அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

சனி, 7 டிசம்பர், 2013

நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் சாதனையாளர் கௌரவிப்பு விழா இன்று அல்-அஷ்றக் தேசியக் கல்லூரி கலையரங்கில் இடம் பெற்றது.
கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் வலயக் கல்விக் காரியாலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம்.கலீல், ஏ.எல்.சக்காப், நிருவாக உத்தியோகத்தர். ஏ.ஜுனைதீன், பொறியியலாளர் ................................ ,
தொழிஙட்ப உத்தியோகத்தர் ஏ.எம்.அஸீஸ், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் நிந்தவூர் கிளைத் தலைவர் சங்கைக்குரிய உலமா றசீட் மௌலவி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
சிறந்த பெறுபேறுகள் பெற்று, பாடசாலைக்கும், கிராமத்திற்கும் புகழ் தேடிக் கொடுத்த மாணவர்களும், கற்பித்த, வழிகாட்டிய ஆசிரியர்களும் பாராட்டி, கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியில் 35 வருடங்கள் கல்விப்பணியாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் , கல்லூரி அதிபர் எஸ்.ஏ.எஸ்.எம்.சம்சுதீன் மௌலானாவினால் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம், நினைவுப் பரிசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வலயக் கல்விப் பணிப்பாளர் ஹாஸீம் இங்கு உரையாற்றுகையில் ' நமது நாட்டின் ஜனாதிபதியும், கல்வி அமைச்சரும் இணைந்து நாட்டு மக்களின் கல்வி வளர்ச்சியில் அதி கூடிய அக்கறை செலுத்தி வருகின்றனர். நகர்ப்புற மாணவர்களின் கல்வித் தரத்திற்கு ஒப்பான வகையில் கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டுமென கங்கணங் கட்டிச் செயற்படுகின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தை ஒவ்வொரு மாணவரும் தவறாமல் பயன்படுத்தி, வாழ்வைச் செம்மைப் படுத்திக் கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter