அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

திங்கள், 3 ஜூன், 2013

நிந்தவூர் அல்-அஷ்றக் மைதானத்தில் கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள். -கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதி.-

நிந்தவூர் அல்-அஷ்றக் மைதானத்தில்
கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள்.
-கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதி.-
         ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்)
கல்முனைக் கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் கடந்த (30ந் திகதி ) நிந்தவூர் அல்- அஷ்றக் தேசியக் கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸீம் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
மேலும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் புஸ்பகுமார, மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், நிந்தவூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் வை.எல்.சுலைமாலெவ்வை, கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம்  ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விளையாட்டு விழாவில் கல்முனை வலயத்திலுள்ள நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை தமிழ் பிரிவு, கல்முனை முஸ்லிம் பிரிவு ஆகிய ஐந்து கோட்டங்களிலுமுள்ள 63 பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள், கல்விப் பணிப்பாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.
மாணவர்களின் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளுடன், அணிவகுப்பு மரியாதை, பேண்ட் வாத்தியங்கள், உடற்பயிற்சி கண்காட்சிகள் என்பனவும் இடம் பெற்றன.
போட்டி முடிவுகளின்படி சகல போட்டிகளிலும் கல்முனை தமிழ் பிரிவுக் கோட்டம் முதலாம் இடத்தையும், நிந்தவூர்க் கோட்டம் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கு உரையாற்றிய பிரதம அதிதி றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம 'இப்பிரதேச மக்கள் கல்வியிலும்,விளையாட்டிலும் மட்டுமல்லாது சிறப்பான அரசியல் ஞானமுடையவர்கள் என்பதையும் நான் அறிவேன்.இவை யாவற்றிலும்  முன்னேறிச் செல்ல சமாதானத்தைப் பெற்றுத் தந்தவர்களுக்கு நாம் என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.  







site counter