அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் 20-11-2012 காஸா மீதான தாக்குதல்கள் (படங்கள்)




A Hasidic Jewish man holds an Israeli flag as he dances with Israeli troops during a visit to support the soldiers, near the border with the Gaza Strip November  2012. REUTERS/Nir Elias
 A Palestinian woman cries next to a relative's house after it was destroyedin Beit Lahiya in the northern Gaza Strip November 20, 2012. Nir Elias
Displaced Palestinians stay in a classroom at a UN-run school in Gaza City November 20, 2012.  Ahmed Jadallah
Palestinians inspect a destroyed house after what witnesses said was an Israeli air strike in Rafah in the southern Gaza Strip November 20, 2012.  Ibraheem Abu Mustafa
A Palestinian boy walks past a destroyed building in which a painting depicting the Dome of the Rock can be seen, after what witnesses said was an Israeli air strike in Gaza City November 20, 2012 Mohammed Salem


முஸ்லிம்களை மோசமாக சித்தரிக்கிறது ‘விஸ்வரூபம்’ படம்; சர்ச்சையில் சிக்கியுள்ள கமல் வைத்தியசாலையில் அனுமதி!;


முஸ்லிம் சமூகத்தை மோசமாக சித்தரிக்கும் ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளால் கமலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுப்புது தொழில் நுட்பங்களோடு விஸ்வரூபம் படத்தை இயக்கி, தயாரித்துள்ள கமல், அதனை வெளியிடுவதில் சிக்கலை எதிர் கொண்டுள்ளார்.
தலிபான் போராளிககளும் தலிபான்- அமெரிக்காவுக்கு இடையே நடந்த ஆப்கான் போரும் கதையின் மையமாகியிருப்பதால் முஸ்லிம்களை கமல் மோசமானவர்களாக சித்தரித்திருக்கிறார் – அவரது இப்படத்தில் இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
இஸ்லாமிய அறிஞர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் “விஸ்வரூபம்´ படத்தை போட்டுக் காட்ட வேண்டும். அதில் ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பது தெரிய வந்தால் அதை நீக்கிய பிறகே படத்தை வெளியிட வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரியுள்ளது.
இந்நிலையில் விஸ்வரூபம் படத்தினால் ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலால் கமலுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன.
ஆனால் அது வதந்தி என்றும் கமல் மிகுந்த ஆரோக்கியத்துடன் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தின் பிரிமியர் ஷோவை அமெரிக்காவில் வெளியிடும் வேலைகளிலும் ஹாலிவுட்டில் படம் பண்ணுவது பற்றிய முன்னோட்டத்திலும் பிஸியாக இருப்பதாகவும் கமல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஹலால் சான்றிதழ் தேவையில்லை - போர்க்கொடி தூக்குகிறது சிங்கள பொதுபல சேனா


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்படும் ஹலால் சான்றிதழுக்கு எதிரான பிரசாரம் ஒன்றினை பொதுபல சேனா அமைப்பு முன்னெடுத்து வருகிறது.

இது தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர், ஹலால் சான்றிதழ் சிங்கள மக்கள் மீது திணிக்கப்படுவதாகவும் ஹலால் குறியீட்டுடன்கூடிய பொருட்களை புறக்கணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் சுமார் நான்காயிரம் ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்கள் உள்ளன. இந்த சான்றிதழுக்கு வருடாந்தம் 2 இலட்சம் ரூபா செலுத்தப்படுகிறது. இந்தச் சான்றிதழ் எமக்குத் தேவையில்லை. ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படாத பொருட்களையே கொள்வனவு செய்யுமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகோள்விடுகிகிறோம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் பணம் இஸ்லாமிய பிரசாரப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு சிங்கள மக்கள் பங்காளர்களாக இருக்கக் கூடாது எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

விமானப் பயணமா..? உஷார்..! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்

விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிர், விமானிகளின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் கொஞ்சம் அசந்தாலோ அல்லது கவனம் சிதறினாலோ ஏற்படும் விளைவை எண்ணிப் பார்த்தாலே நடுக்கம் ஏற்படுகிறது. ஆனால் விமானிகளில் பலர் அரைத் தூக்கத்தில் விமானம் ஓட்டுகிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் ஆய்வு முடிவு அதைத்தான் சொல்கிறது.

ஆஸ்திரியா, ஸ்வீடன், ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்றில் ஒரு விமானிகள், நடுவானில் விமானம் கட்டுப்பாட்டுக்குள் வந்து சீராக சென்றுகொண்டிருக்கும்போது தூங்குவது கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தில் நான்கு விமானிகள் காக்பிட்டில் (விமானிகள் அறை) இருக்கும்போது சோர்வை சமாளித்துக்கொண்டு இருக்கின்றனர். 

விமானிகள் சங்கமான ஐரோப்பிய காக்பிட் அசோசியேசன் வெளியிட்ட இந்த ஆய்வு முடிவில், பெரும்பாலான விமானிகள் விமானம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது அரைத் தூக்கத்திலோ அல்லது எழுப்பும் வரை முழு தூக்கத்திலோ இருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகவலை டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது. 

இங்கிலாந்து, நார்வே மற்றும் ஸ்வீடனில் நடத்திய ஆய்வில், 43 முதல் 54 சதவீத விமானிகள் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போது சோர்வு காரணமாக தானாகவே தூங்கியதாகவும், சக விமானி எழுப்பும் வரை தூங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். 

2010 முதல் 2012-ம் ஆண்டு வரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பிய விமானிகளிடம் நடத்தப்பட்ட இந்த சர்வே முடிவு வெளியான சில வாரங்களில், விமானத்தில் விமானிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், வேலை நேரம், ஓய்வு தேவை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு அதன் திட்டங்களை ஐரோப்பிய விமான பாதுகாப்பு ஏஜென்சி முன்மொழிந்துள்ளது. 

சிரியா குழந்தைகள் கடும் குளிரில் பாதிப்பு - பாதுகாக்க தொண்டுநிறுவனங்கள் அழைப்பு




சிரியாவின் உள்நாட்டுக்கு போருக்கு பயந்து மக்கள் பக்கத்து நாடுகளான துருக்கி, லெபனன் மற்றும் ஜோர்டன் நாடுகளின் எல்லையில் அகதிகளாக தங்கி வருகின்றனர். இவர்கள் அனைவரும் பன்னாட்டு தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கான போதுமான தங்குமிடமும் உடைகளும் இன்றி தவித்து வருகின்றனர். 

மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது மிகக் கடும் குளிர் காலம் நெருங்கி வருகிறது. இதிலிருந்து அவர்களை காக்க போதுமான உதவிகள் தேவை. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் என தங்கியுள்ளவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தொண்டு நிறுவனத்தினர் எச்சரித்துள்ளனர்.

டமாஸ்கஸ், அலெப்போ என முக்கிய நகரங்களில் அதிபர் - புரட்சிப் படையினரிடையே தீவிர சண்டை நடக்கிறது. இதனால் இதுவரை 4,00,000 லட்சம் பேர் அகதிகள் என்பது இந்த வருட இறுதிக்குள் அது 7,00,000 லட்சமாக அதிகரிக்கும் என்று ஐ.நா. எச்சரிக்கிறது. 

இப்படியும் ஒரு பெண் - ரஷ்யாவில் சம்பவம்


ரஷ்யாவின் யாரோஸ்லோவுல் பகுதியில் உள்ள செமிப்ராடோவோ கிராமத்தில் பெந்தகோஷ் சபையில் பணியாற்றி இறந்துபோன தனது கணவனின் உடலை கடந்த 3 வருடங்களாக ஒரு பெண் பாதுகாத்து வந்திருக்கிறாள். கைகள், தலையில்லாமல் இருந்த அந்த உடலை பிளாஸ்டிக் பையில் வைத்து பாதுகாத்து வந்த அந்த மம்மி உடலை காவலர்கள் மீட்டுள்ளனர்.

பின்னர் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு அவள் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 5 குழந்தைகளுடன் தனித்து வாழ்ந்து வந்த அவள் கடந்த 2009-ம் ஆண்டு இறந்த தனது கணவனின் உடலை மறைத்து வைத்து பாதுகாத்த உண்மை தெரியவந்துள்ளது. வெளியே சொல்லாதவாறு பாதுகாத்து வந்த அவள், இறந்த தனது கணவரை குழந்தைகளை தினந்தோறும் பிராத்தனை செய்தும், உணவுபடைத்தும் வணங்கி வரசெய்திருக்கிறாள்.

