அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

வெள்ளி, 9 நவம்பர், 2012

பிரதம நீதியரசர் தனக்கெதிரான நிதிக்குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பு

34 மில்லியன் ரூபா கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட தனக்கு எதிராக உள்ள அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க நிராகரித்துள்ளார்.


தனது சார்பில் சட்டத்தரணி நீலகண்டன், நீலகண்டன் சட்ட நிறுவனத்தின் ஊடாகவே மேற்படி நிராகரிப்பை, கடிதம் மூலம் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

அக் கடிதம் பின்வருமாறு:



450 ஆபாச படங்களுடன் சிக்கிய பிக்கு


ஆபாச படங்களை தனது மடிக்கணனியில் வைத்திருந்த பிக்கு ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கெப்பதிகொல்லாவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிஓய பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து கடந்த 6 ஆம் திகதி குறித்த பிக்கு வெலிஓய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது இவருடைய மடிக்கணனியில் பல ஆபாச படங்கள் இருந்துள்ளன. மேலும் இவருடன் இருந்த இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு தன்னை ரத்மலான பாலித தேரர் என அடையாளம் காண்பித்த போதிலும் அவருடைய அடையாள அட்டையில் மித்தெனிய உதித்த என பெயர் குறிப்பிட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் சில வருடங்களுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்துள்ளதுடன் அப்பிரதேச மக்களிடம் தன்னை வௌ;வேறு தகவல்களை கூறி அடையாளப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டதோடு இவரின் மடிக்கணனியில் சுமார் 450 ஆபாச படங்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சர்ச்சைக்குரிய திரைப்படத்தை தயாரித்தவருக்கு ஓராண்டு சிறை

Jailed

நபிகள் நாயகத்தை அவதூறாக சித்திரித்து, படம் தயாரித்து, பல்வேறு நாடுகளில் வன்முறைக்குக் காரணமான தயாரிப்பாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக வர்த்தக மைய கோபுரம், தகர்க்கப்பட்ட நினைவு தினம், செப். மாதம் 11ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அமெரிக்காவில், "முஸ்லிம்களின் அப்பாவித்தனம்' என்ற பெயரில், ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில், நபிகள் நாயகத்தை கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள், இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
எகிப்து, லிபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில், இது தொடர்பாக பெரிய வன்முறை ஏற்பட்டது. லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில், அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டார்.
இந்தப் படத்தை தயாரித்தவர், எகிப்து நாட்டைச் சேர்ந்த நகோலா பாஸ்லி. தற்போது கலிபோர்னியாவில் வசிக்கிறார். வங்கி மோசடி தொடர்பாக, 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நகோலா, கடந்த ஆண்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஜாமினில் இருந்த காலத்தில், அவர் நன்னடத்தை விதியை மீறியதாகக் கூறி, செப். மாதம், மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மூன்று பெயர்களில் இவர் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதனால், 4.5 கோடி ரூபாய் அளவுக்கு இவர் இழப்பை ஏற்படுத்தியதாக, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இந்த குற்றத்துக்காக, நகோலா பாஸ்லிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
"நபிகள் நாயகத்தை பற்றி, அவதூறான படம் தயாரித்த நகோலாவை கொல்பவர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும்' என, பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், அறிவிப்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-Dinamalar-

சர்ச்சைக்குரிய திரைப்படத்தை தயாரித்தவருக்கு ஓராண்டு சிறை


Jailed

நபிகள் நாயகத்தை அவதூறாக சித்திரித்து, படம் தயாரித்து, பல்வேறு நாடுகளில் வன்முறைக்குக் காரணமான தயாரிப்பாளருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக வர்த்தக மைய கோபுரம், தகர்க்கப்பட்ட நினைவு தினம், செப். மாதம் 11ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அமெரிக்காவில், "முஸ்லிம்களின் அப்பாவித்தனம்' என்ற பெயரில், ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில், நபிகள் நாயகத்தை கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள், இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
எகிப்து, லிபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில், இது தொடர்பாக பெரிய வன்முறை ஏற்பட்டது. லிபியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில், அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டார்.
இந்தப் படத்தை தயாரித்தவர், எகிப்து நாட்டைச் சேர்ந்த நகோலா பாஸ்லி. தற்போது கலிபோர்னியாவில் வசிக்கிறார். வங்கி மோசடி தொடர்பாக, 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நகோலா, கடந்த ஆண்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஜாமினில் இருந்த காலத்தில், அவர் நன்னடத்தை விதியை மீறியதாகக் கூறி, செப். மாதம், மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மூன்று பெயர்களில் இவர் பண மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதனால், 4.5 கோடி ரூபாய் அளவுக்கு இவர் இழப்பை ஏற்படுத்தியதாக, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இந்த குற்றத்துக்காக, நகோலா பாஸ்லிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
"நபிகள் நாயகத்தை பற்றி, அவதூறான படம் தயாரித்த நகோலாவை கொல்பவர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும்' என, பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், அறிவிப்பு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-Dinamalar-

வாழைச்சேனை துறைமுகப் பகுதி மக்களை ரெக்கிங் செய்யும் குரங்கு; நடவடிக்கை எடுக்கக் கோரி மனு!


-தர்ஷன்-
வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் காட்டுக் குரங்கு ஒன்றின் தாக்குதலால் நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது தொடர் கதையாகவுள்ளது. இதனால் அப்பகுதி பொது மக்கள் அச்சமடைந்து காணப்;படுகின்றனர்.
இக்குரங்கானது வாழைச்சேனை ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள கண்ணாக் காட்டில் வசித்து வருகின்றது. அவ்வழியால் நாசிவன்தீவு கிராமத்திற்கு செல்லும் பொது மக்கள், அருகிலுள்ள கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், பாடசாலை செல்லும் மாணவர்கள், மீனவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கிராமத்தவர்கள் என பலரையும் பாராபட்சம் காட்டாது கடித்தும் பிறாண்டியும் கன்னத்தில் அறைந்தும் துன்பம் விளைவித்து வருகின்றது.
இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையம், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் கோறளைப்பற்று தவிசாளர், வாழைச்சேனை பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோரிடம் பொது மக்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் கையொப்பம் இட்டு மகஜர் ஒன்றை அனுப்பி தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இவ்வாறான சம்பவம் நடைபெற்றிருந்தது. ஆற்றங்கரைக்கு முன் உள்ள பிரத்தியேக வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களை கல்வி கற்க விடாமல் அவர்கள் மேல் பாய்ந்து அவர்களின் கல்வியை சீர்குலைக்கின்றது.
பகல், இரவு வேலைகளில் வீதிகளிலும் பொது மக்கள் வீடுகளில் சென்று அட்டகாசம் செய்கின்றது. இரவு வேலைகளில் கூட மக்கள் வெளியில் வர அச்சமடைகின்றனர். இவ்வாறான நிலை நீடிக்குமானால் வைத்தியசாலையில் குரங்குக் கடியில் அனுமதிக்கப்படும் வீதம் அதிகரிக்கும், பாடசாலை செல்லும் மாணவர்கள் வீதம், தொழிலுக்கு செல்பவர்கள் வீதம் குறைந்து செல்லும்
எனவே இக்குரங்கின் தொல்லையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கு உடனடித் தீர்வைப் பெற்றுத் தருமாறு இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்கின்றனர்.

வரவு - செலவுத்திட்ட பற்றாக்குறை ரூ.507.4 பில்.

வரவு - செலவுத்திட்ட பற்றாக்குறை ரூ.507.4 பில்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச வேண்டுமாம்: செல்வராசா எம்.பி.

2013ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தினை  நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பித்த நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தேநீர் இடைவேளையின்போது உரையாடுகையில் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா மேலும் கூறுகையில்...

நாடாளுமன்றத்தில் தேநீர் இடைவேளையின்போது பீலிக்ஸ் பெரேரா, சுமந்திரன், சம்பந்தன் ஆகியோருடன் நானும் உரையாடிக் கொண்டிருந்தேன். அச்சமயம், அவ்விடத்திற்கு வந்த ஜனாதிபதி - நீதித்துறை பற்றிய சில விடயங்களை கூறியதோடு, உங்களுடன் நான் ஆறுதலாக உரையாடவேண்டும், அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.

எது சம்பந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேசவுள்ளார் என்பது பற்றி தெரியவில்லை. ஆனால், எம்முடன் பேசவேண்டும் என்று குறிப்பிட்டமை முக்கியமான விடயமாகும் என்று குறிப்பிட்டார்.

சாய்ந்தமருதில் கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞன் காலமானார்!


சாய்ந்தமருதில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கத்திக் குத்துக்கு இலக்கான இளைஞன் முஹம்மது சிராஸ் (வவா) சற்று முன்னர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் காலமானார்.
சாய்ந்தமருது முதலாம் குறிச்சியில் வீடு ஒன்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை மூன்று மணியளவில் கல்முனை சாஹிராக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அயல் வீட்டு குடும்பத்தினர் மத்தியில் பணக் கொடுக்கல் வாங்கல் தகராறு சண்டையாக மாறியதன் எதிரொலியாகவே இத்தீவைப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் வீடு மற்றும் கார் என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று மாலை மூன்று மணியளவில் இடம்பெற்ற கைகலப்பின் போது இளைஞர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்தே கத்தியால் குத்தியவரின் வீடு மற்றும் கார் என்பன தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
கத்திக் குத்துக்கு இலக்கான வவா என்றழைக்கப்படும் முஹம்மது சிராஸ் (வயது-24) எனும் இளைஞன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் இவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது குடும்ப உறவினர் ஒருவர் மெட்ரோ மிரருக்குத் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிக புலனாய்வு விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை இந்த இளைஞனுடன் சண்டையிட்டு கத்தியால் குத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது பக்கத்து வீட்டு குடும்பஸ்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது வீடு மற்றும் கார என்பவையே எரிக்கப்பட்டுள்ளன.

என் மனம் சங்கடத்துக்குள்ளானது: ஜனாதிபதி



2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. புல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் இடம்பெற்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஏழாவது வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை அவர் சம்பிரதாயபூர்வமான வரவு – செலவுத் திட்ட பெட்டகத்தில் கொண்டுவராது முன்மொழிவுகளை கோவையிலேயே கொண்டுவந்தார். அவரது உரை இரண்டு மணித்தியாலங்களும் 36 நிமிடங்களும் நீடித்தன.

நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 12.52 மணிக்கு கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவைக்கு பிரவேசித்தார்.

அவரை, பிரதி நிதி அமைச்சரும் சிரேஷ்ட அமைச்சருமான சரத் அமுனுகம, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி ஆகியோர் அழைத்துவர, ஆளுங்கட்சியினர் எழுந்துநின்று மேசைகளில் தட்டி வரவேற்றனர். அப்போது எதிரணியிலிருந்த எவரும் எழுந்திருக்கவில்லை.

ஜனாதிபதி தனது முன்மொழிவுகளை வாசித்துக்கொண்டிருந்த போது இடைநடுவில் சபைக்குள் பிரவேசித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறிது நேரம் சபையில் அமர்ந்திருந்துவிட்டு அவையைவிட்டு வெளியேறிவிட்டார்.

தனது முன்மொழிவுகளில் நிவாரணம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் ஜனாதிபதி அறிவித்த போது ஆளுந்தரப்பினர் மேசைகளில் தட்டி வரவேற்றனர்.

பாடசாலை மாணவர்களுக்கான நிவாரணங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கும் போது , 'கஷ்டப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் அலரி மாளிகைக்கு வரும் போது கிழிந்த பாதணிகளை அணிந்திருந்தனர். இதனைப் பார்த்த எனது மனம் சங்கடத்துக்குள்ளாகியது' என்றார்.

இதேவேளை, நாட்டில் சக்கரை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக தென்னங்கன்றுகளை வழங்குவதாக குறிப்பிட்டார்.

இதன்போது எதிர்க்கட்சியினர் நகைச்சுவையாக ஏதோ கூறுவதற்கு முற்பட்டனர். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தென்னங்கன்றுகள் சக்கரை உற்பத்திக்கு மாத்திரமே தவிர உள்ளூர் பானங்களைத் தயாரிப்பதற்கல்ல என்றார்.

வரவு செலவுத் திட்ட உரையை அவதானிப்பதற்காக வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்தனர்.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கோப்ரால், நிதி அமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை, புதிய சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திரா, தேநீர் இடைவேளையின் பிறகு ஜனாதிபதியிடம் ஏதோ ஒரு ஆவணத்தைக் கொடுத்து கையொப்பம் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

கன்டர் வாகனம் மோதி கல்முனைக்குடி குடும்பஸ்தர் பலி!


ஒலுவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி வந்த கன்டர் வாகனமும் கல்முனையிலிருந்து அக்கரைப்பற்றினை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை இரவு ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்ற கல்முனைக்குடியைச் சேர்ந்த செய்னுலாப்தீன் அப்துல் கபார் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அதேவேளை மின்சாரக் கம்பத்தில் கன்டர் வாகனம் மோதியதால் அந்த மின் கம்பம் உடைந்து விழுந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

ஒலுவில் விபத்தில் ஒருவர் பலி


(ஹனீக் அஹமட்,எஸ்.மாறன்)


ஒலுவில் பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நபரொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற கன்டர் ரக வாகனமும், கல்முனையிலிருந்து அக்கரைப்பற்றினை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

விபத்தில் - மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த 55 வயதுடைய செய்னுலாப்தீன் அப்துல் கபார் என்பவரே பலியாகியுள்ளார். கல்முனையைச் சேந்த இவர் 05 பிள்ளைகளின் தந்தையாவார்.

இந்த விபத்தின் காரணமாக கட்டுப்பாட்டினை இழந்த கன்டர் வாகனம் அருகிலிருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதியதால் சாரதி கடுமையான காயங்களுக்குள்ளானதோடு, வாகனமும் சேதத்துக்குள்ளானது. பாலமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த வாகனத்தின் சாரதி தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மின்சாரக் கம்பத்தில் கன்டர் வாகனம் மோதியதையடுத்து – கம்பம் உடைந்து விழுந்ததால், அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8.00 மணிவரை மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விபத்தில் மரணமானவரின் பிரேதம் பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்துத் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




site counter