அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து உயிராபத்து இல்லை

(vi)

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் செட்டிபாளையம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் பாரிய பஸ் விபத்தொன்று இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற தனியார் பஸ் ஒன்றும் மட்டக்களப்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலைக்குச் சொந்தமான பஸ் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

பதவி விலக மாட்டேன் தொடர்ந்தும் பதவி வகிப்பேன் ; சிராஸ் சூளுரை

(tw)
கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹிப் தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாதெனவும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில் தான் தொடர்ந்தும் பதவி வகிக்கப் போவதாக சிராஸ் மீராசாஹிப் சூளுரைத்துள்ளார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சிராஸ் மீராசாஹிப், கட்சியின் தீர்மானத்துக்கமைவாக மேயராகப் பதவியேற்றார்.
எனினும் மேயர் வேட்பாளராகப் போட்டியிட்டு அதற்கடுத்த விருப்பு வாக்குகளைப் பெற்ற சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அடுத்த இரண்டு வருடங்கள் பதவி வகிப்பாரென கட்சித் தலைமை அப்போதே அறிவித்திருந்தது.

அரசியல் சுயநலத்தில் அடைகாக்கப்படும் குஞ்சுகள்


(கத்தாரிலிருந்து தாஸீம்)

அண்மைக்கால கல்முனை அரசியல் சாணக்கியத்தில் சற்று பலத்த காற்று வீசிக்கொண்டிருப்பதை எம்மால்  அவதானிக்கக் கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எமது சமூகத்தின் ஒற்றுமைக்கும் அதன் தார்மீகக் கோட்பாடுகளுக்கும் எவ்வாறான பாதிப்பை இந்த அரசியல் வீர விளையாட்டுக்கள் உண்டாக்கியுள்ளன என்பதை நாம் அலசும்போது குறிப்பாக மக்களிடையே துவேசக் கருத்துக்களை விதைப்பதன் மூலம் தமது இருப்புக்களை தக்கவைக்க பாடுபடுகின்றமை இங்கு புலனாகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமை குழப்பத்தை ஏற்படுத்துகின்றதா..?

ஊர் குழம்பினாதான் உடையாருக்கு வேட்டை  என்று கிராமத்தவர்கள் கூறும் பழ மொழியை  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம்  உண்மைப்படுதுகின்றது.  ஊர் குழம்புவதற்கு   ஊரில்  உள்ள அரசியல்  வாதிகளை  குறிப்பாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  கட்சி  அரசியல் வாதிகளை  கட்சி தலைமைத்துவம் பிளவு படுத்தி அழகு பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும் .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு  ஊருக்கும்  இரண்டு பேரை நிரந்த இணக்கமில்லாதவர்களாக வைத்துக் கொண்டுள்ளது  இதன் மூலம் தன்னையும் தன் செயலையும்  மறைக்கும் அரசியலை  தலைமைத்துவம் செய்ய முனைகின்றது.

கிழக்கில் ராணுவ ஆட்சியா? அடியோடு மறுக்கிறார் ஹிஸ்புல்லாஹ்!

Hizbullah

கிழக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சி நடைபெறவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன்; “கிழக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது. காணி, பூமி, மேய்ச்சல், விவசாயம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ராணுவத் தலையீடு உள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
இதன்போது குறுக்கிட்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா “உங்களின் இந்த கூற்றை மறுக்கின்றேன்- இங்கு இராணுவ ஆட்சி நடைபெறவில்லை. நீங்கள் அரசியல் செய்வதற்காக இவற்றை கூறுகின்றீர்கள். உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.
“இங்கு சிவில் நிருவாக ஆட்சியே நடைபெறுகின்றது. இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்ற கூற்றை முற்றாக நான் மறுக்கின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது பிரதியைமச்சர் ஹிஸ்புல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் ஆகியோருக்கு இடையில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
S:MM

site counter