பொதுநலவாய நாடுகளின் 22வது அரச தலைவர்கள் மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த மாநாட்டுக்கான பணிகள் கடந்த 10ம் திகதி முதல் இடம்பெற்று வந்தன.
இதன்படி ஹம்பாந்தொட்டையில், பொதுநலவாய நாடுகளின் இளைஞர் மாநாடு நடைபெற்றிருந்தது.
அத்துடன் காலியில் பொது மாநாடு நடைபெற்றது.
கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாடு இடம்பெற்றது.
இதில் 2000க்கும் அதிகமான வெளிநாட்டு முதலீட்டளர்கள் பங்குபற்றி இருந்தனர்.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது மாநாடு கொழும்பு தாமரைத் தடாகம் மகிந்தராஜபக்ஷ அரங்கில் நடைபெற்றது.
இதற்கு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் தலைமை தாங்கினார்.
இதன் போது அடுத்து இரண்டு வருடங்களுக்கான பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டது.
எவ்வாறாயினும் இன்றைய தினம் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களுக்கு இடையிலான சுமூக கலந்துரையாடல் ஒன்று, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதன் கலந்துரையாடலுக்கு மேலதிகமாக, அரச தலைவர்களுக்கு இடையில் நிறைவேற்று ரீதியான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இதன் போது இந்த முறை இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை உள்ளடக்கிய இறுதி அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக