ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு ஊருக்கும் இரண்டு பேரை நிரந்த இணக்கமில்லாதவர்களாக வைத்துக் கொண்டுள்ளது இதன் மூலம் தன்னையும் தன் செயலையும் மறைக்கும் அரசியலை தலைமைத்துவம் செய்ய முனைகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை ஏறாவூரில் அமைச்சர்களான பசீர் சேகு தாவூதையும் ,ஹாபீஸ் நசீரையும் அரசியல் பகையாளிகளாக்கி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் அழகு பார்க்கிறது..அதே போன்று அம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் ஹரீஸ் எம்பி யையும் ஜவாதையும் மோதவிட்டுள்ளனர் ,அதேபோல் சாய்ந்தமருதில் மேயர் சிராசையும் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலயும் எதிரிகளாக்கி அதில் குளிர் காய்கின்றனர். அதேபோல் நிந்தவூரில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதேச சபை தவிசாளருக்கும் இடையே இணைக்கப் பாடு இல்லை இவ்வாறான நிலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
ஊருக்குள் மட்டுப்படுதப்பட்டிருந்த குழப்பம் சற்று வெளியே வந்து ஊர் வாதத்தை கிளருகிறது .இதைதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்த்ததா . தேர்தல் நடந்து முடிந்த கையுடன் முதல்வர் யார் என்பதை தீர்மானிக்க தலமைத்துவதால் முடிவெடுக்கக் முடியாமல் போனதால் தான் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
தலைமைத்துவம் சரியான நேரத்தில் பிழையான முடிவை எடுக்க முடியாது அதே போன்று கட்சிக்குள் இருப்பவர்களை எதிரிகலளாக்கும் செயலையும் தவிர்க்க வேண்டும்
@Jaffna Muslim.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக