இவர்கள், கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி அரசியல்வாதியொருவரின் சகாக்கள் என பொலிஸார் மற்றும் வனஜீவி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மன்னனின் கிரீடத்தை தேடும் நடவடிக்கையில் மேற்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிக்கும் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தம்புளை அரசியல்வாதியொருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, காட்டுப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நால்வரில் மூவர் கேகாலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக குறிப்பிட்ட பொலிஸார் மற்றும் வனஜீவி அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக