அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 27 நவம்பர், 2012

விண்ணில் வலம்வரவுள்ளது இலங்கையின் முதலாவது செய்மதி


இலங்கையின் முதலாவது செய்மதியான சுப்ரீம் செட்-1  (Supreme Sat - 1)ஐ இன்று விண்ணிற்கு ஏவுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சீனாவில் இருந்து நியூஸ்பெஸ்ட்டுக்கு கருத்து வெளியிட்ட சீன சர்வதேச வானொலி சேவையின் சிங்களப் பிரிவு பணிப்பாளர் ஷென் லீ, சீன மற்றும் இலங்கை நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் பயனாக இந்த செய்மதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக கூறினார்.
சீனாவின் சீவோன் விண்வெளி மையத்தில் இருந்து இந்த செய்மதி விண்ணிற்கு ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டளவில் இந்த செய்மதியுடன் மேலும் மூன்று செய்மதிகளை விண்ணிற்கு ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் கடந்த வியாழக்கிழமை விண்ணிற்கு ஏவப்படவிருந்த போதிலும் சீரற்ற வானிலை காரணமாக அதற்குத் தடை ஏற்பட்டிருந்தது.
இந்த செயற்கைக்கோளை விண்ணிற்கு ஏவுவதன் மூலம் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணிற்கு ஏவிய ஆசியாவின் மூன்றாவது நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுக்கொள்ளும் என அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

தீயீல் எரிந்த கொழும்பு செயலகத்தின் தற்போதைய தோற்றம் (படங்கள்)


கொழும்பு டாம் வீதியில் அமைந்துள்ள மாவட்டச் செயலம் நேற்று திங்கட்கிழமை தீப்பிடித்து எரிந்தது. தீயினை அடுத்து இன்று செவ்வாய்கிழமை கொழும்பு மாவட்ட செயலகத்தின் தோற்றத்தை காண்கிறீர்கள்..!







 

முஸ்லிம் காங்கிரஸ் எந்த சவாலுக்கும் முகம்கொடுக்க தயார் - தவம்


(எஸ்.அன்சப் இலாஹி)

தமிழ் பேசும் சமூகம் என்பது அதிகாரப்பரவலாக்கத்தின் ஊடாக தாங்களே தங்களது விடயங்களை செய்து கொள்கின்ற ஒரு நிலவரம் இருக்கவேண்டும் என்கின்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிக உறுதியாக இருக்கின்றது. 13வது சரத்தினை நீக்குகின்ற விடயம் அதேபோன்று மாகாணசபை முறைமையை இல்லாது ஒழிக்கின்ற விடயம் என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த சவாலுக்கும் முகம் கொடுப்பதற்கு தயாராக உள்ளது. இம்முறைமையை மேம்படுத்துவதற்கான விடயங்களிலேயே அதிகமான கவனத்தை முஸ்லிம் காங்கிரஸ் செலுத்திருக்கிறது. நீக்குவதற்கு முயற்சிக்கின்ற யாருக்கும் இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆணித்தரமாக தனது எதிர்ப்பை தெரிவிக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை அதிகாரப்பரவலாக்க விடயத்தில் மிகத் தெளிவான கொள்கையோடு இருக்கின்றது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறினார்

அக்கரைப்பற்றில் நேற்று மாலை (26.11.2012) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்து கூறுகையில்,

வரலாற்று ரீதியாக ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இடையில் நிகழ்ந்த தங்களைத் தாங்களே ஆளுகின்ற விடயம் பற்றிய போக்கே இனப்பிரச்சினைக்கு தூபமிட்டது. சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் மிக மோசமான நெருக்குவாரங்களுக்கு தமிழ் பேசும் சமூகம் தள்ளப்பட்டதை யாரும் மறுத்துரைப்பதற்கில்லை. தமிழ் பேசும் சமூகத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக வேறு கண் கொண்டு பார்த்து அவர்களுக்கு நியாயமாக வழங்கப் படவேண்டிய அதிகாரத்தை வழங்க மறுத்ததனாலேயே ஒரு நீண்ட இரத்த வரலாறு இலங்கையில் உண்டானது. இவ் இரத்த வரலாற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்கின்ற அடிப்படையிலேயே இந்தியாவினுடைய தலையீட்டின் பிரகாரம் 13வது சரத்து உருவாக்கப்பட்டதோடு அதிலே மாகாண முறைமையும் தோற்றுவிக்கப்பட்டது;.

