத்தனையோ இடங்கள், பிரதேசங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. அவற்றை மேம்படுத்தி முன்னோக்கிக் கொண்டுசெல்ல இந்தத் திட்டங்கள் உதவுமென நம்புகிறேன். சமூர்த்தி வங்கிகள் இப்போது இருக்கின்றன. ஆனால் அவை முகாமைத்துவத்துக்கு சரியாக உட்படுத்தப்படுகின்றனவா? அவை யாருக்கு பொறுப்புக் கூறக் கடமைப்பட்டுள்ளன? இந்தக் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை.

ஆனால் வங்கிகள் விடயத்தில் 'திவிநெகும' வின்படி அதற்கான முகாமைச்சபையில் நிதியமைச்சரின் பிரதிநிதி, மத்திய வங்கியின் பிரதிநிதி சம்பந்தப்பட்ட அமைச்சின்  செயலாளரது  பிரதிநிதி என்பவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

உண்மையில் இது வரவேற்கப்பட கூடியதே. ஏனெனில் இந்த முகாமைச் சபையானது 'திவிநெகும'வின் கீழ் வரும் வங்கிகளினதும், வங்கித் தொழிற்சங்கங்களினதும் நிதி சார்ந்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்து ஒழுங்குப்படுத்தி காலத்துக்குக் காலம் உரிய  பணிப்புரைகளை வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஏற்பாடுகள் வரவேற்கப்படக் கூடியவை தான்.

'திவிநெகும' ஒரு திணைக்களத்தின் கீழ் என்று வந்தால் அது நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் வந்தால் அது நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படலாம். எப்படியோ மக்கள் மன்றங்களை மீறி எதுவும் நடக்கா தென்பது எமது அனைவருக்கும் தெரியும்.

எனது கணிப்பின்படி இந்த 'திவிநெகும' செயற்திட்டம் கிராமிய மக்கள் தமது சொந்தக் கால்களில் எழுந்து நிற்பதற்கான  நம்பிக்கையை யதார்த்தமாக கொடுக்குமென நம்புகிறேன். மத்திய அரசின் ஒத்துழைப்பு இருப்பதால் இந்த செயற்திட்டம் சாத்தியமானதென்றே கருதுகிறேன்.

கிராமிய மட்டத்தில் சிறுகைத்தொழில் செய்வோர் இப்போது அவசரத் தேவைகளுக்காக பணம் கடனாக பெறுகின்றனர். தனிப்பட்ட நபர்களின் மூலம் இந்தக் கடன் பெறுவதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் காலங்களுமுண்டு.

'திவிநெகும' வங்கி முறை வந்தால் அவர்கள் பணத்தை இலகுவில் பெற்று திருப்பிச் செலுத்த முடியும். உதாரணமாக சிறு வியாபாரம் ஒன்றுக்காக அவசர முற்பணம் செலுத்த வேண்டிய ஒரு தேவை வரும் போது இந்த இலகு கடனை, எதுவித  இழுத்தடிப்புக்கள் இன்றி, கடும் நிபந்தனைகள் அற்று பெறமுடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில் இவ்வாறான செயற்பாடுகள் வரவேற்கப்பட வேண்டுமென்பது தான் எமது கருத்து. 'திவிநெகும' வந்தால் எல்லாமே தலைகீழாக மாற்றப்பட்டுவிடும், முன்னர் இருந்த அதிகார சபைகள் முழுமையாக ஒரங்கட்டப்பட்டுவிடும் என கூறப்படும் விடயங்களில் நான் உடன்பட விரும்பவில்லை.

ஏனெனில் 'திவிநெகும' வர்த்தமானியின் பத்தாம் பாகத்தின் 44ஆம் இலக்க விதந்துரைகளை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறேன்.

சமுர்த்தி அதிகார சபை, இலங்கை மலைநாட்டு அதாவது உடரட்ட அபிவிருத்தி சபை, தெற்கு அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றிலும், அதன் கீழ் நிறுவப்பட்ட நிதியங்களும் எந்த நோக்கில் நிறுவப்பட்டனவோ அந்த நோக்கங்கள் மற்றும் பயனாளிகள் விடயத்தில் மாற்றங்கள் எதுவும் இருக்கமாட்டாதென உறுதிப்படுத்தி திணைக்களம் அதனை முகாமை செய்யவேண்டுமென அந்த விதந்துரை கூறுகின்றது.

இப்படியான ஒரு பின்னணியில் பார்க்கும்போது 'திவிநெகும' செயற்திட்டம் அமுலுக்கு வந்தால் இப்போதுள்ளவற்றை விட சிறந்த முகாமைத்துவம்  ஏற்படலாமென்பதை  காண முடிகிறது.

இவற்றை ஆராய்ந்தபோது நான் அவதானித்த விடயம் என்னவெனில் இப்போது இந்தத் துறையுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் இதில் தலையிடும் நிலைமை இருக்கிறது. 'திவிநெகும' சட்டமூலம் ஒன்று வந்தால் அந்த விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர் கூட எதேச்சதிகாரமாக அதில் செயற்பட முடியாதென்பது தெரிகிறது. இந்த விடயம் குறித்து நான் கடந்த ஒரு வாரமாகவே தீவிரமாக ஆராய்ந்தேன்.

கிழக்கு மாகாண சபையினூடாக தற்போது மேற்கொள்ளப்படும் எந்த செயற்திட்டங்களுக்கும் இந்த 'திவிநெகும' சட்டமூலம் பாதிப்பை ஏற்படுத்துவதாக  தெரியவில்லை.

மாகாண சபைகளில் இந்த சட்டமூலத்திற்கு அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென்று உயர் நீதிமன்றம் கூறியது தப்பாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. மத்திய அரசுக்கும், மாகாண அரசுக்கும் பொதுவான விடயங்களே இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் கூறியிருப்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முhகாண சபையில் இருந்து இந்த சட்டமூலத்தின் படி, அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக கூறும் இந்த சபையின் உறுப்பினர்கள் எவராவது அது என்ன, எப்படி என்பதை ஆதாரங்களோடு விளங்கப்படுத்தினால் சிறந்ததாக இருக்கும். இந்த சட்டமூலம் மத்திய அரசினால் நிவேற்றப்பட்டால் இப்படி நடக்கலாம், அப்படி நடக்கலாமென நாங்கள் வெறுமனே யூகங்களுக்கு இடங்கொடுத்து செயற்படுவது அர்த்தமற்றதென்றே நான் கருதுகிறேன்.

ஏனெனில் எல்லாம் விடயங்களிலும் நாங்கள் தொடர்ந்து சந்தேகப்பட்டுக் கொண்டு அரசியல் நடத்தினாலும் மக்களுக்கான எமது சேவைகளை செய்ய முடியாது. நான் செய்த ஆய்வுகளின் படி சமுர்த்தி உட்பட்ட இதர விடயங்கள் ஒரு முகாமைத்துவம் செய்வதற்கான வழியையே இந்த 'திவிநெகும' சட்டமூலம் திறந்துவிடுகிறது.

மாகாண சபைகளின் உதவியின்றி மத்திய அரசால் நேரடியாகவே மாகாண மக்களை சென்றடைய முடியுமா என்பதை நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். மாகாணசபைகளின் விடயதானங்களை பறித்துவிட முடியாதென 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் இங்கு நான் எமது சக உறுப்பினர்களுக்கு குறிப்பிட்டு வைக்க விரும்புகிறேன்.

மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்கும் ஒரு சட்டமூலமாக இருந்தால் இதனை ஏற்கனவே அமைச்சரவை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கீகரித்திருக்குமா என்பது தான் எனது கேள்வியாக இருக்கிறது.

நாங்கள் எடுத்தற்கெல்லாம் எதிர்ப்பு அரசியல் செய்ய முற்படுவது எமது தமிழ் பேசும் சமூகங்களை பாதிக்கும் என்பது தான் கருத்து. மத்திய அரசுக்கு ஆதரவளிக்கிறோம் என்பதற்காக நாங்கள் அவர்கள் கொண்டுவரும் வேலைத்திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து விட முடியாது.

நாங்கள் இவற்றை ஆராய்ந்து எமது விமர்சனங்களை சொல்வோம். கடந்த மாகாண சபையில் இங்கு நாடு நகர அபிவிருத்தி தெடர்பான சட்டமூலம் விவாதத்திற்கு வந்தபோது அதிலுள்ள குறைகளை எமது கட்சி சுட்டிக்காட்டியது.

மக்களுக்கு பாதிப்பு அல்லது  மாகாண சபையின் அதிகாரங்களுக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் நாங்கள் இவற்றை எதிர்ப்பதில் தப்பில்லை. ஆனால் மக்களுக்கு நன்மைகளை வழங்கும் மாகாண அதிகாரங்களை கேள்விக்குட்படுத்தாத ஒரு யோசனைத் திட்டத்திற்கு நாங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

இந்த மாகாணசபைத் தேர்தலில் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் எமது மக்கள் எம்மைத் தெரிவு செய்து அனுப்பியுள்ளனர். நாங்கள் மத்திய ஆட்சியாளர்களுடன் இல்லாத விடயங்களுக்காக சண்டை பிடிப்பதன் மூலம் பாதிக்கப்பட போவது எமது மாகாண மக்கள் தான்.

வடக்கைப் போல் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இன்னமும் இருக்கின்றன. மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துதல், அவர்களுக்கான  சுயதொழில், உல்லாசப்பயணத்துறையை ஊக்குவித்து தொழில்வாய்ப்புக்கான ஏற்படுத்திக் கொடுத்தல் என்று பலதரப்பட்ட வேலைகளை நாம் செய்யவேண்டியுள்ளது" என்றார்.   

ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா இணக்கம்

ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா இணக்கம்

ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை தொடர்பாக இலங்கை நடந்துகொண்ட முறையையிட்டு திருப்தி தெரிவித்துள்ள அமெரிக்கா, இலங்கை ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தற்காலிமாக சம்மதித்துள்ளதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரியொருவர் இன்று தெரிவித்தார்.

இலங்கை மீது விதிக்கப்பட்ட  தடையை தளர்த்தும் நோக்கில் தானும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும் அமெரிக்க இராஜங்கத் திணைக்கள பிரதிநிதியான அலிஸனுடன் வொஷிங்டனில் பேசியதாக இவ் அதிகாரியான சில்வா கூறினார்.

அமெரிக்கா தடைக்கமைய இலங்கை, ஈரானிய எண்ணெய் இறக்குமதியை குறைத்ததையிட்டு அமெரிக்கா திருப்தியடைந்துள்ளது.

சப்புகஸ்கந்தை பெற்றோல் சுத்திகரிப்பு நிலையத்தில் குறித்ததொரு வகையான ஈரானிய மசகு எண்ணெயை மட்டுமே சுத்திகரிக்கமுடியும். இதற்காக ஈரானிலிருந்து 10 கப்பல் மசகு எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்வதை அனுமதிக்க அமெரிக்கா தயராகவுள்ளதெனவும் அவர் கூறினார்.

ஆயினும் இலங்கை ஈரானிடமிருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதில் வேறு தடைகளுள்ளன. கப்பல்களுக்கு காப்புறுதி, வங்கிச் செயன்முறைகள் போன்றவை தொடர்பான தடைகளும் தாண்டப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு கிடையாது. போதிய கையிருப்பு உள்ளதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரி சில்வா கூறினார்.

லங்கா இந்திய எண்ணெய்க் கம்பனி பெற்றோல் விலையை அதிகரித்தாலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோல் விலையை அதிகரிக்காதெனவும் அவர் கூறினார். லங்கா இந்திய எண்ணெய்க் கம்பனி சந்தையில் 5 சதவீத பங்கை மட்டுமே கொண்டுள்ளது. இதனால் பெரிய தாக்கம் ஏற்படப்போவதில்லையெனவும் சில்வா தெரிவித்துள்ளார். 

மாலக்க சுற்றுலாவுக்காகவே வெளிநாடு செல்கிறார்

மாலக்க சுற்றுலாவுக்காகவே வெளிநாடு செல்கிறார்

அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா உயர் கல்விக்காக ஐக்கிய அமெரிக்காவுக்குச் செல்லவில்லையெனக் கூறி மாலக சில்வாவின் வழக்குரைஞர் ஜயந்த வீரசேகர கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வழக்கு விசாரணையின்போது மாலக சில்வா உயர் கல்விக்காக வெளிநாடு செல்வதாக தவறுதலாக நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களால் தெரிவிக்கப்பட்டது. இவர் உண்மையில் சுற்றுலாவுக்காகவே வெளிநாடு செல்கின்றாரென வழக்குரைஞர் கூறினார்.

ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 10ஆம் திகதிவரை  மாலக்க சில்வா நாட்டை விட்டுச் செல்வதற்கு வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் வழக்குரைஞர் இன்று கேட்டுக்கொண்டபடி ஒக்டோபர் 10ஆம் திகதி  முதல் நவம்பர் 20ஆம் திகதிவரை நாட்டைவிட்டுச் செல்வதற்கு மாலக்க சில்வாவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.  (லக்மால் சூரியகொட)

பிரித்தானிய பெண்கள் மூவர் கைது

பிரித்தானிய பெண்கள் மூவர் கைது

கடமையிலிருந்த அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவினர் இவர்களை கைதுசெய்து கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

சுப்பர் 8 தகுதிச் சுற்றுக்களில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்றதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு மேற்கிந்திய கிரிக்கெட் அணியினர் தகுதி பெற்றுள்ளனர். 

படையினரை இந்தியாவில் பயிற்றுவதில் இலங்கை உறுதியாக உள்ளது: பசில்

படையினரை இந்தியாவில் பயிற்றுவதில் இலங்கை உறுதியாக உள்ளது: பசில்

இந்தியாவில் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளின் மத்தியிலும் படையினரை இந்தியாவில் பயிற்றுவதில்  மிகவும் உறுதியாக இருப்பதாக இலங்கை இன்று புதன்கிழமை தெரிவித்ததுடன் சீனா போன்ற நாடுகளுக்கு அனுப்புவதையும் நிராகரித்துள்ளது.

'அண்மையில் இலங்கை பிரஜைகள் தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதால் உணர்வுகள் பாதிக்கட்டாலும் யாரும் இந்தியா மீதோ, இந்திய மக்கள் மீதோ வெறுப்பு கொள்ளவில்லை' என அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய ஊடகவியலாளர்களிடம் பேசும் போது கூறியுள்ளார்.

இந்தியாவில் படையினரை பயிற்றுவிப்பதை இலங்கை மீள்பரிசீலனை செய்யவுள்ளது எனவும் அவர்களை சீனா போன்ற நாடுகளுக்கு அனுப்பும் சாத்தியம் உள்ளதா எனவும் கேட்கப்பட்ட போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'பாதுகாப்பு செயலாளர் முதல்; இராணுவ தளபதிகள் வரை ஒவ்வொருவரும் இந்தியாவில் பயிற்றப்பட்டுள்ளனர்.  சகலரும் முதலில் இந்தியாவுக்கு செல்வர். அதன்பின்னரே அவர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயிற்சிக்காக செல்வர்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

site counter