குறித்த சந்தேக நபரான தேரர் நாரம்மல பிரதேசத்தைச்சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த சந்தேக நபரையே விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கையடக்க தொலைப்பேசியில் தொடர்புகொண்டே இருவரும் காதல் தொடர்பினை ஏற்படுத்தி கொண்டிருப்பதாக வெலிவேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் கதைத்துக்கொண்டதற்கு அமைய வெலிவேரிய பட்டஹேன சந்திக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் முச்சக்கரவண்டியில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்துள்ளனர். பின்னர் மாணவி பாடசாலை சீருடையை மாற்றிக்கொண்டுள்ளார்.
அதற்கு பின்னர் கம்பஹாவிற்கு சென்று இருவரும் திரைப்படத்தை பார்த்துள்ளதாக பொலிஸார் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் குறித்த சந்தேக நபரின் பேக்கில் இருந்து காவியுடையும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்தே குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.