மாலக்க சுற்றுலாவுக்காகவே வெளிநாடு செல்கிறார்
கடந்த வழக்கு விசாரணையின்போது மாலக சில்வா உயர் கல்விக்காக வெளிநாடு செல்வதாக தவறுதலாக நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களால் தெரிவிக்கப்பட்டது. இவர் உண்மையில் சுற்றுலாவுக்காகவே வெளிநாடு செல்கின்றாரென வழக்குரைஞர் கூறினார்.
ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 10ஆம் திகதிவரை மாலக்க சில்வா நாட்டை விட்டுச் செல்வதற்கு வழக்குரைஞர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் வழக்குரைஞர் இன்று கேட்டுக்கொண்டபடி ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதிவரை நாட்டைவிட்டுச் செல்வதற்கு மாலக்க சில்வாவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. (லக்மால் சூரியகொட)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக