அன்பார்ந்த பெறுமதி மிக்க வாசகர்களே எமது இடுகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். இதில் ஏதாவது தவறுகள் இருப்பின் எமக்கு தெரியப்படுத்துங்கள் அவற்றை முடிந்தவரை திருத்தியமைக்க முயற்சிக்கின்றோம். எமது சேவைகள் உமக்கு பிடித்திருந்தால் அவற்றை இன்னும் சிறப்பாக்குவதற்குரிய யோசனைகளை எமக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஒவ்வொரு இடுகைகளின் இறுதியிலும் கருத்துப் பெட்டி இடப்பட்டுள்ளது. அவற்றில் உமது கருத்துகளை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ உங்களது மொழிநடையில் டைப்செய்து அனுப்பிவையுங்கள். உங்கள் ஆதரவே எங்கள் வெற்றியாகும். நன்றி.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

அரசியல் சுயநலத்தில் அடைகாக்கப்படும் குஞ்சுகள்


(கத்தாரிலிருந்து தாஸீம்)

அண்மைக்கால கல்முனை அரசியல் சாணக்கியத்தில் சற்று பலத்த காற்று வீசிக்கொண்டிருப்பதை எம்மால்  அவதானிக்கக் கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எமது சமூகத்தின் ஒற்றுமைக்கும் அதன் தார்மீகக் கோட்பாடுகளுக்கும் எவ்வாறான பாதிப்பை இந்த அரசியல் வீர விளையாட்டுக்கள் உண்டாக்கியுள்ளன என்பதை நாம் அலசும்போது குறிப்பாக மக்களிடையே துவேசக் கருத்துக்களை விதைப்பதன் மூலம் தமது இருப்புக்களை தக்கவைக்க பாடுபடுகின்றமை இங்கு புலனாகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளின் பின் விளைவுகள் எவ்வாறு எமது சமூகத்தை சீரிய நிலையில் இட்டுச் செல்லும் என்பது கேள்விக்குறியே.! கடந்த இரண்டு வருடங்களில் எமது கல்முனைப் பிரதேச அபிவிருத்திச் செயற்பாடுகளில் நாம் என்ன முன்னேற்றத்தை கண்டோம் கடந்த காலங்களில் மாநகரசபை முதல் பாராளுமன்றம் வரை நாம் கண்டுகொண்ட அபிவிருத்தி கலாச்சார செயற்பாடுகளின் மாற்றம்தான் என்ன? ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தத்தமது சுய இருப்புக்களை நிலைநிறுத்துவதற்கு தம்மால் இயன்றவகையில் தம்மோடு ஜால்ரா போடுகின்றவர்களின் வயிறுகளை நிரப்பி இருக்கைகளை உறுதிசெய்துகொள்கின்றனர். இதற்குப் பலிக்கடாவாக அப்பாவி பாமர மக்கள் பலியாகுவது எவ்வகையில் நியாயம்.

எமது மாநகர சபைக்கு ஒரு மேயர் என்ற ரீதியில் யார் இருந்தாலும் எதுவும் மக்களுக்கு நடைபெற வாய்ப்பில்லையே. ஆக மக்கள் ஏன் இதற்காக தத்தமது வேலைகளையும் தொழில்களையும் விட்டு இப்பிரச்சினையை பூதாகரமாக்க வேண்டும். இதன் பிரதான வெளிப்பாடே ஹர்த்தால் என்ற ஒன்றை மக்கள் தங்களின் கருத்துக்கு எடுக்காதமையாகும். அத்தோடு யாரை யார் கட்சியில் இருந்து நீக்கவேண்டும் நீக்கக்கூடாது என்ற ஒரு தகுதி அதன் தலைமைத்துவத்திற்கு இருக்க வேண்டும். ஆனால் அந்த தகுதியான தலைமைத்துவம் குறிப்பிட்ட இந்தக் கட்சியில் உள்ளதா என்பதை சற்;று நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.

முன்னாள் மேயரின் அரசியல் பசிக்கு கட்சி இடம் கொடுக்காது என்ற கருத்தைக் கூறுகின்ற தலைவர் தனது கடந்த கால செயற்பாடுகளை முன்னிறுத்திப்பார்க்க வேண்டும். இதைத்;தானோ எங்கள் ஊரில் சொல்லுவார்கள் ஒரு பழமொழி ஒன்று.. நஜீஸைப் பற்றி நாய் பேசுகிறது என்று. ஆக தனது வாயினிலே சிகரற்றைப் பற்ற வைத்துக்கொண்டு மற்றவர்களை புகை பிடிக்கக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம். சற்று மனச்சாட்சியுடன் நடக்கின்ற எந்த ஒரு அரசியல்வாதியாவது இவ்வாறான வார்த்தைகளை பிரயோகித்திருந்தால் மக்கள் மனது ஏற்றுக்கொள்ளும். தலைவரின் கடந்தகால செயற்பாடுகளை மக்கள் இன்னும் மறக்கவில்லை என்பதை தலைவர் ஞாபகம் வைத்திருப்பது எதிர்கால சுய சபீட்சத்துக்கு வழி வகுக்கும்.

அடுத்தவிடயம் யாதெனில் பாதி கதிரையை தாவெனக் கேட்கின்றவருக்கு அக்கதிரை யாருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்ற ஓர் தெளிவான சிந்தனை உள்ளதா எனப் பார்த்தால் அதில் அவ்வகையான எவ்வித சமூக சிந்தனைகளையும் காணக்கிடைக்கவில்லை. ஏதோ கடைவீதிகளில் பார்வைக்காக பொம்மைகளை வைத்திருப்பது போன்று வைப்பதற்கு மக்களுக்கு எவ்வித பொம்மைகளும் தேவையில்லை. அத்தோடு கல்முனை மேயர் பொறுப்பை கொழும்பில் இருந்து இயக்குவது முடியாத ஓர் காரியம். அடுத்தடு;த்த வருடங்களில் வேண்டுமென்றால் கொழும்பு மாநகர சபைக்கு வாக்கு கேட்டு நிற்கட்டும் எமக்கு அந்த நாற்காலி வெறுமையாகவிருப்பதும் ஒன்றுதான் அதனை சூடாக்குவதும் ஒன்றுதான்.

எனவே பொதுமக்களில் ஒருவனாக கேட்பது என்னவென்றால் அரசியல்வாதிகளே! உங்களின் சுய நலன்களுக்காக நீங்களும் உங்கள் அடிவருடிகளும் வேண்டுமென்றால் சண்டையிட்டுக்கொள்ளுங்கள் ஒற்றுமையாக வாழகின்ற சகோதரங்களை எதிரியாக்கி அதன் சூட்டில் நீங்கள் குளிர்காய முற்பட்டால் இறைவனுக்கும் இது பொறுக்காது. எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் என் சகோதரங்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால் எமது சுயஉரிமையை எம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலமே வென்றெடுக்க முடியுமே தவிர கதிரைக்குச் சண்டையிடும் அரசியல்வாதிகள் என்ற பெயரில் உள்ளவர்களாலேயோ அல்லது அதற்குத் தீர்வு வழங்க முற்படுகின்ற தலைவர்கள் என்ற வேடம்தாங்கியவர்களாலேயோ முடியாது என்பதை இவ் ஜப்னா இணையத்தளம் மூலம் வெளிக்கொணர்வதற்கு கடமைப்பட்டுள்ளேன். மீண்டுமொரு கட்டுரையில் உங்களை சந்திக்கின்றேன். அனைவருக்கும் இறைவனின் சாந்தியூம் சமாதானமும் உண்டாவதாக..

@Jafna Muslim

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


site counter