இந்த மாகாணமுறைமை என்பது தமிழ், முஸ்லிம் மக்கள் சிந்திய இரத்தத்தின்  சிந்திய இரத்தத்தின் விளைவாகப் பெறப்பட்ட ஒரு விடயமாகும். அவ்வாறு பெறப்பட்ட விடயத்தினை ஒரு சிலருடைய நலன்களுக்காக நாம் விட்டுக்கொடுக்கமுடியாது. ஏனென்றால் 2000ம்களில் சந்திரிக்காவினுடைய ஆட்சிக்காலத்தில் மத்திய அரசாங்கத்தில் இருக்கின்ற அமைப்பு முறையிலேயே மாற்றம் கொண்டுவரப்பட்டு முஸ்லிம்கெளுக்கென்று ஒரு உப ஜனாதிபதியும், தமிழர்களுக்கென்று ஒரு உப ஜனாதிபதியும் உருவாக்கப்படவேண்டும் என்கின்ற சிந்தனை மாற்றம் எற்பட்டதை நாம் எல்லோரும் அறிவோம். 

தமிழ் பேசுகின்ற சமூகம் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்குரிய சூழ் நிலை இன்னும் உருவாகாத நிலையில், ஏற்கனவே அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும், அதிகாரப்பரவலாக்கத்தையும் பறித்தெடுப்பது என்பது மீண்டும் இந்த நாட்டை மிக மோசமான சூழ் நிலைக்குத்தள்ளுகின்ற ஒரு முயற்சியாக அமையும் என்று நாம் கருதுகிறோம். ஆகவே இந்த விடயத்தில் எல்லோரும் கவனமெடுத்து மாகாணசபை முறை ஊடாக இந்த அதிகாரப்பரவலாக்கத்தை இன்னும் விரிவுபடுத்தி, சிறுபான்மை சமூகம் இந்த நாட்டிலே எல்லாவிதமான விடயங்களிலும், சுதந்திரத்தை அனுபவிக்கும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்

அன்று மத்திய அரசாங்கத்திலே மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்கின்ற சிந்தனை உருவாக்கம் பெற்றதற்குப்பிறகு, இந்த மாகாணசபை முறைமை கூட அதிகாரப்பரவலாக்கத்திற்காக இருந்துவிடக்கூடாது என்று எண்ணி  அதனை இல்லாது  ஒழிக்க இப்போது சிலர் முயற்சிப்பது வன்மையாகக்கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இதை நாங்கள் ஒரு போதும் விட்டுக்கொடுக்கும் நிலையில் இல்லை. என்று மேலும் கூறினார்.

நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திற்கு இரண்டு மாடிக்கட்டிடம் (படங்கள்)


(சுலைமான் றாபி)

கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜேவிக்கிரம அனுசரணையுடன் நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பை   முயற்சியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இமாம் கஸ்ஸாலி வித்தியாலயதிற்கான   இரண்டு மாடி கட்டிடம்  (26-11-2012) திங்கட்கிழமை கிழக்கு மாகாண கல்வி, கலாச்சார  பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் NAA புஸ்பகுமாரனால் திறந்து வைக்கப்பட்டது. 

பாடசாலை அதிபர் MMA கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் அல் ஹாஜ் MTA தௌபீக், சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர்  AM மன்சூர், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி SLM சலீம் ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில்  பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள், மாணவ   மாணவிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்   NAA புஸ்பகுமார க்கு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். 

இந்நிகழ்வில் சிறப்பம்சமாக செயலாளர் அவர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பே விஷேட ஞாபக சினத்தினை வழங்கி கௌரவித்தார். 






நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திற்கு இரண்டு மாடிக்கட்டிடம் (படங்கள்)


(சுலைமான் றாபி)

கிழக்கு மாகாண ஆளுநர் மொகான் விஜேவிக்கிரம அனுசரணையுடன் நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பை   முயற்சியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இமாம் கஸ்ஸாலி வித்தியாலயதிற்கான   இரண்டு மாடி கட்டிடம்  (26-11-2012) திங்கட்கிழமை கிழக்கு மாகாண கல்வி, கலாச்சார  பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் செயலாளர் NAA புஸ்பகுமாரனால் திறந்து வைக்கப்பட்டது. 

பாடசாலை அதிபர் MMA கபூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் அல் ஹாஜ் MTA தௌபீக், சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர்  AM மன்சூர், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி SLM சலீம் ஆகியோர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்வில்  பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள், மாணவ   மாணவிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்   NAA புஸ்பகுமார க்கு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். 

இந்நிகழ்வில் சிறப்பம்சமாக செயலாளர் அவர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் YL சுலைமா லெப்பே விஷேட ஞாபக சினத்தினை வழங்கி கௌரவித்தார். 




 

மஹிந்தவின் மகன் சீனா பயணம் - இலங்கை செய்மதி இன்று விண்வெளிக்கு பாய்கிறது



அண்டவெளிக்கு கடந்த வாரம் அனுப்ப திட்டமிடப்பட்ட செய்மதி பல காரணங்களுக்காக பிற்போடப்பட்டிருந்தன. இதற்கான ஆயத்தங்கள் தற்போது மீண்டும் நிறைவடைந்த நிலையில் இன்று 27-11-2012 செய்மதி விண்ணிற்கு செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பிரீம் செற் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி விஜித பீரிஸ் இது குறித்து தகவல் வழங்கிய போது, 

செய்மதியை செலுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக, இலங்கையைச் சேர்ந்த விண்வெளி பொறியியலாளர் ரோகித்த ராஜபக்ச உள்ளிட்ட குழவினர் சீனா நோக்கி பயணமாகியுள்ளனர்.

எனது திட்டங்களில் முற்றுப்புள்ளிக்கோ கேள்விக்குறிக்கோ இடமில்லை: மேர்வின்

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்க அவர்கள் மட்டத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. குறிப்பாக நாய் வேலைகளில் ஈடுபடுபவர்களை நாய்களைப் போன்று குரைத்தே தடுக்க வேண்டியுள்ளது. இருப்பினும் இந்நாட்களில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியே இருக்கின்றேன் என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 


இருப்பினும், களனி ஆசனத்தில் புதிய வேலைத்திட்டமொன்றைத் தான் தொடங்கியுள்ளதாகவும் இந்த வேலைத்திட்டத்துக்கு முற்றுப்புள்ளிக்கோ, காற்புள்ளிக்கோ அல்லது கேள்விக்குறிக்கோ ஒருபோதும்இடமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பேலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேர்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி பாசறை!



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களுக்கான பயிற்சி பாசறையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 06 இல் அமைந்துள்ள குளோபல் டவர் ஹோட்டலில் இடம்பெற்றது.
அரசியலமைப்பின் 13வது திருத்தம் மற்றும் மாகாண சபைகளின் நிருவாகம் பற்றி போதிய தெளிவை பெற்றுக்கொள்ளும் விதத்தில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களை மையப்படுத்தி இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றாலும், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் அதில் கலந்து கொண்டனர்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வும் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் சீர்திருத்தங்களும் என்ற கருப்பொருளில் பிரபல சட்டவல்லுநர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ன இதில் கருத்தாழமிக்க உரையொன்றை ஆற்றினார்.
அதிகாரப் பகிர்வு. பரவலாக்கம் என்பவற்றிற்கு இடையே காணப்படும் வேறுபாடுகளையும், வலுவேறாக்கத்திற்கு இடையில் தோன்றும் முரண்பாடுகளை விபரித்துக் கூறிய அவர் மாகாண சபைகள் அதிகாரத்தை எவ்வாறு பிரயோகிக்கின்றன, மத்திய அரசு அதிகாரங்களை எப்படி பிரயோகிக்கின்றது என்பதையும், எதிர்காலத்திற்கான தமது சில முன்மொழிகளையும் குறிப்பிட்டார். இன்னும் பல பயனுள்ள அம்சங்களையும் அவர் தொட்டுப் பேசினார்.
மாகாண சபைகளின் நிருவாக முறைமையும் மாகாண சபைகளின் நிறுவன ரீதியான அம்சங்களும் என்ற தொனிப்பொருளில் ஓய்வு பெற்ற அரச உயர் அதிகாரி திரு.கே.பி. சிறிசேன நீண்ட விளக்கமொன்றை அளித்தார்.
அவர் வடமத்திய மாகாண சபை, மத்திய மாகாண சபை ஆகியவற்றின் செயலாளராகப் பணியாற்றி ஆளுநர்களின் கீழும், முதலமைச்சர்களின் கீழும் தாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் வழங்கிய விளக்கம் பங்குபற்றியோரை வெகுவாகக் கவர்ந்தது.
மாகாண சபைகளின் பயன்பாடுகளை அதன் உறுப்பினர்கள் சரிவர பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளை திரு. சிறிசேன நன்கு விளக்கிக் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி எம்.பி. கட்;சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எம்.பி. பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை அமைச்சர்களான ஹாபிஸ் நஸீர் அஹமத், எம்.ஐ.எம். மன்சூர், மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் இதில் பங்கு பற்றினர்.

site counter