ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா இணக்கம்
இலங்கை மீது விதிக்கப்பட்ட தடையை தளர்த்தும் நோக்கில் தானும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும் அமெரிக்க இராஜங்கத் திணைக்கள பிரதிநிதியான அலிஸனுடன் வொஷிங்டனில் பேசியதாக இவ் அதிகாரியான சில்வா கூறினார்.
அமெரிக்கா தடைக்கமைய இலங்கை, ஈரானிய எண்ணெய் இறக்குமதியை குறைத்ததையிட்டு அமெரிக்கா திருப்தியடைந்துள்ளது.
சப்புகஸ்கந்தை பெற்றோல் சுத்திகரிப்பு நிலையத்தில் குறித்ததொரு வகையான ஈரானிய மசகு எண்ணெயை மட்டுமே சுத்திகரிக்கமுடியும். இதற்காக ஈரானிலிருந்து 10 கப்பல் மசகு எண்ணெயை இலங்கை இறக்குமதி செய்வதை அனுமதிக்க அமெரிக்கா தயராகவுள்ளதெனவும் அவர் கூறினார்.
ஆயினும் இலங்கை ஈரானிடமிருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதில் வேறு தடைகளுள்ளன. கப்பல்களுக்கு காப்புறுதி, வங்கிச் செயன்முறைகள் போன்றவை தொடர்பான தடைகளும் தாண்டப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.
நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு கிடையாது. போதிய கையிருப்பு உள்ளதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரி சில்வா கூறினார்.
லங்கா இந்திய எண்ணெய்க் கம்பனி பெற்றோல் விலையை அதிகரித்தாலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோல் விலையை அதிகரிக்காதெனவும் அவர் கூறினார். லங்கா இந்திய எண்ணெய்க் கம்பனி சந்தையில் 5 சதவீத பங்கை மட்டுமே கொண்டுள்ளது. இதனால் பெரிய தாக்கம் ஏற்படப்போவதில்லையெனவும் சில்வா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக