வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் சூறாவளியாக மாறி வருகிறது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (7) மாலை பலத்த காற்று வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
சில சமயங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றருக்கு அதிக வேகத்தில் வீசக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மாலை தொடக்கம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
metromirror.lk