
இஸ்ரேலிய அரசாங்கத்தின் இணையதளங்களை முடக்கும் நோக்கில் கடந்த புதன்கிழமை முதல் மில்லியன் கணக்கான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 44 மில்லியனுக்கும் அதிகமான இணையவழித் தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இவற்றில் ஒரு முயற்சி வெற்றியளித்ததாகவும் அதன் காரணமாக சுமார் 10 நிமிடங்களுக்கு தமது அரசாங்கத்தின் இணையதளங்கள் முடக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இவ்வாறான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் தமது நாடு கடந்த வருடம் கணினி வலையமைப்புக்களை பாதுகாக்க மில்லியன் கணக்கான டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்திற்குமிடையில் ஆயுத ரீதியான மோதல்கள் இடம்பெறுகின்ற அதேநேரம் இரு தரப்பினருக்குமிடையில் சமூக வலைத்தளங்கள் வாயிலான போர் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக