அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

புதன், 3 அக்டோபர், 2012

திருத்தியமைக்கப்பட்ட அல்-ஆலிம் பாடத்திட்ட வெளியீட்டு விழா!


திருத்தியமைக்கப்பட்ட அல்-ஆலிம் பாடத்திட்ட வெளியீட்டு விழா!

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) 
1976ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள அல்ஆலிம் பாடத்திட்டம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அரசாங்கப் பாடத்திட்டக் குழு, துறைசார்ந்த உலமாக்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பரீட்சைத் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் திருத்தியமைத்துள்ளது.
இப்பாடத்திட்டம் 2013ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் விதமாக அல்ஆலிம் முதவஸ்ஸிதா, அல்ஆலிம் ஸானவிய்யா ஆகிய இரு பரீட்சைகளுக்குமுரிய பாடத் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பாடத்திட்ட வெளியீட்டு விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2012 ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு 10, இலக்கம் 10 ஹேஜ் கோட்ஸில் அமைந்துள்ள புகர் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வைபவத்தின் போது பாடத்திட்டம் சம்பந்தமான விளக்கவுரைகளை துறைசார்ந்த உலமாக்களைக் கொண்டு நிகழ்த்தப்படவுள்ளன. இவ்வைபவத்தில் பங்குபற்றுவதற்காக சகல அரபுக்கல்லூரி அதிபர்களுக்கும் நிர்வாகத் தலைவர்களுக்கும் ஏற்கனவே அழைப்பிதல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அழைப்பிதல் கிடைக்கப்பெறாத அரபுக்கல்லூரிகள் திணைக்களத்தின் 0112691874 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அழைக்கப்பட்ட சகலரும் இவ்வைபவத்தில் தவறாது சமூகமளிக்குமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் வை.எல்.எம்.நவவி கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter