அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 19 செப்டம்பர், 2012

மத்திய அரசில் முஸ்லிம் காங்கிரஸ் எந்த அமைச்சு பதவிகளையும் கோரவில்லை: ஹக்கீம்

-றிப்தி அலி-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய அரசில் எந்த அமைச்சு பதவிகளையும் கோரவில்லை என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் அமைச்சு பதவிகள் கோரியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானது என அவர் குறிப்பிட்டார்.
“முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக அரசாங்கத்திலிருந்து கொண்டு குரல் கொடுப்போம். தற்போதைய சூழலில் முஸ்லிம் சமூகத்திற்கு நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் மிக விரைவில் அமுல்படுத்தப்படும்’ என அவர் தெரிவித்தார்.
“அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள ஆகிய மக்களிற்கு சிறந்த சேவையை ஆற்றுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாடுபடும். இதனால் எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பில்லாமல் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்’ என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
“கிழக்கு மாகாண ஆட்சியை அமைத்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தினோம். இதன் பின்னரே  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது’ என அவர் தெரிவித்தார்.
இந்த தீர்மானத்தினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றமடைந்திருக்கலாம். எனினும் எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சினேகபூர்வமாக செயற்படும் என அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார். (Courtesy: Tamil Mirror)

அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவி இழுத்துச் சென்று எரிப்பு ! கல்முனையில் கடையடைப்பு இயல்பு நிலைபாதிப்பு

- யு.கே.காலிதீன் -
அமெரிக்காவில் முகமது நபி(ஸல்) அவர்களை சித்தரிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதனைக் கண்டித்து இன்று கல்முனை  பிரதேசத்தில் ஹர்த்தாலும் கண்டனப் பேரணியும் இடம்பெற்றது.
மேற்படி ஹர்த்தாலையொட்டி இப்பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.
‘முகமது நபியை இழிவுபடுத்தும் வீடியோவை உடனடியாக தடைசெய், இஸ்லாத்துக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து’ போன்ற சுலோகங்கள் தாங்கியவாறு நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்
இதனையடுத்து பிரதேசத்தின் கடைகள் வங்கிகள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் அரச அலுவலகங்கள் யாவும் செயலிழந்துள்ளதுடன் பயணிகள் போக்குவரத்துகள் எதுவும் இன்றி பஸ் நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. அத்துடன் அவ்வார்ப்பாட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவி இழுத்துச் சென்று அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான சம்மாந்துறை சாய்ந்தமருது கல்முனை மாளிகைக்காடு மருதமுனை ஆகிய பிரதேசங்களில் ஹர்த்தாலும் ஆர்ப்பாட்டமும் எந்த வித வன்முறைகளும் இல்லாமல் அமைதியான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை ஆர்ப்பாட்டத்தின் போது ஒருவர் தீச்சுவாலை காயத்துக்கு உள்ளானார்


யு.கே. காலிதீன்
கல்முனையில் இன்று இடம்பெற்ற உயிரிலும் மேலான நபியவர்களை கேவலப்படுத்தி வெளியான திரைப்படத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போதுஅங்கு  எரிக்கப்பட்ட கொடும்பாவி ஒன்றின் தீச்சுவாலை ஒருவர் மீது பட்டு தீக்காயங்களுக்கு உள்ளானார்.
இவர் தற்பொழுது கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


site counter