அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசலை ஹக்கீம் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டனர்



மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைஇ பாவற்கொடிச்சேனை கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்ட முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலை நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலர் சென்று பார்வையிட்டுள்ளனர். 

அத்துடன்இ இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர். 
இந்தப் பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர். 

தற்போது இந்தப் பள்ளிவாசல் மீளவும் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட நிலையில்இ இராணுவத்தினரும் பொலிஸாரும் வழமை நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர். 

இதேவேளைஇ நேற்று சனிக்கிழமை இந்தக் கிராமத்தில் கோடாரியினால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பெண்மணியையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்று பார்வையிட்டார். 

இதன்போது கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன்இ கே.எல்.எம்.பரீட்இ காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்சாஇ நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் ஆகியோரும் சென்று பார்வையிட்டனர். 

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முன்னணி!


லண்டன் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் மீண்டும் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆரம்பத்தில் முதலிடத்தில் சீனா காணப்பட்ட போதிலும் அமெரிக்கா சீனாவை முந்தி முதலிடத்தைப் பிடித்துக் கொண்டது.
39 தங்கங்கள், 25 வெள்ளிகள், 26 வெண்கலங்கள் அடங்கலாக 90 மொத்தப் பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் காணப்படுகிறது.
36 தங்கங்கள், 22 வெள்ளிகள், 19 வெண்கலங்களோடு நேற்றைய நாளை ஆரம்பித்த சீனா, ஒரு தங்கம் 2 வெள்ளிகளை மாத்திரம் பெற்று 37 தங்கங்கள், 24 வெள்ளிகள், 19 வெண்கலங்களோடு 90 மொத்தப் பதக்கங்களோடு இரண்டாவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.
25 தங்கங்கள், 13 வெள்ளிகள் 14 வெண்கலங்களோடு மொத்தமாக 52 பதங்கங்களைப் பெற்று மூன்றாவது இடத்தைத் தொடர்ந்தும் தக்க வைத்துள்ளது. ரஷ்யா, தென் கொரியா ஆகியன தலா 12 தங்கங்களைப் பெற்றுள்ள போதிலும், ரஷ்யா அதிகளவிலான வெள்ளிப் பதக்கங்களைக் கொண்டிருப்பதால் நான்காவது இடத்திலும், தென் கொரியா 5வது இடத்திலும் காணப்படுகின்றன.
ஜேர்மனி 10 தங்கங்களோடு 6வது இடத்திலும், பிரான்ஸ், ஹங்கேரி ஆகியன தலா 8 தங்கங்களோடு 7வது, 8வது இடங்களிலும் இத்தாலி, அவுஸ்திரேலியா ஆகியன 7, 6, தங்கங்களோடு 9ம், 10ம் இடங்களிலும் காணப்படுகின்றன.
இதுவரை 43 நாடுகள் ஒரு தங்கப் பதக்கத்தையாவது வென்றுள்ள அதேவேளை 90 நாடுகள் ஒரு பதக்கத்தையாவது பெற்றுள்ளன.

site counter