அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 17 நவம்பர், 2013

'தேசத்திற்கு நிழல்' மரம் நடுகை நிகழ்வு நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்திலும் இடம் பெற்றது.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

தேசத்திற்கு நிழல் மரம் நடுகை நிகழ்வு இன்று (15) நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

வித்தியாலய பதில் அதிபர் எம்.அச்சி முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல், பிரதேச சபை எதிர்க் கட்சித் தலைவர் (ஐ.சு.ஜ.மு) வை.எல்.சுலைமா லெவ்வை ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டி வைத்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் 'தேசத்திற்கு நிழல்' மரம் நடுகை.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கல்முனைப் பிராந்திய வீதி அபிவிருத்தி அதிகார சபையினரின் ஏற்பாட்டிலான தேசத்திற்கு நிழல் மரம் நடுகை நிகழ்வு
இன்று (15) நிந்தவூர் அல்லி மூலைச் சந்தியில் இடம் பெற்றது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம பொறியியலாளர் ஐ.எல்.அமிறுல் பாரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மரங்களை நட்டி வைத்தார்.

நிந்தவூரில் ஜனாதிபதியின் "தேசத்திற்கு நிழல்" மரநடுகை விழா.

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
 
அதிமேதகு ஜனாதிபதியின் 68வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று(15)  நாடு முழுவதும் நடைபெற்ற 'தயட்ட செவன' (தேசத்திற்கு நிழல்)  தேசிய மரநடுகை விழா நிந்தவூரிலும்  சிறப்பாக நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தஹாநாயக்க> நிந்தவூர் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.சி;.எம்.மாஹீர்> கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஹார்லிக் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு> மரங்களை நட்டி வைத்தனர்.  

பொதுநலவாய நாடுகளின் மாநாடு நிறைவு

பொதுநலவாய நாடுகளின் 22வது அரச தலைவர்கள் மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த மாநாட்டுக்கான பணிகள் கடந்த 10ம் திகதி முதல் இடம்பெற்று வந்தன.

இதன்படி ஹம்பாந்தொட்டையில், பொதுநலவாய நாடுகளின் இளைஞர் மாநாடு நடைபெற்றிருந்தது.

அத்துடன் காலியில் பொது மாநாடு நடைபெற்றது.

கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாடு இடம்பெற்றது.

இதில் 2000க்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டளர்கள் பங்குபற்றி இருந்தனர்.

உருளை கிழக்கு வரி குறைப்பு



உருளைக்கிழக்கு, பெரிய வெங்காயம் மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றின் இறக்குமதி வரிகள் இன்று முதல் குறைக்கப்பட உள்ளன.

நிதியமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இதன்படி, இறக்கமதி செய்யப்படும் விதை உருளைக்கிழக்கு கிலோ ஒன்றுக்கான இறக்குமதி வரி 30 ரூபாவாலும், பெரிய வெங்காயத்தின் வரி 25 ரூபாவாலும், சிறிய வெங்காத்திற்க வரி 10 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு நிவாரண விலையில் இந்த பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்த வரிக்குறைப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

site counter