ஆனால் அவள் அந்த அறைக்குள் நுழைந்து நேரில் பார்த்து தனது கணவனிடம் ஒருபோதும் பேசியது கிடையாதாம். யாருடனும் பழகாத அவர்கள் இறந்த உடலின் துர்நாற்றத்தை மறைக்க வாசனைப்பொருட்களை பயன்படுத்தி காற்றை சுத்தப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

தனது கணவர் ஒருநாள் அதிசயமாக திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அதை வைத்திருந்ததாக அவள் கூறியிருக்கிறாள். 

இஸ்ரேல் நோக்கி 3 அமெரிக்க போர் கப்பல்கள் விரைவு


அமெரிக்காவின் 3 கப்பற்படை கப்பல்கள் மத்தியத்தரைக்கடலின் கிழக்குப் பகுதிக்கு இஸ்ரேலை நோக்கி விரைந்து திரும்பிக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் நாட்டிற்கும் பாலஸ்தீன ஹமாஸ் க்கும் இடையே தீவிர சண்டை நடந்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேர விரும்பினால் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் அந்த கப்பல்கள் அனுப்பப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. யுத்த நோக்கத்திற்காக அனுப்பவில்லை என்றும் அது கூறியுள்ளது.

2,500 கப்பற் படையினருடன் விர்ஜினியா, நார்போல்க் செல்லவிருந்த அந்த கப்பல்கள் இங்கு திரும்பியுள்ளன. ஈரானில் பாலிஸ்டிக் வகை ஏவுகணை தாக்குதலை முறியடிப்பதற்காக இஸ்ரேல் கடற்கரையில் ஏற்கனவே அமெரிக்காவின் 4 போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உலக பயங்ரகவாதி இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம், 663 இஸ்ரேல் இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளது!


P Jainulabideen - பீ ஜே ( Islamic Scholar)

உலக பயங்ரகவாதி இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம், 663 இஸ்ரேல் இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளது!

உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது

பிஞ்சு குழுந்தைகள், பெண்கள், அப்பாவி மக்கள் உள்பட பல பாலஸ்தீன பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இன்று காலையில் கூட காரில் சென்ற 3 நபர்கள் பயங்ரமாக கொள்ளப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் 663 இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளனது.

hack செய்யப்பட்ட இணையதள பட்டியல்

http://pastebin.com/Ms4nJSZx

அநியாமான இஸ்ரேலின் தாக்குதல்கள் பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்தால் இஸ்ரேல் நாட்டின் அரசு பெரும் பாதிப்பை சந்திக்கும் இது சாம்பில் தான் என hacker ல் அறிவி்ப்பு விடுத்துள்ளனர்.

Anonymous என்ற hacking குருப் இதை செய்து வருகின்றது.



இந்த Cyber தாக்குதலுக்கு OpIsreal என பெயரிட்டுள்ளது.



இஸ்ரேலின் மிகப் பெரும் வங்கியாக இருக்கும் ஜெருசெலத்தில் உள்ள பேங்கின் இணையதளத்தை முடிக்கி அதன் database களை அளித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் நாட்டி நிதி அமைச்சர் Yuval Steinitz கூறுகையில்,

44 மில்லன் hacking attack கள் அரசு இணையதளம் உள்பட இஸ்ரேல் நாட்டி பல முக்கிய இணையதளங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அரசு இணையதளம் ஒன்றும் இதில் hack செய்யப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. காசாவை நாங்கள் தாக்கியதற்காக எங்களுக்கு எதிராக cyber போரை துவக்கியுள்ளனர்”

எனத் தெரிவித்துள்ளார்.

http://www.tntj.net/115522.html
 — with Ahamed RazeenFalu RahmanAfridi Hussain and 47 others.

ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை கடும் ஆட்சேபம்


லக்ஷ்மி பரசுராமன்
ஐக்கிய நாடுகள் சபையின் குறைநிறைகளை கண்டறிவதற் காக பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழுவின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வ மாக வெளியிடப்படுவதற்கு முன்னமே அதிலுள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டுள்ளமை முற்றிலும் தவறாகும்.
இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தினகரனுக்குத் தெரிவித்தார்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைக ளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் உள்விவகாரச் செயற்பாடுகளில் நிலவியதாக அவ்வறிக்கையில் கருதப்படும் குறைபாடுகள் உத்தியோகபூர்வமற்ற முறையில் ஊடகங் களுக்கு கசியவிடப்பட்டு ள்ளமையானது இலங் கையின் இறைமைக்கு மாத்திரமன்றி ஐ. நாவின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் செயலென்பது இதன்போது சுட்டிக்காட்ட ப்பட்டி ருப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடு இலங்கைக்கு மட்டுமன்றி எந்தவொரு நாட்டிற்கும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து உத்தியோகபூர்வ மற்ற முறையில் தகவல்கள் கசிந்துள்ளமை ஐ. நா. மீது ஏனைய நாடுகள் கொண்டுள்ள மதிப்பு மற்றும் மரியாதையை குறைக்கும் செய்கை யென்பதனால், எதிர்காலத்தில் எந்தவொரு நாட்டுடன் சம்பந்தப்பட்ட விடயத்தையும் இவ்வாறு வெளியிடுவதற்கு ஐ. நா. அனுமதிக்க கூடாது என இலங்கை அரசாங்கம் ஐ. நா. விடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கை மனிதாபிமான நடவடிக்கை களின் இறுதி கட்ட செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்டிருந்த தருஸ்மன் குழுவினர் முன்வைத்திருந்த அறிக்கையில், இலங்கையின் சில செயற்பாடுகளுக்கு ஐ. நா. பொறுப்புக் கூற வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்புக்கள் அவற்றின் குறைகளை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு செயலாளர் நாயகம் பான்கீமூனினால் மேலுமொரு உள்ளக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டி ருந்தது.
மேற்படி, உள்ளக விசாரணைக் குழு, ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளகச் செயற்பாடுகளில் நிலவியதாக கருதப்படும் குறைகள் அடங்கிய அறிக்கையினை தயாரித்துள்ள நிலையிலேயே அதன் தகவல்கள் ஊடகங்களுக்கு கசிந்துள்ளமை குறித்து இலங்கை அரசாங்கம் அதன் அதிருப்தியையும் ஆட்சேபனையையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கை முற்றும் முழுதாக ஐக்கிய நாடுகள் சபை சம்பந்தப்பட்டது. ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கீமூனினால் நியமிக்கப்பட்ட குழுவினாலேயே அதன் குறைகள் அறிக்கையிடப்பட்டுள்ளன வேயொழிய இதில் இலங்கை அரசாங்கம் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த அறிக்கை வெளியிடப் படுவதனால் இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லையெனவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

இஸ்ரேலின் இணையதளங்களை முடக்க 44 மில்லியன் தாக்குதல்கள்



இஸ்ரேலிய அரசாங்கத்தின் இணையதளங்களை முடக்கும் நோக்கில் கடந்த புதன்கிழமை முதல் மில்லியன் கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 44 மில்லியனுக்கும் அதிகமான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இவற்றில் ஒரு முயற்சி வெற்றியளித்ததாகவும் அதன் காரணமாக சுமார் 10 நிமிடங்களுக்கு தமது அரசாங்கத்தின் இணையதளங்கள் முடக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 
 
இருப்பினும் இவ்வாறான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் தமது நாடு கடந்த வருடம் கணினி வலையமைப்புக்களை பாதுகாக்க மில்லியன் கணக்கான டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்திற்குமிடையில் ஆயுத ரீதியான மோதல்கள் இடம்பெறுகின்ற அதேநேரம் இரு தரப்பினருக்குமிடையில் சமூக வலைத்தளங்கள் வாயிலான போர் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Please Dua for Gaza


இந்தக் குழந்தை என்ன தவறு செய்தது?




ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் ஜனாஸாக்கள் நல்லடக்கம்
 
இஸ்ரேலின் வான் தாக்குதலில் நேற்றுக் கொல்லப்பட்ட காஸாவின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் ஜனாஸாக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன. கொல்லப்பட்டவர்களில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். 
 
உலகையே உறையச் செய்யும் வகையில் காஸா மீது இஸ்ரேல் அரங்கேற்றி வரும் கொடூர தாக்குதல்களில் கடந்த 6 நாட்களுக்குள் 90 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
.

காதி நீதி முறை விரைவில் சீர்திருத்தப்படும் – நீதியமைச்சர் ரவூப் ஹகீம்


-அஸ்ரப் ஏ சமத்-
இலங்கையின் பண்நெடுங்காலமாக  முஸ்லீம் காதீ நீதிமன்ற முறை நடைமுறையில் உள்ளது. இச் சட்டத்தினை மீள மாற்றவேண்டி உள்ளது. அதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் இச் சட்டத்தினை மாற்றியமைப்பதற்கு குழு ஒன்று இயங்குகின்றது. மிக விரைவில் முஸ்லீம் காதி நீதிமன்ற  சட்டத்தில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து அதனை நடைமுறைப்படுத்த நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. என நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஏறாவூர் ஸர்மிலா செய்யத்தின்  சிறகு முளைத்த பெண் கவிதை நூல் வெளியீட்டு வைபவம்  நேற்று (18) கொழும்பு தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வு டாக்டர் தி.ஞாணசேகரன் தலைமையில் நடைபெற்றது. நூல் அறிமுக உரையை  பலாலி ஆசிரியர் கலாசாலை முன்னாள் அதிபர் கவிஞர் சோ. பத்மநாதனும் நூல் ஆய்வினை சட்டததரணி கவிஞர் மர்ஸூம் மௌலானாவும் சாந்தி சச்சிதானந்தன்  என்.எம் அமீன் ஆகியோறும் வாழ்த்துரை  வழங்கினார்கள்  நூலாசிர் ஐனாபா ஸர்மிலா செய்யத் ஏற்புரை நிகழ்த்தினார்.
நூலின் முதற்பிரதியை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நீதியமைச்சரும்  முஸ்லீம் காங்கிரஸின் தலைவருமான  றவுப் ஹக்கீமிடமிருந்து கவிஞரும் டொக்டர் தாசீம் அகமத் பெற்றுக் கொண்டார்கள்.
இவ் விழாவின் பாராளுமன்ற உறுப்பினர் பசீர்சேகுதாவுத் புரவலர் ஹாசிம் உமர் உட்பட இலக்கியவாதிகளும் பலரும் கலந்து கொண்டனர்.

ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புக்கள் !


- எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் -
English எனும் சொல் அது நு England  நாட்டவர்களுக்கு  மட்டும்தான் சொந்தம் என்ற நிலைமை மாறி இன்று உலகிலேயே ஆசிய நாட்டவர்கள்தான் அதிகமாக பேசும் மொழியாக மாறியுள்ளது.
எமது நாட்டின் ஆங்கிலத்தின் அவசியம் ஜனாதிபதி அவர்களால் உணரப்பட்டு அதற்கான முயற்சியின் முடிவாக எமது அயல்நாடான இந்தியாவின் உதவியுடன் எமது நாட்டின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் மிகத்திறமையுள்ள பட்டதாரி ஆங்கில அசிரியர்களை பரீட்சைகள் மூலம் தெரிவு செய்து இந்திய நாட்டின் கல்வியில் முன்னேற்றமடைந்த மாநிலங்களில் ஒன்றான ஹைதரபாத் பல்கலைக்கழகத்திற்கு நான்கு மாத மொழிப்பயிற்சிக்காக 40பேர் அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு அங்கு பயிற்சியினை முடித்துக்கொண்டு வந்த ஆங்கில ஆசிரியர்களை பயன்படுத்தி அன்மையில் புதிதாக நியமனம் வழங்கப்பட்ட ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மத்தி வலயத்திற்கு உட்பட்ட 40ஆசிரியர்களுக்கு காத்தான்குடி மத்திய கல்லூரியில் அமைந்துள்ள ஆசிரியர் வளநிலையத்தில் ENGLISH AS A LIFE SKILL  SPEAK ENGLISH OUR WAY  எனும் தொணியுடன் பத்துநாள் பேச்சு பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றுவதாக கல்வி அமைச்சின் இந்நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் கே.எம்.அன்சார் தெரிவித்தார்.
இதற்கு உதவியாக காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலய ஆசிரியர் எம்.எச். அலியார் மற்றும் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் ஆசிரியர் எம்.எஸ்.அப்துல் ஹை ஆகியோருக்கு பேராதனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்டு  பயிற்சி ஆசிரியர்களாக இவர்கள் நியமிக்கப்பட்டு ஆங்கில பயிற்சி பட்டறைகளை இவர்கள் நடாத்தி வருகின்றனர். இப்பயிற்சி பட்டறை இன்றுடன் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது

தாயினதும் மகனினதும் சடலங்கள் மீட்பு

கிரியெல்ல, முதுன்கொடுவப் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை எரிவடைந்த வீடு ஒன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

32 வயதான தாயினதும் அவரது 7 வயதான மகனினதும் சடலங்களே அவர்களின் எரிவடைந்த வீட்டிலிருந்து இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பிரச்சினைக்குரிய அரசியல் களத்தில் ஈடுபட்டிருக்கும் என் போன்றவர்களுக்கு ஓர் அலாதியான ஆறுதலைத் தருகிறது!


இஸ்லாமிய நவீன சிந்தனைக்கு ஏற்ப முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாட்டில் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் சில நெகிழ்வுத் தன்மைகளோடு எவ்வாறான சட்ட நுணுக்கங்களை கையாளலாம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆன்மீகப் பரப்பில் பிக்ஹூல் அக்லியாத் என்ற பிரிவில் இஸ்லாத்தின் அடிப்படை உசூல்களுக்கு மாற்றமில்லாத வகையிலும், குர்ஆனிய சட்டங்களை மீறாத வகையிலும் ஷரீஅத்திற்கு ஏற்ப எங்களது சமூகம் சார்ந்த சட்டங்களை சிறப்பாகவும் திறம்படவும் செலுருப்படுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றங்களை உட்புகுத்தி அவற்றை சிறப்பாக நடைமுறைப்படுத்துவது பற்றி விரிவாக ஆராயப்படுகிறது.
இவ்வாறு நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்;
கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற ஸர்மிளா ஸெய்யித் எழுதிய ‘சிறகு முளைத்த பெண்’ கவிதை நூல் அறிமுக விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இதனைக் கூறினார்.
அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது;
இலக்கியவாதிகள் மத்தியில் உரையாற்றக்கிடைத்ததை பெரும்பேறாக கருதுகிறேன். ஸர்மிலா ஸெய்யத் ஊடகத்துறையில் குறிப்பிடத்தக்க காலம் பணியாற்றியவர் என்பதால் தேடல் பற்றிய நுண்ணறிவு அவருக்கு உண்டு. பிரச்சினைக்குரிய அரசியல் களத்தில் ஈடுபட்டிருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு இவ்வாறான நிகழ்வுகளில் பங்கெடுப்பது ஓர் அலாதியான ஆறுதலைத் தருகிறது.
பெண்கள் கவிதை எழுதும் பொழுது அதற்கு கடிவாளம் இடுவதற்கு பலதரப்பினர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்ணொருவர் கவிதை எழுதும் பொழுது இஸ்லாமிய சமூகம் அவரை உற்றுநோக்குகின்றது. என்னுடைய பார்வையில் கவிதை யாக்கும் பெண்களை பலர் கவிதாயினி என கூறுவது எவ்வளவு தூரம் பொருத்தமானது என்ற ஒரு கேள்வி எழுகிறது. இதில் ஆண் பெண் பால் வித்தியாசம் பார்ப்பது அவசியமில்லையென நான் கருதுகின்றேன். கவிஞர் என்ற பொதுப் பெயரால் இருபாலாரையும் விளிப்பது சிறந்ததென கருதுகின்றேன்.
இவரது துணிகரம் அதுவும் சொல்ல நினைக்கின்ற விஷயத்தை அச்சமின்றி கூற விளைகின்ற துணிச்சல் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் அதனை ஒவ்வொருவரும் பார்க்கின்ற பார்வை வித்தியாசமானதாய் இருக்கலாம். அவரது ஆக்கங்களுக்கு அளவுக்கதிகமான கடிவாளங்களை போடவேண்டிய அவசியமில்லையென கருதுகிறேன்.
பெண் கவிஞர் ஒருவர் யதார்த்த பூர்வமாக ஏதாவது ஒன்றை நோக்குகின்றார் என்றால் அதில் ஏதோவொன்று தொக்கி நிற்கலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு அவரது கவிதையொன்றில் தத்ரூபமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
விலைமாது பற்றிய அவரது கவிதையொன்றும் என்னைக் கவர்ந்தது. ‘என்னில் எதைத் தேடுகிறாய்’ என்று ஒரு விலைமாது கேட்கும் போது, அவளது அவலம் நன்கு புலப்படுவது அந்தக் கவிதை எடுத்துக்காட்டுகிறது.
முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் இலக்கிய ஆர்வம் கரைபுரண்டோடுவதை அண்மைக்காலமாக நன்கு அவதானிக்க முடிகிறது. இக் கூட்டத்தில் சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா முஸ்லிம் தனியார் சட்;டம் பற்றி பிரஸ்தாபித்ததை நான் நன்கு செவிமடுத்தேன்.
எங்களுடைய சமூகக் கட்டமைப்பில் முஸ்லிம் தனியார் சட்டம், விவாக விவாகரத்துச் சட்டம் என்பன நீண்ட நெடும் காலமாக பின்னிப் பிணைந்திருப்பதை காணலாம். நவீன உலகில் மாறிவரும் இஜ்தியாத்திற்கு ஏற்ப மாற்றங்களைக்கொண்டு வரவேண்டும் என்பதை ஆராய்வதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூக் அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இதில் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இங்கு தனியார் சட்டங்கள் என பாவனைக்கு கொண்டு வரும் போது, ஓர் இஸ்லாமிய நாட்டில் அதாவது முஸ்லிம் பெரும்பான்மை நாட்டில் இஸ்லாமிய நடைமுறை முழுமையாக செயல்படுத்தப்படும் நாட்டில் போல, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாட்டிலும் அவ்வாறு அமைய வேண்டுமென எதிர்பார்ப்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது பற்றி சீர்தூக்கிப் பார்க்கப்படுவது சாலவும் பொருத்தமானது.
இஸ்லாமிய நவீன சிந்தனைக்கு ஏற்ப, முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாட்டில் சில நெகிழ்வுத் தன்மைகளோடு எவ்வாறான சட்ட நுணுக்கங்களை கையாளலாம் என்றவாறு நோக்கப்படுகிறது. ஆன்மீகப் பரப்பில் பிக்ஹூல் ஹக்லியாத் என்ற பிரிவில் இஸ்லாத்தின் அடிப்படை உசூல்களுக்கு மாற்றமில்லாத வகையிலும், குர்ஆனிய சட்டங்களை மீறாத வகையிலும் எங்களது சமூகம் சார்ந்த சட்டங்களை சிறப்பாகவும் திறம்படவும் செலுருப்படுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றங்களை புகுத்துவது பற்றி அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவது இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய அம்சமாகும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை எனக் கருதுகிறேன். இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தமது உரையில் கூறினார்.
கூட்டத்தின் ஆரம்பத்தில் கலாபூஷணம் நூறுல் ஐன் நஜிமுல் ஹூசைன் வரவேற்புரையும், டாக்டர் தி. ஞானசேகரன் தலைமையுரையும் நிகழ்த்தினர். நூலாசிரியை ஸர்மிளா ஸெய்யத் நன்றி உரையாற்றினார். விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய திருமதி சாந்தி சச்சிதானந்தன் விஷேட அதிதியாகவும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணி திருமதி அன்பேரியா ஹனீபா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போராம் தலைவர் என்.எம். அமீன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். நூலின் முதற் பிரதியை டாக்டர். தாஸிம் அஹமத் பெற்றுக்கொண்டார்.

site counter